இந்த ரேட்ல கெடச்சா யார்தான் வாங்காம இருப்பா? வெளிநாடுகளை கலக்கும் 'மேட் இன் தமிழ்நாடு' கார்... கெத்தா இருக்கு

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிஸான் மேக்னைட் கார் வெளிநாடுகளை கலக்கி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்த ரேட்ல கெடச்சா யார்தான் வாங்காம இருப்பா? வெளிநாடுகளை கலக்கும் 'மேட் இன் தமிழ்நாடு' கார்... கெத்தா இருக்கு

மேக்னைட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை தொடங்கியுள்ளதாக நிஸான் இந்தியா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அத்துடன் ஒட்டுமொத்தமாக 15,010 மேக்னைட் கார்களை உற்பத்தி செய்துள்ளதாகவும் நிஸான் இந்தியா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரேட்ல கெடச்சா யார்தான் வாங்காம இருப்பா? வெளிநாடுகளை கலக்கும் 'மேட் இன் தமிழ்நாடு' கார்... கெத்தா இருக்கு

இது கடந்த ஆண்டு உற்பத்தி தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த மே மாத இறுதி வரை உற்பத்தி செய்யப்பட்ட கார்களின் மொத்த எண்ணிக்கை ஆகும். சென்னைக்கு அருகே உள்ள தொழிற்சாலையில்தான் நிஸான் நிறுவனம் மேக்னைட் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. ஒட்டுமொத்தமாக உற்பத்தி செய்யப்பட்ட 15,010 கார்களில் இந்தியாவில் 13,790 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த ரேட்ல கெடச்சா யார்தான் வாங்காம இருப்பா? வெளிநாடுகளை கலக்கும் 'மேட் இன் தமிழ்நாடு' கார்... கெத்தா இருக்கு

அதே சமயம் எஞ்சிய 1,220 கார்கள் நேபாளம், இந்தோனேஷியா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நேபாளத்தில் நிஸான் மேக்னைட் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் 30 நாட்களில் 760க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி பெற்றுள்ளது. நேபாள சந்தையை பொறுத்தவரை, இது மிகப்பெரிய முன்பதிவு எண்ணிக்கையாகும்.

இந்த ரேட்ல கெடச்சா யார்தான் வாங்காம இருப்பா? வெளிநாடுகளை கலக்கும் 'மேட் இன் தமிழ்நாடு' கார்... கெத்தா இருக்கு

இந்தியாவிலும் நிஸான் மேக்னைட் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது நமக்கு தெரிந்த ஒரு விஷயம்தான். இந்திய சந்தையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் நிஸான் மேக்னைட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதால், தொடக்கம் முதலே இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த ரேட்ல கெடச்சா யார்தான் வாங்காம இருப்பா? வெளிநாடுகளை கலக்கும் 'மேட் இன் தமிழ்நாடு' கார்... கெத்தா இருக்கு

இந்திய சந்தையில் 5.59 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) வரையிலான விலையில் நிஸான் மேக்னைட் கிடைக்கிறது. இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஒரு சில கார்கள் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளுடனும் கிடைக்கின்றன. ஆனால் மேக்னைட் சாதாரண பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளுடன் மட்டுமே கிடைக்கிறது.

இந்த ரேட்ல கெடச்சா யார்தான் வாங்காம இருப்பா? வெளிநாடுகளை கலக்கும் 'மேட் இன் தமிழ்நாடு' கார்... கெத்தா இருக்கு

எனினும் வாடிக்கையாளர்கள் இந்த காருக்கு நல்ல வரவேற்பை வழங்கி வருகின்றனர். இந்திய சந்தையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், டொயோட்டா அர்பன் க்ரூஸர், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் ரெனால்ட் கைகர் உள்ளிட்ட கார்களுடன் நிஸான் மேக்னைட் போட்டியிட்டு வருகிறது.

இந்த ரேட்ல கெடச்சா யார்தான் வாங்காம இருப்பா? வெளிநாடுகளை கலக்கும் 'மேட் இன் தமிழ்நாடு' கார்... கெத்தா இருக்கு

நிஸான் நிறுவனம் இந்தியாவில் தற்போது தனது டீலர்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. நிஸான் மேக்னைட் காரின் விற்பனை மேலும் அதிகரிப்பதற்கு இது ஒரு காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் சவால் நிறைந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், நிஸான் மேக்னைட்டின் வருகை போட்டியை மேலும் அதிகமாக்கியுள்ளது.

இந்த ரேட்ல கெடச்சா யார்தான் வாங்காம இருப்பா? வெளிநாடுகளை கலக்கும் 'மேட் இன் தமிழ்நாடு' கார்... கெத்தா இருக்கு

போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், குறிப்பாக மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர வேறு சில நிறுவனங்களும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் நுழைவதற்கு திட்டமிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Nissan India Starts Export Of Magnite To International Markets: Here Are All The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X