அப்கிரேட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான், ஷோரூம்களை வந்தடைந்தது!!

அப்டேட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இது தொடர்பான படங்களை பற்றி இனி தொடர்ந்து பார்ப்போம்.

அப்கிரேட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான், ஷோரூம்களை வந்தடைந்தது!!

விற்பனை செய்யப்படும் கார்களில் அவ்வப்போது அப்கிரேட்களையும், மாற்றங்களையும் கொண்டுவரும் நிறுவனங்களுள் டாடா மோட்டார்ஸும் ஒன்று.

அப்கிரேட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான், ஷோரூம்களை வந்தடைந்தது!!

இந்த வகையில் நெக்ஸானில் சில மாற்றங்களை இந்த நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இந்த மாற்றங்கள் குறிப்பாக நெக்ஸானின் எக்ஸ்.இசட் வேரியண்ட்டில் இருந்து அதற்கு அடுத்துள்ள வேரியண்ட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

அப்கிரேட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான், ஷோரூம்களை வந்தடைந்தது!!

இந்த அப்கிரேட் என்னவென்றால், நெக்ஸானின் உட்புற இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கண்ட்ரோல் செய்ய முன்பு இயற்பியல் முறையில் அழுத்தக்கூடிய பொத்தான்கள் வழங்கப்பட்டு வந்தன.

அப்கிரேட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான், ஷோரூம்களை வந்தடைந்தது!!

ஆனால் இனி நெக்ஸானின் மேற்கூறிய வேரியண்ட்களில் இன்ஃபோடெயின்மெண்ட் திரையை தொடுதல் (டச்) மூலமாகவே செயல்படுத்த முடியும். பொத்தான்கள் மட்டுமின்றி இரு முனைகளிலும் வழங்கப்பட்ட சத்தத்தை அதிகப்படுத்துவது/ குறைப்பதற்கு மற்றும் ட்யூனருக்கான திருகல்களும் நீக்கப்பட்டுள்ளன.

அப்கிரேட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான், ஷோரூம்களை வந்தடைந்தது!!

இந்த வசதியினால் சில சவுகரியங்களும், அதேநேரம் சில அசவுகரியங்களும் உள்ளதாக ஏற்கனவே நமது தளத்தில் குறிப்பிட்டு இருந்தோம். அதாவது நெக்ஸானின் இன்ஃபோடெயின்மெண்ட் திரையில் ஐகான்கள் மிகவும் சிறியதாக கொடுக்கப்படுகின்றன.

அப்கிரேட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான், ஷோரூம்களை வந்தடைந்தது!!

அவற்றை கண்ட்ரோல் செய்வதற்கு பொத்தான் என்றால் பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் டச் என்றால் இயங்கும் சாலையில் இருந்து பார்வையை திரைக்கு திருப்பி செயல்படுத்த வேண்டியதாக இருக்கும்.

அப்கிரேட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான், ஷோரூம்களை வந்தடைந்தது!!

ஆனால் அதேநேரம் பொத்தான்கள் நீக்கப்பட்டதால் காரின் கேபின் மொத்தத்திற்கும் மாடர்ன் தோற்றம் கிடைத்துள்ளது என்பதும் உண்மையே. டீம் பிஎச்பி செய்திதளம் மூலம் கிடைத்துள்ள, டீலர்ஷிப்பிற்கு வந்துள்ள நெக்ஸானின் படங்களில், பொத்தான்கள் இருந்த இடத்தில் ‘NEXON' என்ற எழுத்துகள் உள்ளதை பார்க்கலாம்.

அப்கிரேட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான், ஷோரூம்களை வந்தடைந்தது!!

இதனுடன் ஏசி அமைப்பில் வழங்கப்பட்டு வந்த எக்கானமி மோட்-ஐயும் டாடா நிறுவனம் நீக்கியுள்ளது. ஏசி க்னாப்பின் இடதுபுறத்தில் எக்னாமி மோடிற்கான பொத்தான் இல்லை. இவை தவிர்த்து அப்டேட் செய்யப்பட்ட நெக்ஸானில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் இல்லை.

அப்கிரேட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான், ஷோரூம்களை வந்தடைந்தது!!

நெக்ஸானில் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் அதிகப்பட்சமாக 108 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

அப்கிரேட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான், ஷோரூம்களை வந்தடைந்தது!!

இவற்றுடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி காரின் விலைகள் தற்சமயம் ரூ.7.10 லட்சத்தில் இருந்து ரூ.12.80 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles

English summary
Updated Tata Nexon reaches dealerships; loses ECON AC mode. Read Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X