ஜெர்மனியில் புதிய சாதனையை நிகழ்த்திய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ்!! மெர்சிடிஸ் ஏஎம்ஜி காரை முந்தியது!

போர்ஷேவின் 911 ஜிடி2 ஆர்எஸ் கார் நர்பர்க்ரிங் வளையத்தில் தயாரிப்பு கார் லேப் சாதனையை முறியடித்து ஆச்சிரியப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜெர்மனியில் புதிய சாதனையை நிகழ்த்திய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ்!! மெர்சிடிஸ் ஏஎம்ஜி காரை முந்தியது!

ஜெர்மனியில் உள்ள நர்பர்க்ரிங் வடக்கு வளைய சுற்று, கார் மற்றும் பைக்குகளில் புதிய புதிய சாதனைகளை மேற்கொள்வதற்கு சிறந்த பகுதியாக விளங்கி வருகிறது.

ஜெர்மனியில் புதிய சாதனையை நிகழ்த்திய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ்!! மெர்சிடிஸ் ஏஎம்ஜி காரை முந்தியது!

20.8கிமீ சுற்றளவு கொண்ட நர்பர்க்ரிங் சுற்றில், சாலையில் இயக்க அனுமதி பெற்ற கார்களின் லேப் பதிவுகள் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு, எப்போதுமே ஆச்சிரியப்படுத்தக் கூடியவைகளாகவே உள்ளன.

ஜெர்மனியில் புதிய சாதனையை நிகழ்த்திய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ்!! மெர்சிடிஸ் ஏஎம்ஜி காரை முந்தியது!

இந்த வகையில் சமீபத்திய அதிக வேகமான லேப் சாதனைக்கு போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் கார் சொந்தமாகியுள்ளது. இந்த போர்ஷே கார் நிர்ணயித்த லேப் நேரம் 6:43.300 ஆகும். உலகளவில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் கார்களை பொறுத்தவரையில் 911 ஜிடி2 ஆர்எஸ் காரின் இந்த லேப் நேரம் மிகவும் குறைவாகும்.

ஜெர்மனியில் புதிய சாதனையை நிகழ்த்திய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ்!! மெர்சிடிஸ் ஏஎம்ஜி காரை முந்தியது!

இதற்கு முந்தைய சாதனையாக இருந்த லேப் நேரம் 6:48.047 ஆகும். போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் கார் இதனை காட்டிலும் 4.747 வினாடிகள் முன்பாகவே லேப்-ஐ கடந்துள்ளது. இந்த சாதனையை நிகழ்த்த சராசரியாக மணிக்கு 185.87கிமீ வேகத்தில் இந்த போர்ஷே கார் இயக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் புதிய சாதனையை நிகழ்த்திய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ்!! மெர்சிடிஸ் ஏஎம்ஜி காரை முந்தியது!

இதற்கு முந்தைய சாதனையை மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி ப்ளாக் சீரிஸ் கார் நிகழ்த்தி இருந்தது. அதிகப்பட்சமாக 691 பிஎச்பி வரையில் என்ஜின் ஆற்றலை பெறக்கூடிய இந்த போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் காரை போர்ஷேவின் மேம்பாட்டு ஓட்டுனர் லார்ஸ் கெர்ன் இயக்கியுள்ளார்.

ஜெர்மனியில் புதிய சாதனையை நிகழ்த்திய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ்!! மெர்சிடிஸ் ஏஎம்ஜி காரை முந்தியது!

மேலும் இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சேசிஸ், ஏரோ டைனாமிக் மற்றும் ப்ரேக் பாகங்கள் அடங்கிய போர்ஷே தொழிற்நுட்ப பாகங்கள் இந்த போர்ஷே காரில் பொருத்தப்பட்டுள்ளன.

ஜெர்மனியில் புதிய சாதனையை நிகழ்த்திய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ்!! மெர்சிடிஸ் ஏஎம்ஜி காரை முந்தியது!

இவற்றுடன் இலகுவான மாங்கனீசு அலாய் சக்கரங்கள் மற்றும் சாலையில் பயன்படுத்த அனுமதி பெற்ற மிச்செலின் பைலட் ஸ்போர்ட் கப்2 ஆர் டயர்கள் உள்ளிட்டவை அடங்கிய வெய்சாச் தொகுப்பையும் இந்த கார் பெற்றுள்ளது.

ஜெர்மனியில் புதிய சாதனையை நிகழ்த்திய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ்!! மெர்சிடிஸ் ஏஎம்ஜி காரை முந்தியது!

போர்ஷே பொறியியலாளர்களுக்கும், மந்தே-ரேஸிங் ட்ராக் வல்லுநர்களுக்கும் இடையே பரஸ்பர நல்லுறவு உள்ளது. இந்த கூட்டணியிலேயே மேற்கூறப்பட்ட சிறப்பு தொகுப்புகளுடன் இந்த போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் கார் சாதனை புரிய வைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #போர்ஷே #porsche
English summary
Porsche 911 GT2 RS breaks Nurburgring production car lap record.
Story first published: Friday, June 25, 2021, 11:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X