Just In
- 4 hrs ago
20 வருடங்களுக்கு பிறகும் விற்பனையில் கெத்து காட்டும் மஹிந்திரா பொலிரோ... சேல்ஸ் எங்கயோ போயிருச்சு...
- 4 hrs ago
மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...
- 7 hrs ago
தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?
- 7 hrs ago
கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!
Don't Miss!
- News
ஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை!
- Sports
வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்
- Movies
நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்!
- Finance
அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..!
- Lifestyle
திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வேற லெவல்... விற்பனைக்கு வந்ததில் இருந்து நிஸான் மேக்னைட் காருக்கு இவ்வளவு முன்பதிவுகளா? அடேங்கப்பா!
நிஸான் மேக்னைட் காருக்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி கார், கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்த முதல் 5 நாட்களிலேயே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை நிஸான் மேக்னைட் பெற்றது. கடைசியாக நமக்கு கிடைத்த தகவல்களின்படி, நிஸான் மேக்னைட் காருக்கு 32,800 முன்பதிவுகள் குவிந்திருந்தன.

இது நடப்பாண்டு ஜனவரியில் நிஸான் நிறுவனம் தெரிவித்த தகவல் ஆகும். தற்போது நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு வந்ததில் இருந்து, அதன் ஒட்டுமொத்த முன்பதிவு எண்ணிக்கை 40,000 என்ற எண்ணிக்கையை கடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கார்அண்ட்பைக் செய்தி வெளியிட்டுள்ளது.

நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு தற்போதைய நிலையில் நகரம் மற்றும் வேரியண்ட்களை பொறுத்து 4 முதல் 6 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவி வருகிறது. எனவே காத்திருப்பு காலத்தை குறைப்பதற்காக, தமிழகத்தின் ஒரகடம் பகுதியில் உள்ள ஆலையில் நிஸான் நிறுவனம் சமீபத்தில் மூன்றாவது ஷிஃப்ட்டை தொடங்கியுள்ளது.

இதன் மூலம் நிஸான் மேக்னைட் கார்களின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, காத்திருப்பு காலத்தை குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நிஸான் மேக்னைட் காரின் காத்திருப்பு காலத்தை 2 முதல் 3 மாதங்களாக குறைப்பதற்காக மூன்றாவது ஷிஃப்ட் தொடங்கப்பட்டுள்ளது. காத்திருப்பு காலம் அதிகமாக இருந்தால், வாடிக்கையாளர்கள் வேறு தயாரிப்பிற்கு மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் அத்தகைய சூழல் ஏற்படுவதை தவிர்ப்பதற்கும், வாடிக்கையாளர்களுக்கு முடிந்த வரை விரைவாக கார்களை டெலிவரி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை நிஸான் நிறுவனம் எடுத்து வருகிறது. நடப்பு பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே மூன்றாவது ஷிஃப்ட்டை நிஸான் நிறுவனம் தொடங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகளில் நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் மேக்னைட் காரில் பல்வேறு வசதிகளை நிஸான் நிறுவனம் வழங்கியுள்ளது.

சவாலான விலை நிர்ணயம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வசதிகள், கவர்ச்சிகரமான டிசைன் மற்றும் 2 பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் ஆகிய காரணங்களால் நிஸான் மேக்னைட் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அத்துடன் விற்பனையில் போட்டியாளர்களுக்கும் கடுமையான நெருக்கடியை வழங்க தொடங்கியுள்ளது.

இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கைகர், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான், கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன் நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி போட்டியிட்டு வருகிறது.