Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 9 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
பெங்களூரை சேர்ந்த ஒரு நிஸான் டீலர்ஷிப், ஒரே நாளில் 100 மேக்னைட் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து அசத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கண்டிபுடி என்ற நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் 36 மேக்னைட் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்த செய்தியை சமீபத்தில் உங்களுக்கு வழங்கியிருந்தோம். தற்போது அதே போன்றதொரு பிரம்மாண்டமான டெலிவரி நிகழ்வு பெங்களூரில் நடைபெற்றுள்ளது. ஆந்திராவில் நடைபெற்றதை காட்டிலும் இதனை பெரிய டெலிவரி நிகழ்வாக கூறலாம்.

ஆம், ஒரே நாளில் 100 மேக்னைட் கார்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளன. பெங்களூர் நகரில் உள்ள சூர்யா நிஸான் என்ற டீலர்ஷிப்தான் இந்த பிரம்மாண்டமான டெலிவரி நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. டெலிவரி பெற வந்திருந்த அனைத்து உரிமையாளர்களும் குழுமியிருக்க, திருவிழாவை போல் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்த மெகா டெலிவரியை கொண்டாடும் விதமாக ரிப்பன்கள் மற்றும் பலூன்கள் மூலம் நிஸான் மேக்னைட் கார்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த பிரம்மாண்ட டெலிவரி குறித்த வீடியோவை ஆட்டோ டவுன் என்ற யூ-டியூப் சேனல் வெளியிட்டுள்ளது. நிஸான் மேக்னைட் காருக்கு இந்திய சந்தையில் தற்போது உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

நிஸான் மேக்னைட் காருக்கு தற்போது வரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. இதன் காரணமாக காத்திருப்பு காலம் 8 மாதங்கள் வரை நீண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக இருப்பதால், அதனை குறைக்கும் முயற்சிகளில் நிஸான் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காத்திருப்பு காலத்தை குறைப்பதற்காக நிஸான் நிறுவனம் தற்போது புதிதாக ஒரு ஷிப்ட்டை சேர்த்துள்ளது. ஒரு மாதத்திற்கு 3,500 கார்கள் என்ற நிலையில் இருந்து 4,500 கார்கள் என உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக காத்திருப்பு காலம் 3-4 மாதங்களாக குறையும். தற்போது வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வரும் நிஸான் மேக்னைட் கார் கடந்த டிசம்பர் 2ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். ஹூண்டாய் வெனியூ, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன் நிஸான் மேக்னைட் போட்டியிட்டு வருகிறது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் காருக்கும் இது விற்பனையில் சவால் அளிக்கும்.

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார், நேச்சுரலி அஸ்பிரேட்டட் மற்றும் டர்போ என இரண்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 71 ஹெச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.
அதே சமயம் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 99 ஹெச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த இரண்டு இன்ஜின்களுடனும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. அதே சமயம் டர்போ பெட்ரோல் இன்ஜின் சிவிடி டிரான்ஸ்மிஷன் தேர்வையும் பெற்றுள்ளது.