நிஸான் மேக்னைட் கார் விலை மீண்டும் உயர்வு... 4 மாதங்களில் ரூ.60,000 வரை அதிகரித்தது!

வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து சிறப்பான வரவேற்பு இருந்து வரும் நிலையில், மேக்னைட் காரின் விலையை மீண்டும் உயர்த்தி உள்ளது நிஸான் நிறுவனம். இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

நிஸான் மேக்னைட் கார் விலை மீண்டும் உயர்வு... 4 மாதங்களில் ரூ.60,000 வரை உயர்வு!

கடந்த டிசம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிஸான் மேக்னைட் சப்-காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அட்டகாசமான டிசைன், வசதிகளுடன், ரூ.4.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வந்ததால், முன்பதிவு தூள் கிளப்பியது.

நிஸான் மேக்னைட் கார் விலை மீண்டும் உயர்வு... 4 மாதங்களில் ரூ.60,000 வரை உயர்வு!

இந்த நிலையில், நிஸான் மேக்னைட் காருக்கு அறிவிக்கப்பட்ட அறிமுகச் சலுகை விலை முடிவுக்கு வந்ததையடுத்து, சில வேரியண்ட்டுகளின் விலை கடந்த ஜனவரியிலும், மார்ச் மாதத்திலும் அதிகரிக்கப்பட்டது.

நிஸான் மேக்னைட் கார் விலை மீண்டும் உயர்வு... 4 மாதங்களில் ரூ.60,000 வரை உயர்வு!

இந்த சூழலில், தற்போது நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு முடிவுக்கு வந்த நிலையில், கடந்த 1ந் தேதி முதல் நிஸான் மேக்னைட் காரின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் மாடலின் விலை ரூ.33,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிஸான் மேக்னைட் கார் விலை மீண்டும் உயர்வு... 4 மாதங்களில் ரூ.60,000 வரை உயர்வு!

சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் மாடலின் எக்ஸ்இ பேஸ் வேரியண்ட்டின் அறிமுகச் சலுகை விலையுடன் ஒப்பிடும்போது, தற்போது ரூ.60,000 வரை உயர்ந்துள்ளது. ரூ.4.99 லட்சத்தில் வந்த பேஸ் வேரியண்ட்டின் விலை கடந்த ஜனவரியில் ரூ.50,000 அதிகரிக்கப்பட்டது.

நிஸான் மேக்னைட் கார் விலை மீண்டும் உயர்வு... 4 மாதங்களில் ரூ.60,000 வரை உயர்வு!

கடந்த 1ந் தேதி முதல் புதிய விலைப் பட்டியலில் ரூ.10,000 அதிகரிக்கப்பட்டுள்ளதால் ரூ.5.59 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, அறிமுகச் சலுகை விலையுடன் ஒப்பிடும்போது, கடந்த 4 மாதங்களில் பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.60,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிஸான் மேக்னைட் கார் விலை மீண்டும் உயர்வு... 4 மாதங்களில் ரூ.60,000 வரை உயர்வு!

அதேபோன்று, மேக்னைட் சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் மாடலின் எக்ஸ்எல் வேரியண்ட்டின் விலை ரூ.33,000 அதிகரிக்கப்பட்டு ரூ.6.32 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்வி வேரியண்ட்டின் விலை ரூ.31,000 அதிகரிக்கப்பட்டு ரூ.6.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்வி பி வேரியண்ட்டின் விலை ரூ.13,000 அதிகரிக்கப்பட்டு ரூ.7.68 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிஸான் மேக்னைட் கார் விலை மீண்டும் உயர்வு... 4 மாதங்களில் ரூ.60,000 வரை உயர்வு!

நிஸான் மேக்னைட் காரின் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டின் விலை ரூ.20,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்எல் பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.20,000 அதிகரிக்கப்பட்டு ரூ.7.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்வி வேரியண்ட்டின் விலை ரூ.11,000 வரையிலும், எக்ஸ்வி பி வேரியண்ட் விலை ரூ.14,000 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

நிஸான் மேக்னைட் கார் விலை மீண்டும் உயர்வு... 4 மாதங்களில் ரூ.60,000 வரை உயர்வு!

மேக்னைட் எக்ஸ்எல் சிவிடி விலை ரூ.20,000 வரையிலும், எக்ஸ்வி சிவிடி விலை ரூ.11,000 வரையிலும், எக்ஸ்வி பி சிவிடி விலை ரூ.9,000 வரையிலும் உயர்ந்துள்ளது. எக்ஸ்வி பி ஆப்ஷனல் மற்றும் எக்ஸ்வி பி ஆப்ஷனல் சிவிடி வேரியண்ட்டுகளின் விலையில் மாற்றமில்லை.

நிஸான் மேக்னைட் கார் விலை மீண்டும் உயர்வு... 4 மாதங்களில் ரூ.60,000 வரை உயர்வு!

புதிய நிஸான் மேக்னைட் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 8 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன. கனெக்டெட் கார் வசதியும் உள்ளது.

நிஸான் மேக்னைட் கார் விலை மீண்டும் உயர்வு... 4 மாதங்களில் ரூ.60,000 வரை உயர்வு!

இந்த காரில் ஏர் பியூரிஃபயர், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், எல்இடி ஸ்கஃப் பிளேட்டுகள், படூல் விளக்குகள் ஆகியவை டெக் பேக்கில் கொடுக்கப்படுகிறது. பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் லான்ச் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

நிஸான் மேக்னைட் கார் விலை மீண்டும் உயர்வு... 4 மாதங்களில் ரூ.60,000 வரை உயர்வு!

புதிய நிஸான் மேக்னைட் காரில் சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. சாதாரண பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க்கையும், டர்போ பெட்ரோல் எஞ்சின் 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

Most Read Articles
English summary
Nissan has increased Magnite price again up to Rs.33,000 depending on the variant.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X