புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

செடான் கார் பிரியர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2021 Skoda Octavia: புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

வேரியண்ட்டுகள் விபரம்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் ஸ்டைல் மற்றும் எல் அண்ட் கே என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதில், ஸ்டைல் வேரியண்ட் விலை குறைவான தேர்வாகவும், எல் அண்ட் கே வேரியண்ட் பல்வேறு கூடுதல் சிறப்பம்சஙகளுடன் டாப் வேரியண்ட்டாகவும் இருக்கிறது. இரண்டு வேரியண்ட்டிலும் இடம்பெற்றிருக்கும் வசதிகள் விபரத்தை தொடர்ந்து பார்க்கலாம்.

2021 Skoda Octavia: புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய ஆக்டேவியா ஸ்டைல் வேரியண்ட்

புதிய ஆக்டேவியா காரின் ஸ்டைல் வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட்டுகள், படூல் லைட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள், பீஜ் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், முன்வரிசையில் அட்ஜெஸ்ட் வசதியுடன் சென்டர் ஆர்ம் ரெஸ்ட், கப் ஹோல்டர்களுடன் ரியர் ஆர்ம் ரெஸ்ட், லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் ஆகியவை உள்ளன.

2021 Skoda Octavia: புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

தவிரவும், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்களுடன் மியூசிக் சிஸ்டம், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், இரண்டு டைப் - சி யுஎஸ்பி சார்ஜர்கள், கூல்டு க்ளவ் பாக்ஸ் ஆகியவை உள்ளன.

2021 Skoda Octavia: புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய ஆக்டேவியா காரின் ஸ்டைல் வேரியண்ட்டில் முன்புற இருக்கை பயணிகளுக்கு சீட் பெல்ட் ரிமைன்டர் வசதி, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், பார்க் டிஸ்டன்ஸ் கன்ட்ரோல், இரண்டு முன்புற ஏர்பேக்குகள், கர்டெயின் ஏர்பேக்குகள், சைடு ஏர்பேக்குகள், ஓட்டுனர் இருக்கையை 12 விதமான நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் மெமரி வசதி, சென்சார்கள் மூலமாக கியர் மாற்றம் நிகழ்வதற்கான ஷிஃப்ட் பை ஒயர் தொழில்நுட்பம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு ஃபங்ஷன் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

2021 Skoda Octavia: புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய ஆக்டேவியா எல் அண்ட் கே வேரியண்ட் வசதிகள்

மேற்கண்ட வசதிகள் தவிர்த்து, கூடுதலாக சில முக்கிய அம்சங்களை இந்த வேரியண்ட் பெற்றுள்ளது. இந்த வேரியண்ட்டில் அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்டுகள், அலுமினியம் பெடல்கள், பின்புற பயணிகளுக்கு சைடு ஏர்பேக்குகள், ஓட்டுனர் அயர்ந்து போவது குறித்து எச்சரிக்கும் வசதி, 11 ஸ்பீக்கர்களுடன் கேன்டன் மியூசிக் சிஸ்டம், பின்புற ஜன்னல்கள், விண்ட் ஸ்க்ரீனுக்கு சன் வைசர்கள், வயர்லெஸ் சார்ஜர்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

2021 Skoda Octavia: புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

எஞ்சின் & கியர்பாக்ஸ் விபரம்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு கொடுக்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

2021 Skoda Octavia: புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

வண்ணத் தேர்வுகள்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் லாவா புளூ, மேஜிக் பிளாக், கேண்டி ஒயிட், பிரில்லியண்ட் சில்வர் மற்றும் மேப்பிள் பிரவுன் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

2021 Skoda Octavia: புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

விலை விபரம்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் ஸ்டைல் வேரியண்ட் ரூ.25.99 லட்சத்திலும், எல் அண்ட் கே வேரியண்ட் ரூ.28.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. போதுமான வசதிகள், பாதுகாப்பு அம்சங்களில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் இந்த காரின் டாப் வேரியண்ட்டில் சன்ரூஃப் இல்லாததுதான் மிகப்பெரிய குறையாக போய்விட்டது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
2021 Skoda Octavia: Variants wise features explained. Read in Tamil.
Story first published: Friday, June 11, 2021, 16:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X