9ஆம் தலைமுறை சுஸுகி ஆல்டோ ஜப்பானில் வெளியீடு!! புதியதாக இத்தனை அப்டேட்களா!

ஒன்பதாம் தலைமுறை சுஸுகி ஆக்டோ கீ கார் சமீபத்தில் ஜப்பான் நாட்டு சந்தையில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உள்பட நம் நாட்டு அண்டை நாட்டு சந்தைகள் சிலவற்றிலும் விற்பனையில் உள்ள ஆல்டோ கீ மாடலின் இந்த புதிய தலைமுறை குறித்து முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

9ஆம் தலைமுறை சுஸுகி ஆல்டோ ஜப்பானில் வெளியீடு!! புதியதாக இத்தனை அப்டேட்களா!

ஆல்டோ, நம் இந்திய சந்தையில் மாதந்தோறும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் மாருதி சுஸுகி கார்களுள் ஒன்று. ஆனால் இதனையும், ஜப்பானில் விற்பனையாகும் ஆல்டோ கீ காரையும் ஒன்றாக நினைத்துவிட வேண்டாம். ஏனெனில் பெயரை தவிர்த்து, இவை இரண்டும் முற்றிலும் மாறுப்பட்டவைகளாகும்.

9ஆம் தலைமுறை சுஸுகி ஆல்டோ ஜப்பானில் வெளியீடு!! புதியதாக இத்தனை அப்டேட்களா!

இந்திய சுஸுகி ஆல்டோவிற்கும், பாகிஸ்தானின் ஆல்டோவிற்கும் இடையே அதிகளவில் வித்தியாசங்கள் உள்ளதாக ஏற்கனவே நமது செய்திதளத்தில் கூட தெரிவித்திருந்தோம். சரி ஒன்பதாம் தலைமுறை ஆல்டோ கீ காருக்கு வருவோம். இது அதன் முந்தைய எட்டாம் தலைமுறையில் இருந்து வழக்கமான பெட்டக வடிவத்தை அப்படியே தொடர்ந்துள்ளது.

9ஆம் தலைமுறை சுஸுகி ஆல்டோ ஜப்பானில் வெளியீடு!! புதியதாக இத்தனை அப்டேட்களா!

ஜப்பானில் எட்டாம் தலைமுறை சுஸுகி ஆல்டோ கீ மாடல் சுமார் 7 வருடங்களுக்கு முன்பு 2014இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இருந்து இந்த சுஸுகி காருக்கு அந்த நாட்டில் கிடைத்துவரும் வரவேற்பினை பற்றி அறியலாம். பெட்டக வடிவத்தை அப்படியே தொடர்ந்திருந்தாலும், புதிய தலைமுறை ஆல்டோ கீ காரில் முனைகள் சற்று மொக்கையாக்கப்பட்டுள்ளன.

9ஆம் தலைமுறை சுஸுகி ஆல்டோ ஜப்பானில் வெளியீடு!! புதியதாக இத்தனை அப்டேட்களா!

இதனால் முன்பை காட்டிலும் ஆல்டோ கீ மாடல் சற்று கூடுதல் வட்ட வடிவிலானதாக மாறியுள்ளது. முன்பக்கத்தில் சரிவகம் வடிவத்தில் ஹெட்லைட் குழிகளை முந்தைய தலைமுறையில் அப்படியே பெற்றுள்ளது. இருப்பினும் உள்ளே விளக்கு பாகங்கள் அனைத்தும் புதியவை. அதேபோல் பம்பர், க்ரில் மற்றும் பொனெட் உள்ளிட்டவை அனைத்தின் முனைகளும், ஏற்கனவே கூறியதுபோல் கூர்மையான தோற்றத்தை இழந்துள்ளன.

9ஆம் தலைமுறை சுஸுகி ஆல்டோ ஜப்பானில் வெளியீடு!! புதியதாக இத்தனை அப்டேட்களா!

இது தெளிவாக முந்தைய தலைமுறையில் இருந்து புதிய தலைமுறை ஆல்டோ கீ காரினை வேறுப்படுத்தி காட்டுகிறது. பக்கவாட்டில் நிமிர்ந்த ஏ-பில்லர் மற்றும் பெரிய ஜன்னல் கண்ணாடிகள் உடன் கார் சற்று கூடுதல் உயரமாக்கப்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். முனைகள் அனைத்தும் மொக்கையாக்கப்பட்ட போதிலும், ஆல்டோ கீ கார் இன்னமும் பெட்டகம் வடிவில் காட்சி தருவதற்கு உண்மையில் இவை தான் காரணங்களாக விளங்குகின்றன.

9ஆம் தலைமுறை சுஸுகி ஆல்டோ ஜப்பானில் வெளியீடு!! புதியதாக இத்தனை அப்டேட்களா!

பின்பக்கத்தில் கதவு, பம்பர்கள் மற்றும் நிமிர்ந்த டெயில்லைட்கள் உள்ளிட்டவை புதியவைகளாக காட்சி தருகின்றன. ஒட்டு மொத்தமாக சுஸுகி ஆல்டோ கீ கார் தனது முரட்டுத்தனமான தோற்றத்தில் இருந்து இறங்கியுள்ளது. இதன் விளைவாக ஆல்டோ கீ மாடலின் ரெட்ரோ ஸ்டைலும் சற்று மறைந்துள்ளது. புதிய ஆல்டோ கீ காருக்கு வழங்கப்பட்டுள்ள இரட்டை-நிற பெயிண்ட் அருமையாக உள்ளதை பதிவு செய்தே ஆக வேண்டும்.

9ஆம் தலைமுறை சுஸுகி ஆல்டோ ஜப்பானில் வெளியீடு!! புதியதாக இத்தனை அப்டேட்களா!

உட்புறத்தில் டேஸ்போர்டு ரீடிசைனில் அடுக்கு வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதன் டேஸ்போர்டில் சில நிறங்களையும் பார்க்க முடிகிறது. ஏசி துளைகளின் செயல்பாட்டிலும் சரி, பொசிஷனிலும் சரி எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் புதிய ஸ்டேரிங் சக்கரம், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்ட புதிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவற்றை புதிய ஆல்டோ கீ பெற்றுள்ளது.

9ஆம் தலைமுறை சுஸுகி ஆல்டோ ஜப்பானில் வெளியீடு!! புதியதாக இத்தனை அப்டேட்களா!

ஒரே துண்டாக இருக்கைகள் முன்பக்கத்தில் வழங்கப்பட்டிருக்க, பின்பக்கத்தில் மேசை ஸ்டைலில் இருக்கை வரிசை கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் முந்தைய தலைமுறையை போல் தலையணையை தேவைக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்யலாம். ஒன்பதாம் தலைமுறை ஆல்டோ கீ காரில் மிக முக்கிய அம்சமாக சுஸுகி பாதுகாப்பு உதவியின் கீழ் ஆக்டிவ் ஓட்டுனர் உதவி தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

9ஆம் தலைமுறை சுஸுகி ஆல்டோ ஜப்பானில் வெளியீடு!! புதியதாக இத்தனை அப்டேட்களா!

இந்த தொழிற்நுட்ப அம்சங்களில், ஓரே பாதையை வாகனம் கடைப்பிடிக்க நிர்பந்திக்கும் வசதி, அதி-பீம் உதவி மற்றும் பாதசாரிகளை அடையாளும் காணும் நுட்பம் & முன்பக்கமாக வாகனம் மோதலுக்கு உள்ளாகுவதை தடுக்கும் நுட்பத்துடன் தானியங்கி அவசரகால ப்ரேக்கிங் (AEB) உள்ளிட்டவை அடங்குகின்றன. இயக்க ஆற்றலை வழங்க, புதிய ஆல்டோ கீ காரிலும் வழக்கமான 660சிசி, 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினே பொருத்தப்பட்டுள்ளது.

9ஆம் தலைமுறை சுஸுகி ஆல்டோ ஜப்பானில் வெளியீடு!! புதியதாக இத்தனை அப்டேட்களா!

ஆனால் இம்முறை இந்த என்ஜின் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டார்டட் ஜெனரேட்டர் மற்றும் ஆற்றலை சேமித்து வைக்க சிறிய லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு உடன் மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தனை விபரங்களை வெளியிட்ட சுஸுகி நிறுவனம் மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக எத்தகைய ஆற்றல் வரையில் வெளிப்படுத்தும் என்பதை தெரிவிக்கவில்லை.

9ஆம் தலைமுறை சுஸுகி ஆல்டோ ஜப்பானில் வெளியீடு!! புதியதாக இத்தனை அப்டேட்களா!

அதேபோல் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் குறித்தும் விபரங்கள் இல்லை. முந்தைய தலைமுறை ஆல்டோ கீ காரில் இருந்து 5-ஸ்பீடு மேனுவல் & ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையை பொறுத்தவரையில், அடுத்த தலைமுறை ஆல்டோ ஹேட்ச்பேக் காரின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட மாருதி சுஸுகி ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. இதன் அறிமுகத்தை அடுத்த ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

மேலும்... #சுஸுகி #suzuki
English summary
2022 Suzuki Alto kei car unveiled in Japan.
Story first published: Tuesday, November 30, 2021, 23:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X