மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 3 புதிய மினி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

அதிக சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட 3 புதிய கார் மாடல்களை மினி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 3 புதிய மினி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

இந்தியாவின் பிரிமீயம் கார் மார்க்கெட்டில் மினி நிறுவனத்தின் தனித்துவமான கார் மாடல்களுக்கு சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பணக்காரர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அடக்கமான தோற்றத்தில், அதிக செயல்திறன் கொண்ட மினி சொகுசு கார்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகிறது.

 மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 3 புதிய மினி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

2021 மினி கார் மாடல்கள்

இந்த நிலையில், மினி கார் நிறுவனம் அதிக சிறப்பம்சங்களுடன் தனது 2021 ரக மினி மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மினி 3 டோர் ஹேட்ச்பேக், மினி கன்வெர்ட்டிபிள் மற்றும் மினி ஜான் கூப்பர் ஆகிய மூன்று மாடல்களில் வந்துள்ளன. கூடுதல் சிறப்பம்சங்களுடன் 2021ம் ஆண்டு மாடல்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

 மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 3 புதிய மினி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

இந்த மூன்று புதிய மினி கார் மாடல்களும் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைக்கும். இவை முழுவதுமாக கட்டமைக்கப்ப்ட நிலையில், இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும். நாடுமுழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மினி கார் டீலர்கள் மற்றும் ஆன்லைன் நிலையங்கள் மூலமாக புக்கிங் செய்ய முடியும்.

 மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 3 புதிய மினி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய மினி 3 டோர், மினி கன்வெர்ட்டிபிள் ஆகிய கார்கள் ரூஃப்டாப் க்ரே மெட்டாலிக், ஐலேண்ட் புளூ மெட்டாலிக், எனிக்மேட்டிக் பிளாக் மற்றும் ஸெஸ்ட்டி யெல்லோ(மினி கன்வெர்ட்டிபிள் மாடலில் மட்டும்) ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். பியானோ பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ண மாடலில் கைப்பிடிகள், எரிபொருள் டேங்க் மூடி, பானட்டில் மினி லோகோ மற்றும் லக்கேஜ் கம்பார்ட்மென்ட் ஆகியவை கருப்பு வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.

 மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 3 புதிய மினி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய மினி கார்களில் 17 அங்குல லைட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய மினி ஜான் கூப்பர் மாடலில் 18 அங்குல ஜாப் கூப்பர் ஒர்க்ஸ் ஸ்போக் டியூவல் டோன் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

 மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 3 புதிய மினி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

எஞ்சின் & கியர்பாக்ஸ் விபரம்

புதிய மினி 3 டோர் ஹேட்ச்பேக் கார் மாடலிலும், கன்வெர்ட்டிபிள் மாடலிலும் 2 லிட்டர் ட்வின்பவர் டர்போ தொழில்நுட்பம் கொண்ட பெட்ரோல் எஞ்சின்பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 189 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. மினி 3 டோர் ஹேட்ச்பேக் மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 6.7 வினாடிகளிலும், கன்வெர்ட்டிபிள் மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 7.1 வினாடிகளில் எட்டிவிடும்.

 மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 3 புதிய மினி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

இந்த புதிய மினி கார் மாடல்களில் பெரிய க்ரில் அமைப்பு, பம்பரில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள், புதிய பம்பர் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்டீயரிங் வீல், 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடிய ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 3 புதிய மினி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

2021 மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ்

புதிய மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் மாடலில் புதிய க்ரில் அமைப்பு, காற்று புகும் அமைப்புடன் கூடிய அப்ரான் முகப்பு பகுதி, 17 அங்குல அலாய் வீல்கள், ஆப்ஷனலாக டியூவல் டோன் 18 அங்குல அலாய் வீல்கள் ஆகியவற்றுடன் வந்துள்ளது.

 மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 3 புதிய மினி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

வசதிகள்

இந்த மாடலில் டிரைவிங் மோடுகள், க்ரூஸ் கன்ட்ரோல், பார்க் அசிஸ்டென்ட், ரியர் வியூ கேமரா மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. நேவிகேஷன் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஆப்பிள் கார் ப்ளே, ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், எல்இடி இன்டீரியர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், புதிய ஸ்போர்ட் மோடுகளும் இடம்பெற்றுள்ளன.

 மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 3 புதிய மினி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

எஞ்சின் விபரம்

புதிய ஜான் கூப்பர் ஒர்க்ஸ் மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 228 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

 மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 3 புதிய மினி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

விலை விபரம்

புதிய மினி 3 டோர் ஹேட்ச்பேக் மாடலுக்கு ரூ.38 லட்சமும், மினி கன்வெர்ட்டிபிள் மாடல் ரூ.44 லட்சமும், மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் மாடலுக்கு ரூ.45.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #மினி #mini
English summary
Mini has launched the new 3-Door, Convertible & Jhon Cooper Works car models in India and starting at Rs.38 Lakh (Ex.showroom).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X