புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த 7 முக்கிய விஷயங்கள்

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் செடான் கார்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வந்துள்ளது. இந்த காரை வாங்க திட்டமிட்டிருப்போருக்கு ஏதுவாக, இந்த காரின் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த 7 முக்கிய விஷயங்கள்

பரிமாணம்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் 4,689 மிமீ நீளமும், 1,469 மிமீ உரமும், 1,829 மிமீ அகலமும் கொண்டது. இந்த காரின் வீல்பேஸ் நீளம் 2,680 மிமீ ஆகவ உள்ளது. பழைய மாடலைவிட ஒப்பிடும்போது நீளத்தில் 19 மிமீ வரையிலும், அகலத்தில் 15 மிமீ வரையிலும் அதிகரித்துள்ளது. இதனால், உட்புற இடவசதி மிக சிறப்பாக மேம்பட்டு இருக்கிறது. 600 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. பின் இருக்கையை மடக்கினால் 1,555 லிட்டர் கொள்திறன் கொண்டதாக மாற்ற முடியும்.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த 7 முக்கிய விஷயங்கள்

வெளிப்புற அம்சங்கள்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் பை எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டைனமிக் இன்டிகேட்டர்கள் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த 7 முக்கிய விஷயங்கள்

ஸ்கோடாவின் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் புதிய க்ரில் அமைப்பு, பம்பர் மிகவும் கூர்மையான டிசைன் அம்சங்களுடன் கவர்க்கிறது. மேலும், 17 அங்குல அலாய் சக்கரங்கள், பின்புற பூட் ரூமின் வெளிப்புறத்தில் ஸ்கோடா பெயர் பதிக்கப்பட்டு இருப்பதும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. விலை உயர்ந்த எல் அண்ட் கே வேரியண்ட்டில் விசேஷ அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த 7 முக்கிய விஷயங்கள்

இன்டீரியர்

இந்த காரின் உட்புறத்தில் பீஜ் வண்ண பிரிமீயம் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் க்ரோம் அலங்கார பாகங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. டேஷ்போர்டு அமைப்பு மிகவும் நேர்த்தியாகவும், பல படிகள் கொண்ட அமைப்பாகவும் இருக்கிறது. பேடில் ஷிஃப்ட்டர்களுடன் ஸ்டீயரிங் வீல் உள்ளது. ஸ்டீயரிங் வீலுக்கு லெதர் கவர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த 7 முக்கிய விஷயங்கள்

இந்த காரில் 10 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், 12 ஸ்பீக்கர்கள், சப் ஊஃபர் கொண்ட மியூசிக் சிஸ்டம், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் கனெக்ட்டிவிட்டி வசதிகளும் உள்ளன.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த 7 முக்கிய விஷயங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் 8 ஏர்பேக்குகள், டிரைவர் அயர்ந்து போவதை எச்சரிக்கும் வசதி, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் லாக்கிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் பார்க் அசிஸ்ட் உள்ளிட்ட எக்கச்சக்கமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த 7 முக்கிய விஷயங்கள்

எஞ்சின் விபரம்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் வந்துள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 6.9 வினாடிகளில் எட்டிவிடும். லிட்டருக்கு 15.81 கிமீ மைலேஜ் வழங்கும் என்று அராய் சான்று தெரிவிக்கிறது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த 7 முக்கிய விஷயங்கள்

வண்ணத் தேர்வுகள்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் லாவா புளூ, கேண்டி ஒயிட், மேஜிக் பிளாக், பிரில்லியண்ட் சில்வர் மற்றும் மேப்பிள் பிரவுன் ஆகிய 5 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இதில், மேப்பிள் பிரவுன் மற்றும் பிர்ரிலியண்ட் சில்வர் ஆகிய வண்ணத் தேர்வுகள் டாப் வேரியண்ட்டில் மட்டுமே பெற முடியும்.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த 7 முக்கிய விஷயங்கள்

வேரியண்ட்டுகள் மற்றும் விலை விபரம்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் ஸ்டைல் மற்றும் எல் அண்ட் கே ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ஸ்டைல் வேரியண்ட்டிற்கு ரூ.25.99 லட்சமும், எல் அண்ட் கே வேரியண்ட்டிற்கு ரூ.28.99 லட்சமும் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. எல் அண்ட் கே வேரியண்ட் கூடுதல் அலங்கார அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் அதிக மதிப்பை பெறுகிறது. ஆனால், இரண்டு வேரியண்ட்டுகளிலும் சன் ரூஃப் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த சகல விஷயங்களையும் தெரிந்து கொள்வதற்கு எமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டைக்ளிக் செய்து படியுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
New Skoda Octavia: All you need to know. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X