மேக்னைட் கொடுத்த நம்பிக்கை... கார்களின் விலையை துணிச்சலாக உயர்த்தும் நிஸான்!

ஏப்ரல் 1 முதல் கார் விலையை உயர்த்த இருப்பதாக நிஸான் நிறுவனம் அறிவித்துள்ளது. நிஸான் மற்றும் டட்சன் என இரண்டு பிராண்டுகளில் விற்பனை செய்யப்படும் கார்களின் விலையும் அதிகரிக்கப்பட உள்ளது.

ஏப்ரல் 1 முதல் நிஸான் மற்றும் டட்சன் கார்களின் விலை கணிசமாக உயர்கிறது!

கொரோனா பிரச்னை காரணமாக, கடந்த ஆண்டு கார் விலையை உயர்த்த முடியாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இருந்து கார் விற்பனையில் குறிப்பிடத்தக்க ஏற்றம் பெற்று வருகிறது. இதனால், கார் நிறுவனங்கள் உற்சாகமடைந்தன.

ஏப்ரல் 1 முதல் நிஸான் மற்றும் டட்சன் கார்களின் விலை கணிசமாக உயர்கிறது!

மேலும், கார் வர்த்தகம் ஸ்திரமான நிலையை மீண்டும் எட்டி இருப்பதால், கடந்த ஜனவரி மாதத்தில் பெரும்பாலான கார் நிறுவனங்கள் உற்பத்தி செலவீனம் மற்றும் மூலப்பொருட்களின் விலையை மனதில் வைத்து கார் விலையை உயர்த்தின.

ஏப்ரல் 1 முதல் நிஸான் மற்றும் டட்சன் கார்களின் விலை கணிசமாக உயர்கிறது!

இது வாடிக்கையாளர்களுக்கு சற்று கூடுதல் சுமையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், காலாண்டுக்கு ஒருமுறை சந்தை நிலையை வைத்து கார் விலையை உயர்த்துவது தயாரிப்பு நிறுவனங்களின் உத்தியாக உள்ளது.

ஏப்ரல் 1 முதல் நிஸான் மற்றும் டட்சன் கார்களின் விலை கணிசமாக உயர்கிறது!

அதன்படி, மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் உற்பத்தி செலவீனத்தை காரணம் காட்டி மாருதி சுஸுகி விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது நிஸான் நிறுவனமும் வரும் ஏப்ரல் 1 முதல் கார் விலையை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் நிஸான் மற்றும் டட்சன் கார்களின் விலை கணிசமாக உயர்கிறது!

இதுகுறித்து நிஸான் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவத்சவா கூறுகையில்,"கடந்த சில மாதங்களாகவே கார் தயாரிப்புக்கான உதிரிபாகங்கள் விலை அதிகரித்து வருகிறது. எனினும், வாடிக்கையாளர் நலன் கருதி, அந்த சுமையை ஏற்று வந்தோம்.

ஏப்ரல் 1 முதல் நிஸான் மற்றும் டட்சன் கார்களின் விலை கணிசமாக உயர்கிறது!

ஆனால், தொடர்ந்து மூலப்பொருட்கள், உதிரிபாகங்கள் விலை உயர்ந்து வருவதால், மேற்கொண்டு சுமையை ஏற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் 1ந் தேதி முதல் கார் விலையை உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளோம். நிஸான் மற்றும் டட்சன் கார்களின் விலை உயர்த்தப்பட உள்ளது. இருப்பினும், எங்களது கார்களின் விலை மதிப்பு வாய்ந்ததாகவே இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 1 முதல் நிஸான் மற்றும் டட்சன் கார்களின் விலை கணிசமாக உயர்கிறது!

கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்த ஆண்டில் கார் விலையை உயர்த்தும் முடிவை நிஸான் கையில் எடுத்துள்ளது. வேரியண்ட்டிற்கு தக்கவாறு விலை உயர்வு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் நிஸான் மற்றும் டட்சன் கார்களின் விலை கணிசமாக உயர்கிறது!

நிஸான் நிறுவனத்தின் மேக்னைட், கிக்ஸ், டட்சன் ரெடிகோ, கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் விலை வரும் 1ந் தேதி முதல் அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக, மேக்னைட் கார் வாங்க இருப்போருக்கு இது நிச்சயம் கூடுதல் சுமையாக இருக்கும்.

Most Read Articles
--

மேலும்... #நிஸான் #nissan
English summary
Japanese car makers, Nissan has announced that the company decided to hike car prices in India.
Story first published: Tuesday, March 23, 2021, 15:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X