மின்சார காரில் ரேஞ்ஜ் அதிகரிக்க புதிய திட்டம்... என்ன தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!

மின்சார காரில் ரேஞ்ஜை அதிகரிக்க பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

மின்சார காரில் ரேஞ்ஜ் அதிகரிக்க புதிய திட்டம்... என்ன தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!

பிரிட்டிஷ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஆரம்ப நிலை மின்வாகன உற்பத்தி நிறுவனம் பேஜ்-ராபர்ட்ஸ். இந்த நிறுவனமே மின் வாகனங்களில் ரேஞ்ஜை அதிகரிக்கச் செய்வதற்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் 30 சதவீதம் வரை கூடுதல் ரேஞ்ஜை பெற முடியும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.

மின்சார காரில் ரேஞ்ஜ் அதிகரிக்க புதிய திட்டம்... என்ன தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!

வழக்கமாக, மின் வாகனங்களுக்கான பேட்டரியை வாகன உற்பத்தி நிறுவனத்தின் கீழ் தளத்தில் அல்லது காரின் பிற பகுதிகளிலேயே நிலை நிறுத்தி வருகின்றன. இந்த செயலைதான் பேஜ்-ராபர்டஸ் நிறுவனம் மாற்றியமைத்திருக்கின்றது. இது, பேட்டரியை காரின் மையப்பகுதியில் கூம்பு வடிவத்தில் நிலை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளது.

மின்சார காரில் ரேஞ்ஜ் அதிகரிக்க புதிய திட்டம்... என்ன தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!

இதன் வாயிலாக கூடுதல் ரேஞ்ஜை மின்சார காரில் பெற முடியும் என நிறுவனம் கூறுகின்றது. பேட்டரிகள் சற்று அதிக எடைக் கொண்டவை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இவற்றை தற்போது வரை வாகன நிறுவனங்கள் காரின் கீழ் பகுதியில் சம தளமாக நிலை நிறுத்து வருகின்றன.

மின்சார காரில் ரேஞ்ஜ் அதிகரிக்க புதிய திட்டம்... என்ன தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!

இதனை மாற்றினால் என்னவாகும் என்பதனையே பேஜ்-ராபர்ட்ஸ் தற்போது ஆய்வு செய்திருக்கின்றது. இதற்காக கூம்பு வடிவிலான பேட்டரியை காரின் மையப்பகுதியில் அது நிலை நிறுத்தி ஆய்வு செய்திருக்கின்றது. தொடர்ந்து, காரின் வழக்கமான இருக்கை அமைப்பை மாற்றி, அதாவது, முன்னோக்கி பார்த்தவாறு இருக்கும் இருக்கையை பின் நோக்கி பார்க்கும் வகையில் மாற்றி ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றது.

மின்சார காரில் ரேஞ்ஜ் அதிகரிக்க புதிய திட்டம்... என்ன தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!

இந்த ஏற்பாடு வழக்கத்தை விட 30 மடங்கு அதிக வரம்பை வழங்கியிருக்கின்றது. இதுமட்டுமின்றி, கூடுதல் இட வசதியும் இதன் வாயிலாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதுபோன்று மாற்றங்களுடன் காரை வடிவமைப்பதனால் 36 சதவீதம் வரை உற்பத்தி செலவு குறையும் வாய்ப்புகள் உள்ளன என பேஜ்-ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளது.

மின்சார காரில் ரேஞ்ஜ் அதிகரிக்க புதிய திட்டம்... என்ன தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!

இந்த திட்டம் குறித்த ஆய்வை பேஜ்-ராபர்ட்ஸ் மேலும் தீவிரப்படுத்தியிருக்கின்றது. இருப்பினும், எந்தவொரு நிறுவனமும் இந்த யுக்தியை கையில் எடுத்ததாகத் தெரியவில்லை. 2019ம் ஆண்டில் இதுகுறித்த ஆய்வை நிறுவனம் மேற்கொண்டது. தற்போது இதன் அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

மின்சார காரில் ரேஞ்ஜ் அதிகரிக்க புதிய திட்டம்... என்ன தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!

உலக நாடுகள் அனைத்தும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மானியம், சிறப்பு தள்ளுபடி, வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி, இந்தியா போன்ற நாடுகள் மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன.

மின்சார காரில் ரேஞ்ஜ் அதிகரிக்க புதிய திட்டம்... என்ன தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தனது ஆய்வின் வாயிலாக சிறப்பு கண்டுபிடிப்பை பேஜ்-ராபர்ஸ்ட் வெளிக் கொண்டு வந்திருக்கின்றது. இது மின் வாகன பிரியர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Image Courtesy: Page-Roberts

Most Read Articles
English summary
Page-Roberts Unveiled Concept EV Promising 30 Percent Increase In Range. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X