யார் வாங்குனாங்களோ!! பிரத்யேகமான நிறத்தில் மூன்று 911 கார்களை டெலிவிரி செய்துள்ள போர்ஷே!

போர்ஷே 911 கார்கள் பிரத்யேகமான நிறங்களில் இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து டீம்பிஎச்பி செய்திதளம் மூலமாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

யார் வாங்குனாங்களோ!! பிரத்யேகமான நிறத்தில் மூன்று 911 கார்களை டெலிவிரி செய்துள்ள போர்ஷே!

வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இவை அதேபோல் அவர்கள் விருப்பி கேட்டு கொண்ட நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. இதில் இரு போர்ஷே 911 கரேரா எஸ் கூபேகளும், ஒரு 911 கரேரா எஸ் கேப்ரியோலெட் காரும் அடங்குகின்றன.

யார் வாங்குனாங்களோ!! பிரத்யேகமான நிறத்தில் மூன்று 911 கார்களை டெலிவிரி செய்துள்ள போர்ஷே!

911 கரேரா கேப்ரியோலெட் ரேசிங் மஞ்சள் நிற வெளிப்பக்கத்தையும், பளிச்சிடும் சிவப்பு நிறத்தில் உட்புறத்தையும் கொண்டுள்ளது. இந்த 911 கரேரா மாடல் டெல்லியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. இரு 911 கரேரா எஸ் கூபே கார்களில் ஒன்று அகமதாபாத்தில் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

யார் வாங்குனாங்களோ!! பிரத்யேகமான நிறத்தில் மூன்று 911 கார்களை டெலிவிரி செய்துள்ள போர்ஷே!

இந்த போர்ஷே கார் ஜிடி சில்வர் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. லாவா ஆரஞ்ச் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள மற்றொன்றை சண்டிகரை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் வாங்கியுள்ளார். இவற்றுடன் இவ்வாறு பிரத்யேகமாக பெயிண்ட் செய்யப்பட்ட தனது கார்கள் 17-ஐ விரைவில் இந்தியாவில் இந்த ஜெர்மன் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம் டெலிவிரி செய்யவுள்ளது.

யார் வாங்குனாங்களோ!! பிரத்யேகமான நிறத்தில் மூன்று 911 கார்களை டெலிவிரி செய்துள்ள போர்ஷே!

இதில் மிகவும் அரிதான போர்ஷே காரான மம்பா க்ரீன் பணமேராவும் ஒன்று ஆகும். போர்ஷேவின் ‘மாதிரிக்கு பெயிண்ட்' என்கிற திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த எந்தவொரு நிறத்தையும் தாங்கள் வாங்கும் போர்ஷே காருக்கு பெயிண்ட்டாக தேர்வு செய்யலாம்.

யார் வாங்குனாங்களோ!! பிரத்யேகமான நிறத்தில் மூன்று 911 கார்களை டெலிவிரி செய்துள்ள போர்ஷே!

அதேபோல் போர்ஷேவின் ‘எக்ஸ்ட்ரா' எனப்படும் கூடுதல் அலங்கரிப்பையும் பெறலாம். ஆனால் இதற்கெல்லாம் அதிகம் செலவாகும். போர்ஷே கார் ஒன்றை வாங்குவதே நம்மில் பலருக்கு கனவுதான், இதில் இத்தகைய பிரத்யேக பெயிண்ட்டை பணக்காரர்களே எதிர்பார்ப்பர்.

யார் வாங்குனாங்களோ!! பிரத்யேகமான நிறத்தில் மூன்று 911 கார்களை டெலிவிரி செய்துள்ள போர்ஷே!

இந்தியாவில் போர்ஷே பிராண்டில் தற்சமயம் 718, 911, பனமேரா மற்றும் கேயேன்னே என்ற நான்கு மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் மலிவான போர்ஷே காராக 718 ரூ.85,46,000 என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

யார் வாங்குனாங்களோ!! பிரத்யேகமான நிறத்தில் மூன்று 911 கார்களை டெலிவிரி செய்துள்ள போர்ஷே!

911 மாடலின் ஆரம்ப விலை ரூ.1,63,72,000. பனேமேராவின் விலைகள் ரூ.1,44,49,000-ல் இருந்தும், கேயேன்னேவின் விலைகள் ரூ.1,20,08,000-ல் இருந்து துவங்குகின்றன. இவற்றுடன் போர்ஷே விரைவில் மக்கன் மற்றும் முழு-எலக்ட்ரிக் டைகனையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

யார் வாங்குனாங்களோ!! பிரத்யேகமான நிறத்தில் மூன்று 911 கார்களை டெலிவிரி செய்துள்ள போர்ஷே!

இதில் ஆரம்பம் மற்றும் எஸ் என்ற இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ள மக்கனின் விலை 718 மாடலை காட்டிலும் குறைவானதாக நிர்ணயிக்கப்படலாம். பெட்ரோல் என்ஜின் உடன் வழங்கப்படவுள்ள இந்த போர்ஷே எஸ்யூவி காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.70 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம்.

யார் வாங்குனாங்களோ!! பிரத்யேகமான நிறத்தில் மூன்று 911 கார்களை டெலிவிரி செய்துள்ள போர்ஷே!

மிஷன் இ கான்செப்ட்டின் அடிப்படையிலான போர்ஷேவின் முதல் எலக்ட்ரிக் வாகனமான டைகன் சிபியூ முறையில் நம் நாட்டில் விற்பனைக்கு வரவுள்ளது. அதிகப்பட்சமாக 300-இல் இருந்து 400கிமீ தொலைவிற்கு காரை இயக்கி செல்லக்கூடிய 93.4kWh என்ற அதி-மின்னழுத்த லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு டைகன் எலக்ட்ரிக் காரில் வழங்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #போர்ஷே #porsche
English summary
Porsche India Delivers Three 911s Finished In Exclusive Colours Special Cars In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X