இந்தியாவில் இ-வாகனங்களை அறிமுகம் செய்யும் ஒப்போ! எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான முழு விபரம்!

பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ மிக விரைவில் மின் வாகன உற்பத்தியில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் இ-வாகனங்களை அறிமுகம் செய்யும் ஒப்போ! எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான முழு விபரம்!

பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ மிக விரைவில் மின் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, '91மொபைல்ஸ்' ஆங்கில தளம் வெளியிட்டிருக்கும் செய்தியில், "பிபிகே எலெக்ட்ரானிக்ஸ் (BBK Electronics)-க்கு சொந்தமான ஒப்போ, ரியல்மீ மற்றும் ஒன்-ப்ளஸ் ஆகிய செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மிக விரைவில் இந்தியாவில் மின் வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன" என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இ-வாகனங்களை அறிமுகம் செய்யும் ஒப்போ! எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான முழு விபரம்!

இந்நிறுவனங்கள் ஏற்கனவே வெவ்வேறு விதமான வாகனங்களுக்கான வர்த்தக பதிவை செய்துவிட்டதாகவும் அது வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவித்துள்ளது. மின் வாகனங்கள் மற்றும் ஆளில்லாமல் ஓடக் கூடிய தானியங்கி வாகனங்கள் ஆகிய வாகனங்களுக்கான வர்த்தக பதிவை நிறுவனம் செய்திருக்கின்றது.

இந்தியாவில் இ-வாகனங்களை அறிமுகம் செய்யும் ஒப்போ! எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான முழு விபரம்!

சமீப காலமாக இந்தியாவில் மின் வாகனங்களின் அறிமுகம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. ஆகையால், ஒப்போவின் இந்திய வருகை பெரிய அளவில் ஆச்சரியத்தை வழங்கவில்லை. அதேநேரத்தில், தொடர்ச்சியாக செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் மின் வாகன உற்பத்தியில் களமிறங்கி வருவதனாலும், ஒப்போ நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தி பற்றிய தகவலும் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.

இந்தியாவில் இ-வாகனங்களை அறிமுகம் செய்யும் ஒப்போ! எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான முழு விபரம்!

அதேநேரத்தில், ஒப்போ செல்போன் பிரியர்கள் மத்தியில் இந்த தகவல் இனம் புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும், இவர்கள் மத்தியில் நிறுவனத்தின் மின் வாகன தயாரிப்புகள் எப்போது இந்தியா வரும் என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கின்றது. இதற்கான பதிலும் தற்போது வெளியாகி இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் இ-வாகனங்களை அறிமுகம் செய்யும் ஒப்போ! எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான முழு விபரம்!

ஒப்போ மின் வாகனங்களின் இந்திய வெளியீடு 2023ம் ஆண்டின் இறுதி அல்லது 2024ம் ஆண்டின் தொடக்கத்திற்குள் அரங்கேறிவிடும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், ஒப்போ நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் மிக விரைவில் இந்திய சாலைகளை அலங்கரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் இ-வாகனங்களை அறிமுகம் செய்யும் ஒப்போ! எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான முழு விபரம்!

துரதிர்ஷ்டவசமாக சில முக்கிய தகவல்களை வெளியிடப்படவில்லை. ஆம், ஒப்போ நிறுவனம் தான் எந்த மாதிரியான திறன் வசதிகள் கொண்ட மின் வாகனங்களை இந்திய சந்தைக்காக அர்பணிக்க இருக்கின்றது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில், மிக விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் இ-வாகனங்களை அறிமுகம் செய்யும் ஒப்போ! எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான முழு விபரம்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்த வண்ணம் இருக்கின்றது. ஆகையால், ஓலா கால் டாக்சி நிறுவனத்தை போல், ஒப்போ நிறுவனமும் இந்தியாவிலேயே மின் வாகன உற்பத்தி ஆலையை அமைத்து எலெக்ட்ரிக் வாகனங்களை தயார் செய்து விற்பனைச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் இ-வாகனங்களை அறிமுகம் செய்யும் ஒப்போ! எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான முழு விபரம்!

அதேநேரத்தில், நிறுவனம் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து மின் வாகனங்களை விற்பனைக்கு வழங்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இதுகுறித்த தகவல்களும் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் இ-வாகனங்களை அறிமுகம் செய்யும் ஒப்போ! எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான முழு விபரம்!

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார் பிரிவு 234 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. நிதி ஆண்டின் முதல் பாதியில் (செப்டம்பர் முதல் ஏப்ரல் வரை) சுமார் 6,261 எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இவ்வாறு தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

இந்தியாவில் இ-வாகனங்களை அறிமுகம் செய்யும் ஒப்போ! எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான முழு விபரம்!

இந்த மாதிரியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கி புதுமுக வாகன உற்பத்தி நிறுவனங்கள் வரை இந்தியாவில் அவர்களுடைய புதிய எலெக்ட்ரிக் தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வரிசையிலேயே தற்போது ஒப்போ, ரியல்மீ மற்றும் ஒன்ப்ளஸ் நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன.

Most Read Articles

English summary
Oppo planning to get into the ev segment in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X