துவண்டு போன நிஸானை தூக்கி நிறுத்திய மேக்னைட்... விற்பனையில் கலக்கல்!

இந்திய சந்தையில் துவண்டு சுருண்டு கிடந்த நிஸான் கார் நிறுவனத்தை மேக்னைட் கார் தூக்கி நிறுத்தி புது தெம்பை ஊட்டி இருக்கிறது. கடந்த மாதமும் நிஸான் நிறுவனம் விற்பனையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையை பதிவு செய்து காலரை தூக்கிவிட்டுள்ளது.

துவண்டு போன நிஸானை தூக்கி நிறுத்திய மேக்னைட்... விற்பனையில் கலக்கல்!

இந்திய கார் சந்தையில் கெஜ கர்ணம் போட்டும் நிஸான் நிறுவனத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நிஸான் நிறுவனத்தின் விற்பனைக் கொள்கைகள் மற்றும் கார் மாடல்கள் இந்தியர்களை கவரும் வகையில் அமையாமல் போனது துரதிருஷ்டவசமாகவே பார்க்கப்பட்டது.

துவண்டு போன நிஸானை தூக்கி நிறுத்திய மேக்னைட்... விற்பனையில் கலக்கல்!

இந்த நிலையில், பூனைக்கும் காலம் வரும் என்பது போல, ஒரே கார் மாடலால் நிஸான் நிறுவனம் எழுந்து நிற்க துவங்கி இருக்கிறது. சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஒரு மாடல் வைத்து இருந்தால் காலத்தை ஓட்டி விடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

துவண்டு போன நிஸானை தூக்கி நிறுத்திய மேக்னைட்... விற்பனையில் கலக்கல்!

இந்த ரகத்தில் உள்ள வர்த்தக வளத்தை பார்த்து பெரும்பாலான நிறுவனங்கள் களம் இறங்கி விட்ட நிலையில், நிஸான் நிறுவனம் சற்று தாமதமாக இறங்கினாலும், இந்தியர்களை கவரும் வகையில், டிசைன் மற்றும் விலையை வைத்து இந்த மார்க்கெட்டில் முக்கிய போட்டியாளராக உருவெடுத்துள்ளது.

துவண்டு போன நிஸானை தூக்கி நிறுத்திய மேக்னைட்... விற்பனையில் கலக்கல்!

ஆம். மேக்னைட் எஸ்யூவி மூலமாக நிஸான் நிறுவனத்தின் தலை எழுத்து இந்தியாவில் மாறி இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக நிஸான் நிறுவனத்தின் விற்பனையும் வெளியில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு முன்னேறி உள்ளது.

துவண்டு போன நிஸானை தூக்கி நிறுத்திய மேக்னைட்... விற்பனையில் கலக்கல்!

கடந்த மாதம் நிஸான் நிறுவனம் 4,244 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இதில், பெரும்பான்மையான விற்பனையை புதிய மேக்னைட் எஸ்யூவிதான் வழங்கி இருக்கிறது. மேலும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 6,582 மேக்னைட் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

துவண்டு போன நிஸானை தூக்கி நிறுத்திய மேக்னைட்... விற்பனையில் கலக்கல்!

இதுவரை நிஸான் மேக்னைட் எஸ்யூவிக்கு 40,000க்கும் மேற்பட்ட புக்கிங்குகளை குவித்து அசத்தி இருக்கிறது. கையில் வலுவான புக்கிங் எண்ணிக்கை கிடைத்திருப்பதால், நிஸான் நிறுவனமும் உற்சாகத்துடன் மேக்னைட் எஸ்யூவியின் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

துவண்டு போன நிஸானை தூக்கி நிறுத்திய மேக்னைட்... விற்பனையில் கலக்கல்!

விற்பனை அதிகரித்திருப்பது குறித்து நிஸான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவத்சவா கூறுகையில்,"நிஸான் மேக்னைட் அனைத்து விதத்திலும் சிறந்த மதிப்பை வழங்குவதால், பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் கடந்த இரண்டு மாதங்களில் 6,582 மேக்னைட் கார்களை டெலிவிரி கொடுத்துள்ளோம். இது நிச்சயம் கேம் சேஞ்சர் மாடலாக கூறலாம். சென்னை ஆலையில் மூன்று ஷிஃப்ட்டுகளில் மேக்னைட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், காத்திருப்பு காலம் குறையும்," என்று தெரிவித்துள்ளார்.

துவண்டு போன நிஸானை தூக்கி நிறுத்திய மேக்னைட்... விற்பனையில் கலக்கல்!

புதிய நிஸான் மேக்னைட் கார் சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. ரூ.5.49 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. ரெனோ கைகர், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட் உள்ளிட்ட சப் - காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுடன் போட்டி போடுகிறது.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan India has reported 4,244 units in sales for the month of February 2021.
Story first published: Monday, March 1, 2021, 17:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X