டவுன்பேமண்ட், இன்ஸ்யூரன்ஸ் கட்டணம் எதுவுமே கட்ட வேணாம்... நிஸான் மேக்னைட் காருக்கு மாத சந்தா திட்டம் அறிமுகம்!

நிஸான் மற்றும் டட்சன் கார்களை மாத சந்தாவில் வாங்கி பயன்படுத்துவதற்கான சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 நிஸான் மேக்னைட் காருக்கு மாத சந்தா திட்டம் அறிமுகம்... முழு விபரம்!

கொரோனா பிரச்னை காரணமாக, மக்கள் பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்து வருகின்றனர். இதனால், கார் வாங்கும் திட்டத்தை பலரும் ஒத்திப் போட்டு வருவதுடன், தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்களை கவரும் வகையில் பல சிறப்புத் திட்டங்களை கார் நிறுவனங்கள் கையில் எடுத்தன. அந்த வகையில், கடந்த ஆண்டு பல முன்னணி நிறுவனங்கள் மாத சந்தா திட்டத்தை அறிமுகம் செய்தன.

 நிஸான் மேக்னைட் காருக்கு மாத சந்தா திட்டம் அறிமுகம்... முழு விபரம்!

டவுன்பேமண்ட், பராமரிப்பு செலவு, இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், மாதா மாதம் குறிப்பிட்டத் தொகையை மாதத் தவணை போல செலுத்தினால், புதிய காரை எடுத்து பயன்படுத்தும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

 நிஸான் மேக்னைட் காருக்கு மாத சந்தா திட்டம் அறிமுகம்... முழு விபரம்!

இந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாவது அலை மீண்டும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது நிஸான் நிறுவனமும் மாத சந்தா திட்டத்தை அறிவித்துள்ளது.

 நிஸான் மேக்னைட் காருக்கு மாத சந்தா திட்டம் அறிமுகம்... முழு விபரம்!

நிஸான் மேக்னைட், கிக்ஸ் மற்றும் டட்சன் ரெடிகோ கார்களுக்கு இந்த மாத சந்தா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நிஸான் மேக்னைட் மற்றும் கிக்ஸ் கார்களுக்கு மாத சந்தாவாக ரூ.17,999 முதல் ரூ.23,999 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டட்சன் ரெடிகோ காருக்கு ரூ.8,9999 மாத சந்தாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 நிஸான் மேக்னைட் காருக்கு மாத சந்தா திட்டம் அறிமுகம்... முழு விபரம்!

முதல்கட்டமாக டெல்லி உள்ளடக்கிய வட மத்திய பிராந்திய பகுதிகளிலும், ஹைதராபாத் மற்றும் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து, பெங்களூர், புனே, மும்பை ஆகிய நகரங்களில் மாத சந்தா திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 நிஸான் மேக்னைட் காருக்கு மாத சந்தா திட்டம் அறிமுகம்... முழு விபரம்!

இந்த திட்டத்தின் கீழ் டவுண்பேண்ட் கிடையாது. இன்ஸ்யூரன்ஸ், பதிவுக் கட்டணம், சாலை வரி, ஆர்டிஓ அலுவலக செலவீனங்கள் ஆகியவை இருக்காது. மாத பராமரிப்புக் கட்டணங்களும் மாத சந்தாவில் அடங்கும். எனவே, இதர செலவுகளை பற்றி வாடிக்கையாளர்கள் கவலைப்பட தேவையில்லை.

 நிஸான் மேக்னைட் காருக்கு மாத சந்தா திட்டம் அறிமுகம்... முழு விபரம்!

சரியான இடைவெளி பராமரிப்பு தவிர்த்து, திடீரெனோ ஏற்படும் பழுதுகளும் சரிசெய்து தருவதற்கான கட்டணமும் மாத சந்தாவில் அடங்கும். அத்துடன், 24 மணிநேர சாலை அவசர உதவித் திட்டமும் இந்த திட்டத்துடன் வழங்கப்படுகிறது.

 நிஸான் மேக்னைட் காருக்கு மாத சந்தா திட்டம் அறிமுகம்... முழு விபரம்!

இந்த திட்டத்தை ஓரிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நிஸான் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. ஏற்கனவே, ஓரிக்ஸ் நிறுவனம் இந்த திட்டத்தை பல முன்னணி கார் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.

 நிஸான் மேக்னைட் காருக்கு மாத சந்தா திட்டம் அறிமுகம்... முழு விபரம்!

இந்த திட்டத்தின் மூலமாக நிஸான் மேக்னைட், கிக்ஸ் அல்லது டட்சன் ரெடிகோ கார்களை பெற விரும்புவோர் காப்புக் கட்டணம் செலுத்தி காரை பெற்றுக் கொள்ளலாம். அதன்பிறகு மாத சந்தா செலுத்த வேண்டும்.

Most Read Articles

English summary
Nissan has launched subscription plan for Magnite, Kicks and Datsun Redi-go in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X