ஆற்றல்மிக்க பிஎம்டபிள்யூ ‘எம்’ கார் விற்பனைக்கு தயார்!! இந்தியாவில் அறிமுகமாக வாய்பிருக்கா?

பிஎம்டபிள்யூ நிறுவனம் எம்5 சிஎஸ் காரை உலகளவில் வெளியிட்டுள்ளது. இந்த பிஎம்டபிள்யூ காரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆற்றல்மிக்க பிஎம்டபிள்யூ ‘எம்’ கார் விற்பனைக்கு தயார்!! இந்தியாவில் அறிமுகமாக வாய்பிருக்கா?

எம்5 காம்பெடிஷனை அடிப்படையாக கொண்ட புதிய ‘சிஎஸ்' வெர்சன் கூடுதல் ஆற்றல் உடன் குறைவான எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 4.4 லிட்டர் இரட்டை-டர்போ வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஆற்றல்மிக்க பிஎம்டபிள்யூ ‘எம்’ கார் விற்பனைக்கு தயார்!! இந்தியாவில் அறிமுகமாக வாய்பிருக்கா?

அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-ல் 635 பிஎஸ் பவர் மற்றும் 5,950 ஆர்பிஎம்-ல் 750 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ வி8 என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் எம் எக்ஸ்ட்ரைவ் அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டம் இணைக்கப்படுகிறது.

ஆற்றல்மிக்க பிஎம்டபிள்யூ ‘எம்’ கார் விற்பனைக்கு தயார்!! இந்தியாவில் அறிமுகமாக வாய்பிருக்கா?

0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிக்கூடிய பிஎம்டபிள்யூ எம்5 சிஎஸ் காரை 200kmph வேகத்தை 10.4 வினாடிகளில் எட்டிவிடும். இவ்வளவு வேகமாக 200kmph வேகத்தை வேறெந்த பிஎம்டபிள்யூ எம் காரும் தற்போதைக்கு எட்டுவதில்லை.

ஆற்றல்மிக்க பிஎம்டபிள்யூ ‘எம்’ கார் விற்பனைக்கு தயார்!! இந்தியாவில் அறிமுகமாக வாய்பிருக்கா?

எம்5 சிஎஸ் காரின் அதிகப்பட்ச வேகம் 300kmph ஆகும். இதன் என்ஜின் அமைப்பில் ரீடிசைனில் ஆயில் பான், கூடுதலாக சம்ப் உடன் ஏற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த பிஎம்டபிள்யூ காரின் 20 இன்ச் சக்கரங்களில் 275/35 மற்றும் 235/35 என்ற அளவுகளில் பைரெல்லி பி ஜீரோ கோர்சாஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆற்றல்மிக்க பிஎம்டபிள்யூ ‘எம்’ கார் விற்பனைக்கு தயார்!! இந்தியாவில் அறிமுகமாக வாய்பிருக்கா?

ஹேண்டிலிங்கை மேம்படுத்தும் வகையில் இந்த காரில் சஸ்பென்ஷன் சிஸ்டம் எம்8 க்ரான் கூபே காம்பெடிஷனில் இருந்து பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. எம் கார்பன்-செராமிக் ப்ரேக்குகள் முன்பக்கத்தில் 6-பிஸ்டன் காலிபர்களுடனும், பின்பக்கத்தில் சிங்கிள்-பிஸ்டன் காலிபர் உடனும் வழங்கப்பட்டுள்ளது.

ஆற்றல்மிக்க பிஎம்டபிள்யூ ‘எம்’ கார் விற்பனைக்கு தயார்!! இந்தியாவில் அறிமுகமாக வாய்பிருக்கா?

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த காரின் தயாரிப்பிற்கு வலுவூட்டப்பட்ட கார்பன்ஃபைஃபரை பயன்படுத்தியுள்ளது. இதனால் முன்பக்க பிரிப்பான், பின்பக்க ஸ்பாய்லர், கண்ணாடி மூடிகள், பின்பக்க டிஃப்யூஸர் உள்பட உட்புற நான்கு பக்கெட் இருக்கைகள் கூட கார்பன் ஃபைரால் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஆற்றல்மிக்க பிஎம்டபிள்யூ ‘எம்’ கார் விற்பனைக்கு தயார்!! இந்தியாவில் அறிமுகமாக வாய்பிருக்கா?

இதன் காரணமாக எம்5 காம்பெடிஷனை காட்டிலும் எம்5 சிஎஸ் கார் 70 கிலோ வரையில் குறைவான எடையை பெற்றுள்ளது. இது காரின் செயல்திறன் மற்றும் மேம்பட்ட ஹேண்ட்லிங்கிற்கு உதவியாக இருக்கும். காரில் வழங்கப்பட்டுள்ள மற்ற அம்சங்களாக லேசர்விளக்கு ஹெட்லேம்ப்கள் (மஞ்சள் L-வடிவ எல்இடிகளுடன்), குவாட் டெயில்குழாய்களுடன் வளையாத இரும்பினால் செய்யப்பட்ட எக்ஸாஸ்ட் அமைப்பு உள்ளன.

ஆற்றல்மிக்க பிஎம்டபிள்யூ ‘எம்’ கார் விற்பனைக்கு தயார்!! இந்தியாவில் அறிமுகமாக வாய்பிருக்கா?

இவற்றுடன் 12.3 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், விர்டியுவல் காக்பிட், கார்பன் ஃபைபர் பெடல் ஷிஃப்டர்ஸ் உடன் எம் அல்காண்ட்ரா ஸ்டேரிங் சக்கரம் மற்றும் அல்காண்ட்ரா ஹெட்லைனர் போன்றவையும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. க்ரில் அமைப்பு தங்க நிற அலுமினியத்தால் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

ஆற்றல்மிக்க பிஎம்டபிள்யூ ‘எம்’ கார் விற்பனைக்கு தயார்!! இந்தியாவில் அறிமுகமாக வாய்பிருக்கா?

குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ள பிஎம்டபிள்யூ எம்5 சிஎஸ் காரின் ஆரம்ப விலை ஐரோப்பாவில் 180,400 யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் விற்பனையை துவங்கவுள்ள இந்த பிஎம்டபிள்யூ கார் இந்தியாவில் விற்பனைக்கு வர வாய்ப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

Most Read Articles
English summary
BMW M5 CS Debuts As The Most Powerful ‘M’ Car With 635 PS
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X