டிகுவான் எஸ்யூவி காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஃபோக்ஸ்வேகன்!! டிசம்பரில் அறிமுகம்

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள படத்தினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டிகுவான் எஸ்யூவி காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஃபோக்ஸ்வேகன்!! டிசம்பரில் அறிமுகம்

ஃபோக்ஸ்வேகனின் புதிய எஸ்யூவி காரான டிகுவானிற்காக காத்திருக்க வேண்டிய காலம் நிறைவு பெறவுள்ளது. ஏனெனில் இந்த எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகள் அவ்ரங்காபாத்தில் உள்ள ஃபோக்ஸ்வேகனின் தொழிற்சாலையில் துவங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிகுவான் எஸ்யூவி காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஃபோக்ஸ்வேகன்!! டிசம்பரில் அறிமுகம்

இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள படத்தில் அவ்ரங்காபாத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் டிகுவான் காருடன் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் குர்பிரதாப் போபராய், ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார்கள் இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் இயக்குனர் அசிஷ் குப்தா நிற்பதையும் காணலாம்.

டிகுவான் எஸ்யூவி காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஃபோக்ஸ்வேகன்!! டிசம்பரில் அறிமுகம்

பிறகு பேசிய குர்பிரதாப் போபராய், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் சிறந்த தொழிற்நுட்பம் மற்றும் அற்புதமான தயாரிப்புகளை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். புதிய டிகுவானின் அறிமுகமும் அதற்கு ஒரு சான்றாகும். டிகுவான் எஸ்யூவி ஆனது உலகளாவிய சிறந்த விற்பனையாளராகவும், ஃபோக்ஸ்வேகன் பிராண்டின் முதன்மையான மாடலாகவும் உள்ளது.

டிகுவான் எஸ்யூவி காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஃபோக்ஸ்வேகன்!! டிசம்பரில் அறிமுகம்

இந்திய சந்தைக்கு 5 இருக்கைகள் கொண்ட டிகுவானை மீண்டும் கொண்டு வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இந்த பிரிவில் கூர்மையான, நேர்த்தியான மற்றும் வலுவான எஸ்யூவிக்கான இடைவிடாத தேவையை இந்த தயாரிப்பு பூர்த்தி செய்யும் என்று நம்புகிறோம் என்றார். ஆஷிஷ் குப்தா கருத்து தெரிவிக்கையில், உலகளவில் டிகுவான் ஒரு வலுவான மற்றும் திறமையான கார்லைன் என தனது திறமையை நிரூபித்துள்ளது.

டிகுவான் எஸ்யூவி காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஃபோக்ஸ்வேகன்!! டிசம்பரில் அறிமுகம்

இது உலகளாவிய சிறந்த விற்பனையாளராக தரவரிசைக்கு விரைவாக உயர்த்தப்பட்டுள்ளது. டிகுவான் சரியான அளவிலான ஆற்றல், செயல்திறன் மற்றும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு சரியான எஸ்யூவி வாகனமாகும். 2021 டிசம்பர் தொடக்கத்தில் 5 இருக்கைகள் கொண்ட புதிய டிகுவான் அறிமுகம் செய்யப்படுவதை எதிர்பார்க்கிறோம் என்றார்.

டிகுவான் எஸ்யூவி காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஃபோக்ஸ்வேகன்!! டிசம்பரில் அறிமுகம்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த 2021ஆம் ஆண்டிற்காக இந்திய சந்தைக்கு ஒதுக்கியுள்ள நான்கு எஸ்யூவி கார்களுள் ஒன்றாக விளங்கும் டிகுவான் வருகிற டிசம்பர் 7ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். ஃபோக்ஸ்வேகனின் க்ரூப்பின் சில மாடல்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட அதே எம்க்யூபி ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய டிகுவானில் டிஎஸ்ஐ தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

டிகுவான் எஸ்யூவி காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஃபோக்ஸ்வேகன்!! டிசம்பரில் அறிமுகம்

இந்த தொழிற்நுட்பத்தை பெற்று வந்துள்ள டிகுவானின் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த டிரான்ஸ்மிஷன் அமைப்பில் 4மோஷன் தொழிற்நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது.அதிகப்பட்சமாக 187 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனை இந்த பெட்ரோல் என்ஜின் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

டிகுவான் எஸ்யூவி காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஃபோக்ஸ்வேகன்!! டிசம்பரில் அறிமுகம்

உலகளவில் அப்டேட் செய்யப்பட்ட டிகுவான் கடந்த 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. காம்பெக்ட் எஸ்யூவி கார் பிரிவில் ஸ்கோடா குஷாக்கிற்கு போட்டியாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டைகுனிற்கு அடுத்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளவுள்ள முக்கியமான அறிமுகம் டிகுவான் ஆகும். தோற்றத்தில் டைகுன் காம்பெக்ட் எஸ்யூவி மாடலை காட்டிலும் டிகுவான் அளவில் பெரியதாகும்.

டிகுவான் எஸ்யூவி காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஃபோக்ஸ்வேகன்!! டிசம்பரில் அறிமுகம்

ஏனெனில் இது நடுத்தர-அளவு எஸ்யூவி காராகும். அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே சில டிகுவான் எஸ்யூவி கார்கள் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டன. ஃபோக்ஸ்வேகன் சவாலான விலையில் கொண்டுவருவதற்காக டிகுவான் எஸ்யூவி கார்களை பாகங்களாக இறக்குமதி செய்து, இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யவுள்ளது.

டிகுவான் எஸ்யூவி காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஃபோக்ஸ்வேகன்!! டிசம்பரில் அறிமுகம்

ஆதலால் ஃபோக்ஸ்வேகன் இந்தியா 2.0 மூலோபயத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டிருக்கும் டிகுவானின் விலையினை மற்ற போட்டி மாடல்களுக்கு இணையானதாக எதிர்பார்க்கிறோம். விற்பனையில் ஃபோக்ஸ்வேகன் டிகுவானிற்கு போட்டியளிக்க, ஹூண்டாய் டக்ஸன், ஜீப் காம்பஸ் மற்றும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் முதலியவை தயாராக உள்ளன.

டிகுவான் எஸ்யூவி காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஃபோக்ஸ்வேகன்!! டிசம்பரில் அறிமுகம்

க்ரோம் தொடுதல்கள் உடன் திருத்தியமைக்கப்பட்ட க்ரில் அமைப்பை பெற்றுவரும் டிகுவான் எஸ்யூவி காரில் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்கள், பம்பரில் அப்டேட் செய்யப்பட்ட ஃபாக் விளக்குகளுக்கான குழிகள், பக்கவாட்டில் மாற்றியமைக்கப்பட்ட டிசைனில் அலாய் சக்கரங்கள், முக்கியமான கேரக்டர் லைன்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட உள்ளன.

டிகுவான் எஸ்யூவி காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஃபோக்ஸ்வேகன்!! டிசம்பரில் அறிமுகம்

பின்பக்கத்தில், எல்இடி டெயில்லைட்களின் வடிவம் சற்று மெல்லியதாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. உண்மையில் இதுதான் டிகுவானின் பின்பகுதிக்கு புத்துணர்ச்சியான தோற்றத்தை வழங்குகிறது. அறிமுகத்திற்கு பிறகு இந்த நடுத்தர-அளவு எஸ்யூவி காருக்கான முன்பதிவுகளை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் துவங்கும் என எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles
English summary
Volkswagen announces the start of production of the exciting new Tiguan in India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X