3 மாதங்களில் 2வது முறையாக விலை அதிகரிப்பு!! மலிவான காம்பெக்ட் எஸ்யூவி கார் என்ற பெயரை இழக்கும் நிஸான் மேக்னைட்

நிஸான் மேக்னைட்டின் எக்ஸ்ஷோரூம் விலை அறிமுகத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

3 மாதங்களில் 2வது முறையாக விலை அதிகரிப்பு!! மலிவான காம்பெக்ட் எஸ்யூவி கார் என்ற பெயரை இழக்கும் நிஸான் மேக்னைட்

கடந்த சில ஆண்டுகளில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ள சப்-காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் மேக்னைட்டின் மூலம் நிஸான் கடந்த ஆண்டு இறுதியில் நுழைந்தது. மற்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்களில் இருந்து தனது தயாரிப்பு தனித்து தெரிவதற்காக மலிவான விலையில் மேக்னைட்டை நிஸான் அறிமுகப்படுத்தியது.

3 மாதங்களில் 2வது முறையாக விலை அதிகரிப்பு!! மலிவான காம்பெக்ட் எஸ்யூவி கார் என்ற பெயரை இழக்கும் நிஸான் மேக்னைட்

ஆனால் அப்போதே இந்த மலிவான விலை டிசம்பர் 31ஆம் தேதி வரையில் மட்டுமே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 2021 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து இந்த நிஸான் காம்பெக்ட் எஸ்யூவி காரின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது.

3 மாதங்களில் 2வது முறையாக விலை அதிகரிப்பு!! மலிவான காம்பெக்ட் எஸ்யூவி கார் என்ற பெயரை இழக்கும் நிஸான் மேக்னைட்

அது போதாதென்று தற்போது மீண்டும் இரண்டு மாதங்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக மேக்னைட்டின் விலைகளை நிஸான் நிறுவனம் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வை மேக்னைட்டின் சில குறிப்பிட்ட வேரியண்ட்கள் மட்டுமே ஏற்றுள்ளன.

3 மாதங்களில் 2வது முறையாக விலை அதிகரிப்பு!! மலிவான காம்பெக்ட் எஸ்யூவி கார் என்ற பெயரை இழக்கும் நிஸான் மேக்னைட்

குறிப்பாக மேக்னைட்டின் ஆரம்ப விலையான ரூ.5.49 லட்சத்தில் எந்த மாற்றமும் இல்லை. நிஸான் மேக்னைட் எக்ஸ்இ, எக்ஸ்எல், எக்ஸ்வி, எக்ஸ்வி ப்ரீமியம் மற்றும் எக்ஸ்வி ப்ரீமியம் (O) என்ற ஐந்து விதமான ட்ரிம் நிலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

3 மாதங்களில் 2வது முறையாக விலை அதிகரிப்பு!! மலிவான காம்பெக்ட் எஸ்யூவி கார் என்ற பெயரை இழக்கும் நிஸான் மேக்னைட்

என்ஜின் தேர்வுகளாக 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் உள்ளிட்டவையும், கியர்பாக்ஸ் தேர்வுகளாக மேனுவல் மற்றும் சிவிடி-யும் வழங்கப்படுகின்றன. இவற்றில் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மேனுவல் என்ஜின் உடன் வாங்கப்படும் எக்ஸ்எல் வேரியண்ட்டின் விலை ரூ.6.99 லட்சத்தில் இருந்து ரூ.7.29 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

3 மாதங்களில் 2வது முறையாக விலை அதிகரிப்பு!! மலிவான காம்பெக்ட் எஸ்யூவி கார் என்ற பெயரை இழக்கும் நிஸான் மேக்னைட்

அதேநேரம் இதே 1.0 லிட்டர்-பெட்ரோல் மேனுவல் தேர்வில் வாங்கப்படும் எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி ப்ரீமியம் (O) வேரியண்ட்களின் எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.7.82 லட்சத்தில் இருந்து ரூ.7.98 லட்சமாகவும், ரூ.8.72 லட்சத்தில் இருந்து ரூ.8.85 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

3 மாதங்களில் 2வது முறையாக விலை அதிகரிப்பு!! மலிவான காம்பெக்ட் எஸ்யூவி கார் என்ற பெயரை இழக்கும் நிஸான் மேக்னைட்

சிவிடி கியர்பாக்ஸ் உடன் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படும் எக்ஸ்எல், எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி ப்ரீமியம் (O) வேரியண்ட்களின் விலைகள் முறையே ரூ.7.89 லட்சத்தில் இருந்து ரூ.8.19 லட்சமாகவும், ரூ.8.59 லட்சத்தில் இருந்து ரூ.8.88 லட்சமாகவும், ரூ.9.49 லட்சத்தில் இருந்து ரூ.9.75 லட்சமாகவும் கொண்டுவரப்பட்டுள்ளன.

3 மாதங்களில் 2வது முறையாக விலை அதிகரிப்பு!! மலிவான காம்பெக்ட் எஸ்யூவி கார் என்ற பெயரை இழக்கும் நிஸான் மேக்னைட்

இந்த விலை அதிகரிப்பினால் நிஸான் மேக்னைட் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரின் அதிகப்பட்ச விலை ரூ.9.75 லட்சமாக உயர்ந்துள்ளது. மற்றப்படி 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் வாங்கப்படும் வேரியண்ட்கள் எதன் விலையிலும் கை வைக்கப்படவில்லை.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Magnite Price Hiked For The Second Time. Read In Tamil.
Story first published: Thursday, March 4, 2021, 2:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X