சிஎன்ஜி தேர்வில் கொண்டுவரப்படுகிறதா டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்? புனேவில் சோதனை ஓட்டம்!!

டாடா அல்ட்ராஸின் சோதனை மாதிரி ஒன்று புனேவுக்கு அருகே முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றவுள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சிஎன்ஜி தேர்வில் கொண்டுவரப்படுகிறதா டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்? புனேவில் சோதனை ஓட்டம்!!

எரிபொருள்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்க, மத்திய அரசாங்கத்தின் மின்சார இயக்கம் நோக்கிய நடவடிக்கைகளும் ஆட்டோமொபைல் நிறுவனங்களை வழக்கமான எரிபொருள்களில் இருந்து மாற்று எரிபொருள்களை நோக்கி இழுத்து செல்கின்றன.

சிஎன்ஜி தேர்வில் கொண்டுவரப்படுகிறதா டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்? புனேவில் சோதனை ஓட்டம்!!

இதில் பிரதான மாற்று ஆற்றல் மூலமாக எலக்ட்ரிக்கை பெரும்பான்மையான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தேர்வு செய்துள்ளன. இருப்பினும் சில நிறுவனங்கள் சிஎன்ஜி என மாற்று வழிகளையும் யோசித்து வருகின்றன. அத்தைகைய நிறுவனங்களுள் ஒன்று டாடா மோட்டார்ஸ்.

சிஎன்ஜி தேர்வில் கொண்டுவரப்படுகிறதா டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்? புனேவில் சோதனை ஓட்டம்!!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் விரைவில் அதன் சிஎன்ஜி கார்களின் வரிசையை விரிவுப்படுத்த தயாராகி வருகிறது. இந்த வகையில் டாடா முதலாவதாக அறிமுகப்படுத்தவுள்ளதாக நாம் எதிர்பார்க்கும் மாடல் அல்ட்ராஸ் சிஎன்ஜி. ஏனெனில் இதுதான் சமீப மாதங்களாக தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

சிஎன்ஜி தேர்வில் கொண்டுவரப்படுகிறதா டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்? புனேவில் சோதனை ஓட்டம்!!

Image Courtesy: Sacheendranath D/Rushlane Spylane

இந்த நிலையில் தற்போது மீண்டும் அல்ட்ராஸின் சோதனை மாதிரி ஒன்று முழுக்க மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸின் பிரீமியம் ரக ஹேட்ச்பேக் காராக விளங்கும் அல்ட்ராஸின் இந்த சோதனை ஓட்டத்திற்கு காரணம், இந்த ஹேட்ச்பேக் மாடல் புதியதாக சிஎன்ஜி வேரியண்ட்டில் கொண்டுவரப்படலாம் அல்லது முழுவதும் எலக்ட்ரிக் வெர்சனிலும் விற்பனைக்கு வரலாம்.

சிஎன்ஜி தேர்வில் கொண்டுவரப்படுகிறதா டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்? புனேவில் சோதனை ஓட்டம்!!

ஆனால் சிஎன்ஜி வேரியண்ட்டிற்காகவே இந்த சோதனை ஓட்டம் இருக்கும் என நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்கள் ரஷ்லேன் செய்திதளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன. கார் முழுவதும் மறைக்கப்பட்டுள்ளதால், அல்ட்ராஸ் சிஎன்ஜி காரின் தோற்றத்தில் ஏதேனும் மாற்றங்களை டாடா நிறுவனம் கொண்டுவந்துள்ளதா என்பதை அறிய முடியவில்லை.

சிஎன்ஜி தேர்வில் கொண்டுவரப்படுகிறதா டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்? புனேவில் சோதனை ஓட்டம்!!

இந்த சோதனை ஓட்டம் புனேவுக்கு அருகே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம் சோதனை காரின் பின்பக்கத்தை மட்டுமே பார்க்க முடிகிறது. இருப்பினும் அதனையும் தாண்டி காரின் கேபினையும் ஓரளவிற்கு பார்க்க முடிகிறது. உட்புறம் வழக்கமான அல்ட்ராஸ் பெட்ரோல் & டீசல் வேரியண்ட்களையே ஒத்து காணப்படுகிறது.

சிஎன்ஜி தேர்வில் கொண்டுவரப்படுகிறதா டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்? புனேவில் சோதனை ஓட்டம்!!

அதே வடிவில் டேஸ்போர்டு இந்த சோதனை காரிலும் வழங்கப்பட்டிருக்க, இருக்கைகளின் பொசிஷனிலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. இதனால் வழக்கமான 7.0 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஏசி துளைகள் தான் இந்த அல்ட்ராஸிலும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். டாடா அல்ட்ராஸின் உட்புறத்தில், மைய கன்சோல் பகுதியில் ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல், பாட்டில்களை வைக்கும் பகுதி மற்றும் கியர் தேர்ந்தெடுப்பான் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

சிஎன்ஜி தேர்வில் கொண்டுவரப்படுகிறதா டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்? புனேவில் சோதனை ஓட்டம்!!

அல்ட்ராஸில் வழங்கப்படும் மற்ற அம்சங்களாவன, செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், கேபினை சுற்றிலும் விளக்குகள், க்ரூஸ் கண்ட்ரோல், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஐஆர்ஏ இணைப்பு கார் தொழிற்நுட்பம் மற்றும் இரட்டை முன்பக்க காற்றுப்பைகள், ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான கொக்கி மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அடங்குகின்றன.

சிஎன்ஜி தேர்வில் கொண்டுவரப்படுகிறதா டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்? புனேவில் சோதனை ஓட்டம்!!

அல்ட்ராஸில் சிஎன்ஜி வேரியண்ட்கள் அதன் மத்திய எக்ஸ்டி ட்ரிம் நிலையின் அடிப்படையில் வழங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. விலை நிச்சயமாக அல்ட்ராஸ் பெட்ரோல் வேரியண்ட்டை காட்டிலும் ரூ.30,000 அளவில் அதிகமாக நிர்ணயிக்கப்படும் என்பது மட்டும் உறுதி. ஏனெனில் சிஎன்ஜி கார்களின் விலைகள் பொதுவாகவே பெட்ரோல் & டீசல் கார்களின் விலைகளுக்கு மத்தியில் நிர்ணயிக்கப்படுகின்றன.

சிஎன்ஜி தேர்வில் கொண்டுவரப்படுகிறதா டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்? புனேவில் சோதனை ஓட்டம்!!

அதேநேரம், அல்ட்ராஸின் எலக்ட்ரிக் வெர்சனாகவும் இந்த சோதனை மாதிரி இருக்கலாம் என்று கூறியதையும் மறந்துவிட வேண்டாம். ஏனெனில் அல்ட்ராஸ் எலக்ட்ரிக் பிரீமியம் ஹேட்ச்பேக் காரும் ஆரம்ப கட்ட வடிவமைப்பு பணிகளில் உள்ளது. அல்ட்ராஸ் எலக்ட்ரிக் தற்போதைக்கு ஆரம்பக்கட்ட தயாரிப்பில் உள்ளதால்தான், இந்த சோதனை மாதிரி சிஎன்ஜி வேரியண்ட்டாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்கிறோம்.

சிஎன்ஜி தேர்வில் கொண்டுவரப்படுகிறதா டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்? புனேவில் சோதனை ஓட்டம்!!

நெக்ஸான் இவி-ஐ போல் டாடா பிராண்டின் ஜிப்ட்ரான் பவர்ட்ரெயினை பெற்றுவரும் அல்ட்ராஸ் எலக்ட்ரிக் காரில் பெரிய அளவிலான பேட்டரி தொகுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அல்ட்ராஸ் இவி-யின் ரேஞ்சை ஏறக்குறைய 300கிமீ-களில் எதிர்பார்க்கிறோம். இருப்பினும் முதலாவதாக, அல்ட்ராஸ் சிஎன்ஜி அடுத்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. இந்த சிஎன்ஜி காரின் வருகை குறித்த எந்த அறிவிப்பையும் டாடா நிறுவனம் தற்போது வரையில் வெளியிடவில்லை.

Most Read Articles
English summary
New tata altroz spied testing electric or cng model details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X