பெட்ரோல், டீசல் கார்களை விட எலெக்ட்ரிக், ஹைப்ரிட் கார்கள் அதிகளவில் விற்பனையாகும் நாடு... எதுன்னு தெரியுமா?

நார்வேயில் எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் கார்களின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் கார்களை விட எலெக்ட்ரிக், ஹைப்ரிட் கார்கள் அதிகளவில் விற்பனையாகும் நாடு... எதுன்னு தெரியுமா?

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விஷயத்தில் நார்வே உலகிற்கே முன்னோடியாக திகழ்கிறது. அங்கு வழக்கமான ஐசி இன்ஜினில் இயங்க கூடிய கார்களின் விற்பனை எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

பெட்ரோல், டீசல் கார்களை விட எலெக்ட்ரிக், ஹைப்ரிட் கார்கள் அதிகளவில் விற்பனையாகும் நாடு... எதுன்னு தெரியுமா?

வரும் 2025ம் ஆண்டிற்குள், நார்வேயில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. நார்வேயில் கடந்த 2020ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட மொத்த கார்களின் எண்ணிக்கையில், முழு எலெக்ட்ரிக் கார்களின் பங்களிப்பு மட்டும் 54 சதவீதம் ஆகும்.

பெட்ரோல், டீசல் கார்களை விட எலெக்ட்ரிக், ஹைப்ரிட் கார்கள் அதிகளவில் விற்பனையாகும் நாடு... எதுன்னு தெரியுமா?

எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு நார்வே அரசு சலுகைகளை தாராளமாக வழங்கி வருவதுதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. நார்வே நடப்பாண்டு மார்ச் மாதம் வெறும் 730 பெட்ரோல் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல் கார்களின் சந்தை பங்கு வெறும் 4.8 சதவீதம் மட்டும்தான்.

பெட்ரோல், டீசல் கார்களை விட எலெக்ட்ரிக், ஹைப்ரிட் கார்கள் அதிகளவில் விற்பனையாகும் நாடு... எதுன்னு தெரியுமா?

அதேபோல் நடப்பாண்டு மார்ச் மாதம் வெறும் 723 டீசல் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. டீசல் கார்களின் சந்தை பங்கு வெறும் 4.7 சதவீதம்தான். அதாவது நார்வேயில் கடந்த மார்ச் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான கார்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையையும் 1,500க்கும் குறைவாகவே இருந்துள்ளது.

பெட்ரோல், டீசல் கார்களை விட எலெக்ட்ரிக், ஹைப்ரிட் கார்கள் அதிகளவில் விற்பனையாகும் நாடு... எதுன்னு தெரியுமா?

அதே சமயம் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் நார்வேயில் விற்பனை செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் விற்பனை எண்ணிக்கையில் பெட்ரோல் கார்களின் பங்களிப்பு 7.7 சதவீதமாகவும், டீசல் கார்களின் பங்களிப்பு 10 சதவீதமாகவும் இருந்தது. பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனை தற்போது வெகுவாக குறைந்துள்ளதை இந்த புள்ளி விபரங்கள் மூலம் உணரலாம்.

பெட்ரோல், டீசல் கார்களை விட எலெக்ட்ரிக், ஹைப்ரிட் கார்கள் அதிகளவில் விற்பனையாகும் நாடு... எதுன்னு தெரியுமா?

அதே நேரத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 26.3 சதவீதமாக இருந்த ஹைப்ரிட் கார்களின் சந்தை பங்கு நடப்பாண்டு மார்ச் மாதம் 34.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில், அனைத்து வகையான ஹைப்ரிட் கார்களும் அடங்கும். நார்வேயில் கடந்த மார்ச் மாதம் ஒட்டுமொத்தமாக 5,244 ஹைப்ரிட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல், டீசல் கார்களை விட எலெக்ட்ரிக், ஹைப்ரிட் கார்கள் அதிகளவில் விற்பனையாகும் நாடு... எதுன்னு தெரியுமா?

அதே நேரத்தில் நார்வேயில் கடந்த மார்ச் மாதம் 8,618 எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் மொத்த வாகன விற்பனையில், எலெக்ட்ரிக் வாகனங்களின் சந்தை பங்கு 56.2 சதவீதம் ஆகும். கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இது 55.9 சதவீதமாக இருந்தது. நார்வேயில் ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை வேகமாக உயர்ந்து வருவதை இது காட்டுகிறது.

பெட்ரோல், டீசல் கார்களை விட எலெக்ட்ரிக், ஹைப்ரிட் கார்கள் அதிகளவில் விற்பனையாகும் நாடு... எதுன்னு தெரியுமா?

நார்வேயில் வரும் காலங்களிலும் எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் 2025ம் ஆண்டிற்குள், நார்வேயில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என்ற இலக்கை, அந்த நாடு எவ்விதமான பிரச்னைகளும் இல்லாமல் எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

English summary
Norway: Electric, Hybrid Vehicle Sales Increasing - Here Are The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X