நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!

நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி, ஆசியான் என்சிஏபி (ASEAN NCAP) அமைப்பிடம் இருந்து, 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை கடந்த டிசம்பர் மாதம் பெற்றிருந்தது. தற்போது மேட் இன் இந்தியா மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காருடைய மோதல் சோதனையின் ஸ்கோர்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஆசியான் என்சிஏபி அமைப்பு வெளியிட்டுள்ளது.

நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!

ஆசியான் என்சிஏபி நடத்திய மோதல் சோதனைகளில், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் நிஸான் மேக்னைட் 39.02 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 16.32 புள்ளிகளையும் ஸ்கோர் செய்துள்ளது. இதுதவிர பாதுகாப்பு உதவி பிரிவில் நிஸான் மேக்னைட் 15.28 புள்ளிகளை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக நிஸான் மேக்னைட் 70.60 புள்ளிகளை ஸ்கோர் செய்துள்ளது.

நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!

இதன் மூலம் 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை நிஸான் மேக்னைட் பெற்றுள்ளது. முன் பக்க மற்றும் பக்கவாட்டு மோதல் சோதனைகளுக்கு நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி உட்படுத்தப்பட்டது. க்ராஷ் டம்மிக்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவியில் ஓட்டுனர் மற்றும் முன் பக்க பயணிகளின் தலை மற்றும் கால்களுக்கு போதுமான பாதுகாப்பு கிடைக்கிறது.

நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!

அதேபோல் முன் பக்க பயணியின் மார்பு பகுதிக்கும் போதுமான பாதுகாப்பு உள்ளது. எனினும் முன் பக்க மோதல் சோதனையில் ஓட்டுனரின் மார்பு பகுதிக்கு போதுமான பாதுகாப்பு இல்லை. ஆனால் பக்கவாட்டு மோதல் சோதனையில் ஓட்டுனரின் மார்பு பகுதிக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!

நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காரில், நிறைய பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன. இதில், முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், இஎஸ்சி உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவிக்கு இந்திய சந்தையில் தற்போது உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!

இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஒன்று. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வும் வழங்கப்படுகிறது.

நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர இன்னும் பல்வேறு வசதிகளையும் நிஸான் மேக்னைட் பெற்றுள்ளது. ஹூண்டாய் வெனியூ, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் உள்ளிட்ட கார்களுடன் நிஸான் மேக்னைட் போட்டியிட்டு வருகிறது.

அத்துடன் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் நிறுவனத்தின் கிகர் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கும், நிஸான் மேக்னைட் விற்பனையில் சவால் அளிக்கும். இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்திற்கு மேக்னைட் புதிய இன்னிங்ஸை தொடங்கி வைத்துள்ளது என்று சொன்னால் மிகையல்ல. தற்போது மேக்னைட்டின் காத்திருப்பு காலத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் நிஸான் ஈடுபட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Magnite ASEAN NCAP Crash Test Results Announced: Here Are All The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X