520 கிமீ ரேஞ்ச்... புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!

அதிக ரேஞ்ச் கொண்ட ஐடி.5 என்ற புத்தம் புதிய கூபே ரக எஸ்யூவி மாடலை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் உலக அளவில் வெளியிட்டு இருக்கிறது. அசத்தலான தோற்றம், அதிக ரேஞ்ச் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் வெளியிடப்பட்டு இருக்கும் இந்த புதிய எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவியின் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

520 கிமீ ரேஞ்ச்... புத்தம் புதிய கூபே ரக எஸ்யூவி காரை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!

புதிய ஃபோக்ஸ்வேகன் ஐடி.5 கூபே ரக எஸ்யூவி கார் முதல் பார்வையிலேயே தனித்துவமான தோற்றத்துடன் கவர்ந்து இழுக்கிறது. மெல்லிதான அழகிய க்ரில் அமைப்பு, அதன் இரு மருங்கிலும் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், பெரிய பம்பர் அமைப்பு, கவர்ச்சிகரமான சக்கரங்கள், பின்புறம் தாழ்ந்த கூரை அமைப்புடன் கவர்கிறு. பின்புறத்திலும் மிக நேர்த்தியான டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள், பூட் ஸ்பாய்லர்,கம்பீரமான தோற்றத்தை வழங்கும் பம்பர் என அசத்தலாக இருக்கிறது.

520 கிமீ ரேஞ்ச்... புத்தம் புதிய கூபே ரக எஸ்யூவி காரை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!

புதிய ஃபோக்ஸ்வேகன் ஐடி5. கார் மூன்று விதமான மாடல்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது. புரோ, புரோ பெர்ஃபார்மென்ஸ் மற்றும் ஜிடிஎக்ஸ் என்ற மூன்று விதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

520 கிமீ ரேஞ்ச்... புத்தம் புதிய கூபே ரக எஸ்யூவி காரை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!

ஃபோக்ஸ்வேகன் ஐடி.5 காரின் புரோ, புரோ பெர்ஃபார்மென்ஸ் மற்றும் ஜிடிஎக்ஸ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளிலுமே 77kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஒற்றை அல்லது இரட்டை மின் மோட்டார்கள் கொண்டதாக விற்பனைக்கு கிடைக்கும்.

520 கிமீ ரேஞ்ச்... புத்தம் புதிய கூபே ரக எஸ்யூவி காரை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!

புரோ என்ற ஆரம்ப விலை வேரியண்ட்டில் ஒரு மின் மோட்டார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மின் மோட்டார் அதிகபட்சமாக 172 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். 0 - 100 கிமீ வேகத்தை 10.4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 159 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

520 கிமீ ரேஞ்ச்... புத்தம் புதிய கூபே ரக எஸ்யூவி காரை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!

அடுத்து புரொ பெர்ஃபார்மென்ஸ் வேரியண்ட்டில் பின்புற ஆக்சிலில் உள்ள ஒற்றை மின் மோட்டார் அதிகபட்சமாக 201 பிெச்பி பவரை வெளிப்படுத்தும். 0 - 100 கிமீ வேகத்தை 8.4 வினாடிகளில் எட்டிவிடும். இந்த மாடல் 159 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

520 கிமீ ரேஞ்ச்... புத்தம் புதிய கூபே ரக எஸ்யூவி காரை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!

அதி திறன் வாய்ந்த ஜிடிஎக்ஸ் என்ற டாப் வேரியண்ட்டில் இரண்டு ஆக்சில்களிலும் தலா ஒரு மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இரட்டை மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 295 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். 0 - 100 கிமீ வேகத்தை 6.3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும்.

520 கிமீ ரேஞ்ச்... புத்தம் புதிய கூபே ரக எஸ்யூவி காரை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!

புதிய ஃபோக்ஸ்வேகன் ஐடி.5 எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவியில் இருக்கும் பேட்டரித் தொகுப்பை 135kW திறன் வாய்ந்த ஃபாஸ்ட் சார்ஜர் வரை சப்போர்ட் செய்யும். இதன்மூலமாக, 30 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு பேட்டரியை சார்ஜ் செய்துவிட முடியும்.

520 கிமீ ரேஞ்ச்... புத்தம் புதிய கூபே ரக எஸ்யூவி காரை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!

இந்த எலெக்ட்ரிக் கார் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MEB என்ற கட்டமைப்புக் கொள்கையை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஐடி.4 காரும் இதே கட்டமைப்புக் கொள்கையில்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 4,599 மிமீ நீளமும், 2,600 மிமீ வீல்பேஸ் நீளத்தையும் இந்த கார் பெற்றிருக்கிறது. இந்த காரில் 549 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. இந்தத காரில் 6 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 12 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது.

520 கிமீ ரேஞ்ச்... புத்தம் புதிய கூபே ரக எஸ்யூவி காரை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்!

வரும் 2022ம் ஆண்டு துவக்கத்தில் ஐரோப்பிய சந்தையில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஜெர்மனியில் விக்காவ் என்ற இடத்தில் உள்ள ஃபோக்ஸ்வேகன் ஆலையில் ஐடி.3 மற்றும் ஐடி.4 ஆகிய கார்களுடன் சேர்த்து இந்த காரும் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

Most Read Articles
English summary
German carmaker Volkswagen has revealed its new electric car, the ID.5 coupe SUV globally and it will go on sale by early next year.
Story first published: Friday, November 5, 2021, 18:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X