Just In
- 32 min ago
7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா? வெளியான புதிய தகவலால் எகிறிய எதிர்பார்ப்பு
- 44 min ago
இந்தியா மட்டும் இல்லைங்க, வெளிநாடுகளிலும் பஜாஜ் பல்சர் பைக்குகளுக்கு அமோக வரவேற்பு!!
- 1 hr ago
சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு 50,000 பேர் பதிவு: பஜாஜ் தகவல்!
- 1 hr ago
பட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!
Don't Miss!
- Sports
என்ன டீம் இது? இதை வைச்சுகிட்டு இந்தியாவை ஜெயிக்க முடியுமா? சிக்கலில் இங்கிலாந்து!
- Education
டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலூர் சிஎம்சி-யில் வேலை வாய்ப்பு!
- Finance
பட்டைய கிளப்பிய கோடக் மகேந்திரா வங்கி... ரூ.1854 கோடி லாபம்..!
- News
நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா... முதல்முறையாக அணிவகுப்பில் கலந்துகொள்ளும் வங்கதேச ராணுவம்
- Movies
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி!
- Lifestyle
குழந்தைகள் சுறுசுறுப்புடன் இருக்க செய்ய வேண்டிய சில யோகாசனங்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய சஃபாரி எஸ்யூவி உற்பத்தி துவங்கியது... படங்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட டாடா!
வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள டாடா சஃபாரி 7 சீட்டர் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்கள், அதிகாரப்பூர்வ படங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் 7 சீட்டர் மாடல்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் பொது பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. டாடா கிராவிட்டாஸ் என்ற பெயரில் பார்வைக்கு கொண்டு வரப்பட்ட இந்த எஸ்யூவி பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் என்பதால் தொடர்ந்து இந்த எஸ்யூவி குறித்த செய்திகள் அதிக கவனம் பெற்று வந்தன.

இந்த நிலையில், புத்தாண்டு பிறந்ததும், தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் விதத்தில் க்ராவிட்டாஸ் எஸ்யூவியை சஃபாரி என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்தது. இது இந்த எஸ்யூவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தது.

அதாவது, ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வந்த சஃபாரி வாடிக்கையாளர்களின் மனதை கொள்ளை கொண்ட மாடல். கடந்த தசாப்தத்திற்கு முன்னதாக, எஸ்யூவி கார் மாடல்கள் இந்தியாவில் குறைவாக இருந்த நேரத்தில் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக எஸ்யூவி தேர்வாக சஃபாரி பெயர் பெற்றிருந்தது.

வாடிக்கையாளர்களுக்கும், டாடா கார் பிராண்டை நேசிப்பவர்களுக்கும் மனதுக்கு நெருக்கமான அந்த சஃபாரி பெயரை மீண்டும் தனது புதிய 7 சீட்டர் எஸ்யூவிக்கு டாடா மோட்டார்ஸ் சூட்டி இருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழலில், புதிய டாடா சஃபாரி எஸ்யூவியின் டீசர்களை டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று சஃபாரி எஸ்யூவியின் உற்பத்தி துவங்கப்பட்டிருப்பது குறித்த மகிழ்ச்சியான செய்தியையும், ஆலையின் உற்பத்தி பிரிவிலிருந்து வந்த முதல் சஃபாரி எஸ்யூவியின் படத்தையும் வெளியிட்டுள்ளது டாடா மோட்டார்ஸ்.

புதிய டாடா சஃபாரி எஸ்யூவி எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட் ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மூன்று வரிசை இருக்கை அமைப்புடையதாக வர இருக்கிறது.

இந்த புதிய மாடலானது 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என இரண்டு இருக்கை அமைப்புகள் கொண்ட மாடல்களில் கிடைக்கும். 6 சீட்டர் மாடலில் நடுவரிசையில் கேப்டன் இருக்கைகளும், 7 சீட்டர் மாடலில் இரண்டாவது வரிசையில் பெஞ்ச் வகை இருக்கை அமைப்பும் இடம்பெற்றிருக்கும்.

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் 2 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வர இருக்கிறது. பின்னர், 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் ஏராளமான வசதிகள் இடம்பெற்றிருக்கும். 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல மல்டி இன்ஃபர்மேஷன் திரை, ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், ஐரா கனெக்டெட் கார் தொழில்நுட்ப வசதிகள் முக்கியமானதாக இருக்கும். எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.