வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!

இந்திய சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. மேலும், முதலில் புக்கிங் செய்வோர் அறிமுகச் சலுகை விலையில் இந்த காரை பெறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!

இந்தியாவின் ஆரம்ப ரக சொகுசு செடான் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த மாடல்கள் உள்ளன. கடும் சந்தைப் போட்டி நிறைந்த இந்த ரகத்தில் அடுத்து ஒரு சிறந்த தேர்வாக வால்வோ நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை எஸ்-60 சொகுசு செடான் காரை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது.

வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!

புதிய வால்வோ எஸ்60 சொகுசு செடான் காரை ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இந்த காருக்கு அறிமுகச் சலுகை விலையாக ரூ.45.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் டி-4 இன்ஸ்க்ரிப்ஷன் என்ற ஒரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!

புதிய வால்வோ எஸ்60 சொகுசு கார் எஸ்பிஏ எனப்படும் புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய வால்வோ எஸ்60 கார் 4,761 மிமீ நீளமும், 2,040 மிமீ அகலமும், 1,431 மிமீ உயரமும் கொண்டது. இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2,872 மிமீ ஆக உள்ளது. வழக்கமான வால்வோ செடான் கார்களின் பாரம்பரிய டிசைன் அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் அசத்தலாக வந்துள்ளது.

வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!

புதிய வால்வோ எஸ்60 காரில் அகலமான புதிய க்ரில் அமைப்பு, சுத்தியல் வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகளுடன் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், C- வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவற்றுடன் எஸ்-90 சொகுசு காரின் டிசைன் அம்சங்களுடன் கவர்ச்சியாக இருக்கிறது.

வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!

2021 மாடலாக வந்திருக்கும் இந்த காரில் 9.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர், ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை முக்கிய வசதிகளாக உள்ளன.

வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!

புதிய வால்வோ எஸ்60 காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 187 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. கம்ஃபோர்ட், ஈக்கோ மற்றும் டைனமிக் ஆகிய டிரைவிங் மோடுகளும் உள்ளன.

வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!

இந்த காரில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எமெர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம், லேன் கீப்பிங் அசிஸ்ட், டிரைவர் அலர்ட் சிஸ்டம் என கார் விபத்தில் சிக்குவதை தவிர்க்கும் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் உள்ளன. யூரோ என்சிஏபி அமைப்பின் க்ராஷ் டெஸ்ட் சோதனையில் இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங் தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது.

வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!

கொரோனா பிரச்னையால் வாடிக்கையாளர்கள் ஷோரூமிற்கு வருவதை தவிர்க்கும் வகையில், ஆன்லைனில் புக்கிங் ஏற்கப்படுவதாக வால்வோ தெரிவித்துள்ளது. ஜனவரி மற்றும் பிப்ரவரியில் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரும் மார்ச் மாதத்தில் டெலிவிரி கொடுக்கப்படும். இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ், ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்இ ஆகிய கார் மாடல்களுடன் புதிய வால்வோ எஸ்60 கார் போட்டி போடும்.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo has launched the new gen Volvo S60 in India at an introductory price of Rs 45.90 lakh (ex-showroom).
Story first published: Wednesday, January 20, 2021, 16:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X