ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் அப்கிரேட் செய்யப்படும் புதிய மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ்! 2022ல் ஐரோப்பாவில் அறிமுகம்

உலகளவில் எஸ்யூவி கார்களுக்கு பெரிய அளவில் தேவை உருவாகி வருவதால், கிட்டத்தட்ட அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வலிமையான எஸ்யூவி கார்கள் வரிசையை தற்சமயம் கொண்டுள்ளன.

ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் அப்கிரேட் செய்யப்படும் புதிய மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ்! 2022ல் ஐரோப்பாவில் அறிமுகம்

இருப்பினும் சில நிறுவனங்கள் எஸ்யூவி கார்கள் பிரிவில் அவ்வளவு வலுவாக காலூன்றாமல் உள்ளன. உதாரணத்திற்கு ஜப்பானை சேர்ந்த சுஸுகி. ஏனெனில் இந்த நிறுவனம் 2025இல் இருந்தே புதிய எஸ்யூவிகளை உலகளவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் அப்கிரேட் செய்யப்படும் புதிய மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ்! 2022ல் ஐரோப்பாவில் அறிமுகம்

இந்த எஸ்யூவிகளில் ஒன்றாக புதிய தலைமுறை எஸ்-க்ராஸ் விளங்கவுள்ளது. இந்த க்ராஸ்ஓவரின் புதிய தலைமுறையை முதலாவதாக அடுத்த 2022ஆம் ஆண்டில் ஐரோப்பிய சந்தையில் சுஸுகி அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் அப்கிரேட் செய்யப்படும் புதிய மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ்! 2022ல் ஐரோப்பாவில் அறிமுகம்

அதனை தொடர்ந்தே மற்ற நாட்டு சந்தைகளுக்கு புதிய சுஸுகி எஸ்-க்ராஸ் கொண்டுவரப்பட உள்ளது. இதில் இந்தியாவும் இருக்கும். மற்றப்படி புதிய தலைமுறை எஸ்-க்ராஸ் கார் குறித்த விபரங்கள் தற்போதைக்கு மிகவும் குறைவாகவே உள்ளன.

ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் அப்கிரேட் செய்யப்படும் புதிய மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ்! 2022ல் ஐரோப்பாவில் அறிமுகம்

சமீபத்தில் கிடைத்திருந்த தகவல்களில், இந்த எஸ்யூவி வாகனம் புதிய தலைமுறை அப்கிரேடாக முற்றிலும் புதிய தோற்றத்தை பெற்றுவரவுள்ளது. அதேநேரம், கார்பன் மாசு வெளியிடுவதை குறைக்க விருப்பப்படும் சுஸுகியின் முயற்சியால், சில மின்மயமாக்கல் தேர்வுகள் இந்த க்ராஸ்ஓவரில் கொண்டுவரப்படலாம்.

ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் அப்கிரேட் செய்யப்படும் புதிய மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ்! 2022ல் ஐரோப்பாவில் அறிமுகம்

புதிய எஸ்-க்ராஸ் உடன், சர்வதேச சந்தைகளுக்கான புதிய தலைமுறை விட்டாரா மாடலை தயாரிக்கும் பணியிலும் சுஸுகி நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. புதிய தலைமுறை அப்கிரேடாக புதிய சுஸுகி விட்டாராவில் புதிய ஹைப்ரீட் தொழிற்நுட்பம் வழங்கப்பட உள்ளது.

ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் அப்கிரேட் செய்யப்படும் புதிய மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ்! 2022ல் ஐரோப்பாவில் அறிமுகம்

சுஸுகியின் கூட்டணி நிறுவனமான டொயோட்டாவில் இருந்து பெறப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய ஹைப்ரீட் தொழிற்நுட்பம் புதிய தலைமுறை எஸ்-க்ராஸிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் பார்த்தோமேயானால், புதிய எஸ்-க்ராஸ் இரு விதமான என்ஜின் தேர்வுகளுடன் விற்பனைக்கு வரவுள்ளது.

ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் அப்கிரேட் செய்யப்படும் புதிய மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ்! 2022ல் ஐரோப்பாவில் அறிமுகம்

இதில் ஒன்றாக வழக்கமான 1.5 லிட்டர் கே15 நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் வழங்கப்படலாம். அதிகப்பட்சமாக 104 பிஎச்பி மற்றும் 138 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் அப்கிரேட் செய்யப்படும் புதிய மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ்! 2022ல் ஐரோப்பாவில் அறிமுகம்

ஆனால் புதிய எஸ்-க்ராஸில் தற்போதைய 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுக்கு மாற்றாக 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுவரப்படலாம். அதேநேரம், சர்வதேச சந்தையில் எஸ்-க்ராஸ் மாடல் 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ஜினை பெறலாம் என கூறப்படுகிறது.

ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் அப்கிரேட் செய்யப்படும் புதிய மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ்! 2022ல் ஐரோப்பாவில் அறிமுகம்

அதிகப்பட்சமாக 127 பிஎச்பி மற்றும் 235 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே. ஆனால் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்ட முந்தைய 1.5 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் என்ஜின் மீண்டும் கொண்டுவரப்படலாம்.

Most Read Articles
English summary
Next-Gen Maruti Suzuki S-Cross Could Get Mild-Hybrid Tech.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X