ஓரங்கட்டேய்... வந்துவிட்டது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்!

மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இரண்டு விதமான மாடல்களில் தேர்வு செய்து கொள்ளும் வகையில் இந்த புதிய எஸ்யூவி சந்தைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஓரங்கட்டேய்... வந்துவிட்டது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்... 2 அட்டகாசமான மாடல்களில் அறிமுகம்!!

இந்தியாவின் ஃபுல் சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் நம்பர்-1 சாய்ஸ் டொயோட்டா ஃபார்ச்சூனர்தான். எவ்வளவு போட்டியாளர்கள் வந்தாலும், அசால்ட்டாக தூக்கி அடிக்கும் விதமாக, தோற்றத்திலும், நம்பகத்தன்மையிலும் மிகச் சிறந்த மாடலாக இந்தியர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், எம்ஜி க்ளோஸ்ட்டர் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட மாடல்கள் வந்துள்ளதால், டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை போக்கிக் கொள்ளும் விதமாக, புதிய ஃபார்ச்சூனர் எஸ்யூவியை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது டொயோட்டா.

ஓரங்கட்டேய்... வந்துவிட்டது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்... 2 அட்டகாசமான மாடல்களில் அறிமுகம்!!

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் மிக முக்கிய அம்சமாக, இரண்டு விதமான மாடல்களில் வந்துள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருந்த மாடலுக்கு மாற்றாக ஸ்டான்டர்டு எனப்படும் சாதாரண ரக மாடலும், அதிக கவர்ச்சியை கொண்ட லெஜென்டர் என்ற மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஓரங்கட்டேய்... வந்துவிட்டது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்... 2 அட்டகாசமான மாடல்களில் அறிமுகம்!!

ஆன்ரோடு மற்றும் ஆஃப்ரோடு என இரண்டு பயன்பாட்டிற்காகவும் ஃபார்ச்சூனர் எஸ்யூவியை வாங்குவோருக்காக ஸ்டான்டர்டு மாடலும், அந்தஸ்தையும், டிசைனிலும் அதிக முக்கியத்துவம் தரும் நவீன யுக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் லெஜென்டர் என்ற மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுளளது.

ஓரங்கட்டேய்... வந்துவிட்டது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்... 2 அட்டகாசமான மாடல்களில் அறிமுகம்!!

2021ம் ஆண்டு மாடலாக வந்துள்ள புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் ஸ்டான்டர்டு மாடலுக்கும், லெஜென்டர் மாடலுக்கும் தோற்றத்தில் மட்டுமே மாறுபாடுகள் உள்ளன. மற்றபடி, எஞ்சின் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் ஒரே மாதிரியாக இருக்கின்றன. லெஜென்டர் எஸ்யூவியில் சில கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு டாப் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஓரங்கட்டேய்... வந்துவிட்டது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்... 2 அட்டகாசமான மாடல்களில் அறிமுகம்!!

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் ஸ்டான்டர்டு மாடலில் க்ரில் அமைப்பு முற்றிலுமாக மாறி இருக்கிறது. வலிமையான இரண்டு க்ரோம் பார்களுக்கு நடுவில் கருப்பு வண்ணத்தில் பிரம்மாண்ட க்ரில் அமைப்பு இடம்பெற்றுள்ளது. இருப்புறத்திலும் மெல்லிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் உள்ளன. பம்பர் அமைப்பும், அதற்கு கீழே ஸ்கிட் பிளேட்டும் சேர்ந்து முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகின்றன.

ஓரங்கட்டேய்... வந்துவிட்டது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்... 2 அட்டகாசமான மாடல்களில் அறிமுகம்!!

ஃபார்ச்சூனர் லெஜென்டர் எஸ்யூவியின் முகப்பு ஸ்டான்டர்டு மாடலில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறது. ஹெட்லைட், க்ரில் அமைப்பு சிறியதாக இருந்தாலும், பம்பர் மிக மிக வலிமையானதாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு நடுவில் பெரிய ஏர்டேம் இடம்பெற்றிருக்கிறது. லெஜென்டர் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இரட்டை வண்ணத் தேர்வு, டைமண்ட் கட் அலாய் வீல்கள் உள்ளன.

ஓரங்கட்டேய்... வந்துவிட்டது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்... 2 அட்டகாசமான மாடல்களில் அறிமுகம்!!

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் தக்க வைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.7 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் அதிக சக்தியையும், டார்க்கையும் வழங்கும் விதத்தில் மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

ஓரங்கட்டேய்... வந்துவிட்டது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்... 2 அட்டகாசமான மாடல்களில் அறிமுகம்!!

இதன் 2.8 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 201 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். டீசல் மாடலில் மட்டும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், லெஜென்டர் எஸ்யூவியில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்படவில்லை. இந்த எஸ்யூவியில் ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மூன்று டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஓரங்கட்டேய்... வந்துவிட்டது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்... 2 அட்டகாசமான மாடல்களில் அறிமுகம்!!

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, கனெக்டெட் கார் தொழில்நுட்பம், 11 ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், சப் ஊஃபர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம், விசேஷ தொழில்நுட்பம் கொண்ட வென்டிலேட்டட் இருக்கைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. லெஜென்டர் மாடலில் வயர்லெஸ் சார்ஜர் மற்றும் கால் அசைவு மூலமாக பின்புற கதவை திறக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஓரங்கட்டேய்... வந்துவிட்டது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்... 2 அட்டகாசமான மாடல்களில் அறிமுகம்!!

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் (2 வீல் டிரைவ்) மாடலுக்கு ரூ.29.98 லட்சமும், ஆட்டோமேட்டிக் (2 வீல் டிரைவ்) மாடலுக்கு ரூ.31.57 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் மேனுவல் (2 வீல் டிரைவ்) மாடலுக்கு ரூ.32.48 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், ஆட்டோமேட்டிக் (2 வீல் டிரைவ்) மாடலுக்கு ரூ.34.84 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓரங்கட்டேய்... வந்துவிட்டது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்... 2 அட்டகாசமான மாடல்களில் அறிமுகம்!!

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் டீசல் மேனுவல் (4 வீல் டிரைவ்) மாடலுக்கு ரூ.35.14 லட்சமும், ஆட்டோமேட்டிக் (4 வீல் டிரைவ்) மாடலுக்கு ரூ.37.43 லட்சமும் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய ஃபார்ச்சூனர் லெஜென்டர் ஆட்டோமேட்டிக் (2 வீல் டிரைவ்) மாடலுக்கு ரூ.37.58 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி ஃபோர்டு எண்டெவர், எம்ஜி க்ளோஸ்ட்டர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 ஆகிய எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota has launched new Fortuner SUV in India and prices starting at Rs.29 lakh (Ex-Showroom).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X