சூப்பரோ, சூப்பர்... புக்கிங்குகளை வாரி குவித்து புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய நிஸான் மேக்னைட்!

நிஸான் மேக்னைட் காரின் புக்கிங் இமாலய எண்ணிக்கையை தொட்டு அசத்தி இருக்கிறது. இது போட்டியாளர்களை மலைக்க வைத்துள்ளது. நிஸான் மேக்னைட் புக்கிங் சாதனை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பரோ, சூப்பர்... புக்கிங்குகளை வாரி குவித்து புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய நிஸான் மேக்னைட்!

கடந்த ஆண்டு டிசம்பர் 2ந் தேதி நிஸான் மேக்னைட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அசத்தும் டிசைன், தொழில்நுட்ப வசதிகள், எஞ்சின் தேர்வுகளுடன் மிக குறைவான விலையில் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் வந்ததால், எதிர்பாராத அளவு வரவேற்பை பெற்றது.

சூப்பரோ, சூப்பர்... புக்கிங்குகளை வாரி குவித்து புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய நிஸான் மேக்னைட்!

குறிப்பாக, பேஸ் வேரியண்ட் ரூ.4.99 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் முண்டியடித்து இந்த காரை புக்கிங் செய்தனர். இதனால், நிஸான் மேக்னைட் காரின் புக்கிங் சரசரவென்று புதிய உச்சங்களை தொட்டது.

சூப்பரோ, சூப்பர்... புக்கிங்குகளை வாரி குவித்து புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய நிஸான் மேக்னைட்!

இந்த நிலையில், தற்போது நிஸான் மேக்னைட் காரின் புக்கிங் 50,000 என்ற இமாலய எண்ணிக்கையை தொட்டு அசத்தி இருக்கிறது. இந்த புக்கிங் எண்ணிக்கையை நிஸான் இந்தியா நிறுவனத்தின் வர்த்தகத்தை பல படிகள் மேலே தூக்கி நிறுத்தி இருக்கிறது.

சூப்பரோ, சூப்பர்... புக்கிங்குகளை வாரி குவித்து புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய நிஸான் மேக்னைட்!

அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை 2.78 லட்சம் பேர் இந்த காரை வாங்குவது குறித்து விசாரணை செய்துள்ளதாகவும், இதுவரை 10,000 மேக்னைட் கார்கள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளதாக நிஸான் தெரிவித்துள்ளது.

சூப்பரோ, சூப்பர்... புக்கிங்குகளை வாரி குவித்து புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய நிஸான் மேக்னைட்!

மொத்த முன்பதிவில் 15 சதவீதம் அளவுக்கு சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட வேரியண்ட்டுகளுக்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி பிரிமீயம் ஆகிய டாப் வேரியண்ட்டுகளையே 60 சதவீத வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்துள்ளனர்.

சூப்பரோ, சூப்பர்... புக்கிங்குகளை வாரி குவித்து புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய நிஸான் மேக்னைட்!

புதிய நிஸான் மேக்னைட் கார் எக்ஸ்இ, எக்ஸ்எல், எக்ஸ்வி, எக்ஸ்பி பிரிமீயம் மற்றும் எக்ஸ்வி பிரிமீயம் ஆப்ஷனல் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. டாப் வேரியண்ட்டில் எல்இடி பை புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விள்ககுகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

சூப்பரோ, சூப்பர்... புக்கிங்குகளை வாரி குவித்து புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய நிஸான் மேக்னைட்!

இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ, 7.0 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், வாய்ஸ் ரெககனிஷன் தொழில்நுட்பம், புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ரூஸ் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சூப்பரோ, சூப்பர்... புக்கிங்குகளை வாரி குவித்து புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய நிஸான் மேக்னைட்!

புதிய நிஸான் மேக்னைட் காரில் இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 71 பிஎச்பி பவரையும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 100 எச்பி பவரையும் வழங்கும். மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
Nissan Magnite has reached 50,000 bookings milestone in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X