செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரை எப்போது மாற்றலாம்?.. நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரை எப்போது மாற்றலாம் எப்போது மாற்ற வேண்டும்?, எதற்காக மாற்ற வேண்டும் என்பது பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரை எப்போது மாற்றலாம்?.. நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

இந்தியாவில் புதிய கார்களுக்கு இணையாக செகண்ட் ஹேண்ட் கார்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. எனவேதான், புதிய கார்களை விற்பனைச் செய்யும் ஷோ-ரூம்களுக்கு இணையாக பயன்படுத்திய கார்களை விற்பனைச் செய்யும் நிலையங்களும் அதிகளவில் உள்ளன.

செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரை எப்போது மாற்றலாம்?.. நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

இந்த சந்தை சற்று பெரியது என்பதால் பல முன்னணி நிறுவனங்கள்கூட பிரமாண்ட ஷோரூம்கள் அமைத்து பயன்படுத்திய கார்களை விற்பனைச் செய்து வருகின்றன. அந்தளவு யூஸ்டு கார்களுக்கு இந்தியாவில் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது.

செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரை எப்போது மாற்றலாம்?.. நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

விலை மற்றும் செலவீணம் குறைவு என்கிற காரணத்தினாலேயே பயன்படுத்திய கார்களை மக்கள் அதிகம் நாடுகின்றனர். குறிப்பாக, பட்ஜெட்டில் பிடித்த கார்களைகூட மிக எளிதில் வாங்க முடியும். அதாவது, குறைந்த விலையில் பெற முடியும். ஆகையால், இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் கார்களின் விற்பனை எப்போதும் அமோகம். ஆனால், அவை புதிய வாகனத்திற்கு இணையானவை அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும்.

செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரை எப்போது மாற்றலாம்?.. நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

எனவேதான், செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரை 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்குள் மாற்றி விடுவது சிறந்தது என்கின்றனர் வாகனத்துறை வல்லுநர்கள். இதற்கான ஐந்து காரணங்களையே இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரை எப்போது மாற்றலாம்?.. நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

பழைய கார், குறைந்த மதிப்பு

பயன்படுத்திய கார்கள் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கும். இதேபோன்றுதான், நாம் அதனை விற்கும்போது மிகக் குறைந்த மதிப்பிற்கே எடுக்கப்படும். அதிலும், செகண்ட் ஹேண்ட் காரை 3 முதல் 4 ஆண்டுகளைக் கடந்து விற்பனைச் செய்கையில் அதன் மதிப்பு பெருமளவில் குறைகின்றது.

செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரை எப்போது மாற்றலாம்?.. நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

தேய்மானத்தின் காரணமாக இந்த மதிப்பு குறைவு தன்னிச்சையாகவே நடைபெறுகின்றது. ஆகையால், வருடங்கள் செல்ல அதன் மதிப்பு என்பது குறைந்துக் கொண்டே செல்லும். இதன் காரணத்தினாலேயே இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரை விற்பனைச் செய்துவிட வேண்டும் என்கின்றனர்.

செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரை எப்போது மாற்றலாம்?.. நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

காலம் செல்ல செல்ல ஏறும் வயசு...

செகண்ட் ஹேண்டில் வாங்கப்படும் கார் ஏற்கனவே பழையது என்பதால் ஆண்டுகள் செல்ல செல்ல அதன் புதுப்பொலிவு குறைந்து பழைய வாகனத்தைப் போல் தென்படும். இது மீண்டும் நாம் விற்பனைக்குக் கொண்டு செல்கையில் காரின் மதிப்பு பல மடங்கு குறையும் நிலை உருவாகும்.

செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரை எப்போது மாற்றலாம்?.. நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

எனவேதான் 3 முதல் 5 ஆண்டுகள் பழைய நிலையில் வாங்கப்படும் கார்களை 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு உள்ளாகவே விற்றுவிட என்கின்றனர் வல்லுநர்கள். ஆண்டுகள் செல்ல செல்ல பழைய காரை பராமரிப்பதும் சற்று கடினம் ஆகிவிடும். இது அதிக செலவீணத்தை ஏற்படுத்தும்.

செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரை எப்போது மாற்றலாம்?.. நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

அதிக பராமரிப்பு செலவு

ஆண்டுகள் செல்ல செல்ல அதன் உருவம் பழையதாகுவதைப் போலவே தேய்மானமும் அதிகரிக்கும். மைலேஜ் இழப்பு, எஞ்ஜின் கோளாறுகள் என பல்வேறு சிக்கல்கள் உருவாகும். ஆகையால், மெக்கானிக்கிற்கு அதிக பணத்தை நாம் செலவிட நேரிடும். இந்த மாதிரியான சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே 7 அல்லது 8 ஆண்டுகள் பழைய காராக இருக்கும்போதே விற்றுவிட வேண்டும் என கூறப்படுகின்றது.

செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரை எப்போது மாற்றலாம்?.. நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

குறைந்த அம்சங்கள்

பழைய கார்களில் குறைந்தளவிலேயே சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதாவது, தற்போது விற்பனைக்கு வரும் கார் மாடல்களுடன் ஒப்பிடுகையில் 4 முதல் 5 ஆண்டுகள் பழைய கார்கள் மிகக் குறைந்தளவு சிறப்பம்சங்களையேக் கொண்டிருக்கின்றது. தொடுதிரை சிஸ்டம், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல்,புரஜெக்டர் ஹெட்லேம்ப் உள்ளிட்ட அம்சங்கள் அவற்றில் இடம்பெறுவதில்லை.

செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரை எப்போது மாற்றலாம்?.. நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

ஆனால், இப்போது விற்பனைக்குக் கிடைக்கும் பட்ஜெட் கார்களில்கூட இந்த அம்சங்கள் மிக தாரளமாக கிடைக்கின்றன. இதுவும் பழைய கார்களை உடனடியாக தூக்கிப்போட ஓர் காரணமாக வல்லுநர்கள் முன் வைக்கின்றனர். செகண்ட் ஹேண்ட் காரை பயன்பாட்டில் இருந்து தூக்கிவிட்டு புதிய கார்களை தேர்வு செய்வதன் வாயிலாக எண்ணற்ற சிறப்பம்சங்களின் அனுபவத்தை நம்மால் பெற முடியும்.

செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரை எப்போது மாற்றலாம்?.. நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

புதிய கார்கள் அதிக பாதுகாப்பானவை

செகண்ட் ஹேண்டில் வாங்கப்பட்ட கார்களில் நிச்சயம் பாதுகாப்பு அம்சங்கள் மிகக் குறைவாகவே இருக்கும். குறிப்பாக இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், பார்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர், உயர் வேக எச்சரிக்கை, ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை என பல்வேறு அம்சங்கள் தற்போதைய புதிய தலைமுறை கார்களில் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றன.

செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரை எப்போது மாற்றலாம்?.. நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

ஆனால், இவற்றை பழைய தலைமுறை கார்களில் பார்ப்பது மிக சிரமம். அதேசமயம், உங்களிடம் 7 முதல் 8 ஆண்டுகள் பழைய கார் பயன்பாட்டில் இருக்குமானால் அது எப்போது பிரேக்டவுண் ஆகும் என்பதே தெரியாது. இதுவும் செகண்ட் ஹேண்டில் வாங்கப்பட்ட பழைய காரை வெளியேற்ற காரணம் ஆகும்.

Most Read Articles

English summary
Owning A Used Car For A Longer Duration Is Not Really Good Idea: Here Is Why?.. Read In Tamil.
Story first published: Tuesday, May 25, 2021, 13:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X