2021 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காரின் முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரி எப்போது ஆரம்பமாகுதுனு தெரியுமா?

இந்தியாவில் டி-ராக் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஃபோக்ஸ்வேகன் காரை பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

2021 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காரின் முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரி எப்போது ஆரம்பமாகுதுனு தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி பார்க்கும்போது, டி-ராக் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டு நடைபெற்று கொண்டிருக்கின்றன. டெலிவிரி பணிகள் வருகிற மே 21ஆம் தேதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுவிடும்.

2021 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காரின் முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரி எப்போது ஆரம்பமாகுதுனு தெரியுமா?

புதிய ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காருக்கான எக்ஸ்ஷோரூம் விலை ரூ.21.35 லட்சம் என கடந்த மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திய சந்தையில் இவ்வாறான ப்ரீமியம் எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்துவதில் ஃபோக்ஸ்வேகன் உறுதியாக உள்ளது.

2021 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காரின் முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரி எப்போது ஆரம்பமாகுதுனு தெரியுமா?

இந்த வகையில் இந்த ஜெர்மன் ஆட்டோமொபைல் நிறுவனம் அடுத்தடுத்ததாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள நான்கு எஸ்யூவி கார்களில் டி-ராக் முதல் மாடலாகும். இந்த எஸ்யூவி கடந்த 2021 மார்ச்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2021 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காரின் முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரி எப்போது ஆரம்பமாகுதுனு தெரியுமா?

முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ள 2021 டி-ராக்கின் விலை அதன் முந்தைய தலைமுறையை காட்டிலும் ரூ.1.36 லட்சம் அதிகமாகும். இந்தியாவில், அனைத்து வசதிகளையும் பெற்ற டி-ராக்கின் ஒரே ஒரு வேரியண்ட் மட்டும் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2021 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காரின் முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரி எப்போது ஆரம்பமாகுதுனு தெரியுமா?

முன்பக்கத்தில் இந்த கார் எல்இடி டிஆர்எல்கள் உடன் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி கார்னரிங் விளக்குகள் மற்றும் ஃபாக் விளக்குகளை பெற்றுள்ளது. பெரிய சக்கர வளைவுகளுக்கு உள்ளே 17 இன்ச் சக்கரங்கள் நேர்த்தியாக பொருத்தப்பட்டுள்ளன.

2021 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காரின் முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரி எப்போது ஆரம்பமாகுதுனு தெரியுமா?

இவற்றுடன் மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர், ஃபாக்ஸ் சறுக்கு தட்டுகள் உள்ளிட்டவற்றையும் இந்த எஸ்யூவி காரின் வெளிப்புறத்தில் பார்க்க முடிகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் 8-இன்ச் தொடுத்திரை உடன் வழங்கப்பட்டுள்ளது.

2021 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காரின் முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரி எப்போது ஆரம்பமாகுதுனு தெரியுமா?

அதேநேரம் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கென பெரிய அளவில் 10.25 இன்ச்சில் திரையினை புதிய டி-ராக் பெற்றுள்ளது. இவை மட்டுமின்றி இதன் கேபின் பனோராமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், என்ஜினை ஸ்டார்ட்/ஸ்டாப் செய்வதற்கு பொத்தான், இபிடியுடன் ஏபிஎஸ், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றையும் கொண்டுள்ளது.

2021 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காரின் முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரி எப்போது ஆரம்பமாகுதுனு தெரியுமா?

2021 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் ஒரே ஒரு 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 148 பிஎச்பி மற்றும் 248 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

2021 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காரின் முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரி எப்போது ஆரம்பமாகுதுனு தெரியுமா?

அதேபோல் என்ஜின் உடன் ஒரே ஒரு 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மட்டும் தான் தேர்வாக கொடுக்கப்படுகிறது. 0-வில் இருந்து 100kmph வேகத்தை குறைந்தப்பட்சமாக 8.4 வினாடிகளில் எட்டிவிடும் இந்த காரின் அதிகப்பட்ச வேகம் 205kmph ஆகும்.

Most Read Articles

English summary
2021 Volkswagen T-Roc Bookings & Deliveries Details Announced
Story first published: Friday, May 7, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X