டீசல் சரக்கு வாகனங்களை ஓரம் கட்டுங்க! ஒரு தடவ சார்ஜ் பண்ணா 250கிமீ போகலாம்... M1KA சரக்கு இ-வாகனம் வெளியீடு!

ஒற்றை சார்ஜில் 250 கிமீ தூரம் போகக் கூடிய எலெக்ட்ரிக் சரக்கு வாகனத்தை ஒமெகா செய்கீ மொபிலிட்டி (Omega Seiki Mobility) இந்தியாவில் வெளியீடு செய்துள்ளது. இந்த வாகனத்தின் இன்னும் பிற முக்கிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

டீசல் சரக்கு வாகனங்களை ஓரம் கட்டுங்க! ஒரு தடவ சார்ஜ் பண்ணா 250கிமீ போகலாம்... M1KA சரக்கு இ-வாகனம் வெளியீடு!

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான ஒமெகா செய்கீ மொபிலிட்டி (Omega Seiki Mobility), இந்தியாவிற்கான முதல் மின்சாரத்தால் இயங்கும் சிறிய வர்த்தக வாகனத்தை (Small Commercial Vehicle) வெளியீடு செய்திருக்கின்றது. எம்1கேஏ (M1KA) எனும் பெயரில் வர்த்தக வாகனம் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

டீசல் சரக்கு வாகனங்களை ஓரம் கட்டுங்க! ஒரு தடவ சார்ஜ் பண்ணா 250கிமீ போகலாம்... M1KA சரக்கு இ-வாகனம் வெளியீடு!

இவ்வாகனத்திற்கான புக்கிங் பணிகள் 2021ம் ஆண்டின் இறுதி காலாண்டில் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், 2022 ஆண்டிற்குள் ஒமெகா செய்கீ மொபிலிட்டி நிறுவனத்தின் எம்1கேஏ எலெக்ட்ரிக் வர்த்தக வாகனம் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என தெரிகின்றது.

டீசல் சரக்கு வாகனங்களை ஓரம் கட்டுங்க! ஒரு தடவ சார்ஜ் பண்ணா 250கிமீ போகலாம்... M1KA சரக்கு இ-வாகனம் வெளியீடு!

வர்த்தக வாகன பயன்பாட்டாளர்களுக்கு அதிக லாபத்தை ஈட்டி தரும் நோக்கில் எம்1கேஏ எலெக்ட்ரிக் சிறிய வர்த்தக வாகனம் உருவாக்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. மிக சிறந்த செயல் திறன், நம்பகத் தன்மை மற்றும் குறைவான பராமரிப்பு செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எம்1கேஏ உருவாக்கப்பட்டிருக்கின்றது.

டீசல் சரக்கு வாகனங்களை ஓரம் கட்டுங்க! ஒரு தடவ சார்ஜ் பண்ணா 250கிமீ போகலாம்... M1KA சரக்கு இ-வாகனம் வெளியீடு!

டாடா ஏஸ் (Tata Ace), மாருதி சுசுகி சூப்பர் கேரி (Maruti Suzuki Super Carry), மஹிந்திரா ஜீதோ (Mahindra Jeeto) மற்றும் அசோக் லேலேண்ட் தோஸ்த் (Ashok Leyland Dost) ஆகிய எரிபொருள் எஞ்ஜின் கொண்ட மினி சரக்கு வாகனங்களுக்கு போட்டியாக மின்சார வெர்ஷனில் எம்1கேஏ விற்பனைக்கு வர உள்ளது.

டீசல் சரக்கு வாகனங்களை ஓரம் கட்டுங்க! ஒரு தடவ சார்ஜ் பண்ணா 250கிமீ போகலாம்... M1KA சரக்கு இ-வாகனம் வெளியீடு!

ஒமெகா செய்கீ நிறுவனம், எம்1கேஏ எலெக்ட்ரிக் வாகனத்தை அதன் ஃபரிதாபாத்தில் உள்ள மின் வாகன உற்பத்தி ஆலையில் வைத்தே தயாரிக்க இருக்கின்றது. இவ்வாகனத்தில் என்எம்சி அடிப்படையிலான 90kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இப்பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

டீசல் சரக்கு வாகனங்களை ஓரம் கட்டுங்க! ஒரு தடவ சார்ஜ் பண்ணா 250கிமீ போகலாம்... M1KA சரக்கு இ-வாகனம் வெளியீடு!

பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையத்தைப் பயன்படுத்தினால் வெறும் நான்கு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். அதுவே, வழக்கமான சார்ஜிங் மையங்களைப் பயன்படுத்தினால் பல மணி நேரங்களை நாம் செலவிட வேண்டியிருக்கும்.

டீசல் சரக்கு வாகனங்களை ஓரம் கட்டுங்க! ஒரு தடவ சார்ஜ் பண்ணா 250கிமீ போகலாம்... M1KA சரக்கு இ-வாகனம் வெளியீடு!

மேலும், எம்1கேஏ எலெக்ட்ரிக் வாகனத்தில் இரண்டு டன் வரையிலான பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். இதன் சேஸிஸ் அதிக உறுதியுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாகனத்தில் சிறந்த சஸ்பென்ஷனுக்காக ஆறு இலை ஸ்பிரிங்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது முன்பக்க சஸ்பென்ஷனின் அம்சமாகும். பின் பக்கத்தில் ஏழு இலை ஸ்பிரிங் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

டீசல் சரக்கு வாகனங்களை ஓரம் கட்டுங்க! ஒரு தடவ சார்ஜ் பண்ணா 250கிமீ போகலாம்... M1KA சரக்கு இ-வாகனம் வெளியீடு!

ஆகையால், அதிக லோடு ஏற்றினாலும் பெரியளவில் அலுங்கள், குலுங்கள்கள் இருக்காது என தெரிகின்றது. இரண்டு டன் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வகையில் பின் பக்கத்தில் பெரிய அளவில் இட வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதிக எடைக்கொண்ட பெரிய உருவ பொருட்களையும் சுலபமாக ஏற்றிச் செல்லும் வகையில் அது உருவாக்கப்பட்டிருக்கின்றது.

டீசல் சரக்கு வாகனங்களை ஓரம் கட்டுங்க! ஒரு தடவ சார்ஜ் பண்ணா 250கிமீ போகலாம்... M1KA சரக்கு இ-வாகனம் வெளியீடு!

ஆன்லைன் வர்த்தக நிறுவனம், டெலிவரி சேவை நிறுவனம், கொரியர் சர்வீஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயன்படும் வகையில் எம்1கேஏ வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. கார், இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ ஆகிய ரகங்களில் மட்டுமே மின் வாகனங்கள் விற்பனைக்கு வந்துக் கொண்டிருக்கின்ற நிலையில், விரைவில் நான்கு சக்கர வர்த்தக வாகனமாகவும் மின்சார வாகனம் விற்பனைக்கு வர இருப்பது அத்துறைச் சார்ந்தோருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

டீசல் சரக்கு வாகனங்களை ஓரம் கட்டுங்க! ஒரு தடவ சார்ஜ் பண்ணா 250கிமீ போகலாம்... M1KA சரக்கு இ-வாகனம் வெளியீடு!

இந்தியாவில் மின் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மானியம், வரி சலுகை உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த திட்டங்கள் முன்பைக் காட்டிலும் நாட்டில் அதிகளவில் மின் வாகனங்கள் பயன்பாட்டிற்கு பெருமளவில் உதவியிருக்கின்றன. இதேபோல் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஓஎஸ்எம் நிறுவனத்தின் எம்1கேஏ எலெக்ட்ரிக் வர்த்தக வாகனத்தின் விற்பனைக்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Omega seiki m1ka e commercial vehicle debuts in india with 250 km range
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X