2ம் கட்ட பல பரீட்சையில் பிரபல நிறுவனத்தின் முதல் மின்சார கார்... இதன் அறிமுகம் எப்போது தெரியுமா?

போர்ஷே நிறுவனத்தின் முதல் மின்சார கார் இரண்டாம் கட்ட பல பரீட்சையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன் இக்கார் எப்போது அறிமுகமாக இருக்கின்றது என்பது பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

2ம் கட்ட பல பரீட்சையில் பிரபல நிறுவனத்தின் முதல் மின்சார கார்... இதன் அறிமுகம் எப்போது தெரியுமா?

உலக புகழ்பெற்ற சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷே அதன் முதல் மின்சார கார் பற்றிய தகவலை வெளியிட்டிருக்கின்றது. அதாவது, தனது முதல் மின்சார கார் எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது என்பது பற்றிய தகவலை வெளியிட்டிருக்கின்றது.

2ம் கட்ட பல பரீட்சையில் பிரபல நிறுவனத்தின் முதல் மின்சார கார்... இதன் அறிமுகம் எப்போது தெரியுமா?

போர்ஷேவின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்றான மசான் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் மசான் மின்சார கார் வரும் 2023ம் ஆண்டே அறிமுகமாக இருக்கின்றது. இதனையே நிறுவனமும் உறுதிப்படுத்தியிருக்கின்றது. இதன் அறிமுகத்திற்கு இன்னும் இரண்டு வருடங்கள் வரை இருக்கின்றநிலையில் தற்போது சோதனையோட்டத்தில் மசான் மின்சார கார் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.

2ம் கட்ட பல பரீட்சையில் பிரபல நிறுவனத்தின் முதல் மின்சார கார்... இதன் அறிமுகம் எப்போது தெரியுமா?

இந்த சோதனையோட்டத்திற்காக முதல் கட்டமாக 20 முன் மாதிரி மின்சார மசான் கார்களை போர்ஷே தயாரித்திருக்கின்றது. இவற்றைக் கொண்டே சாதக, பாதங்களை நிறுவனம் ஆராய்ந்து வருகின்றது. இத்துடன், தன்னுடைய மின்சார மசான் காரின் தரத்தை எந்த வகையில் எல்லாம் உயர்த்த வேண்டும் என்பதுகுறித்த ஆய்வையும் நிறுவனம் செய்து வருகின்றது.

2ம் கட்ட பல பரீட்சையில் பிரபல நிறுவனத்தின் முதல் மின்சார கார்... இதன் அறிமுகம் எப்போது தெரியுமா?

தற்போது தயார் செய்யப்பட்டிருக்கும் அனைத்து மசான் மின்சார கார்களும் அதன் உற்பத்தி ஆலைக்குள் வைத்தே பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. சோதனையில் காரின் ஏரோனைடமிக்ஸ் (அமைப்பு), திறன் மேம்பாடு மற்றும் பிற முக்கிய அம்சங்கள்குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2ம் கட்ட பல பரீட்சையில் பிரபல நிறுவனத்தின் முதல் மின்சார கார்... இதன் அறிமுகம் எப்போது தெரியுமா?

அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு மேலும் போர்ஷே மசான் மின்சார காரை மேம்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிக்கின்றன. ஆகையால், 2023ம் ஆண்டில் விற்பனைக்கு வரும் மசான் மின்சார கார் பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்டதாக வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2ம் கட்ட பல பரீட்சையில் பிரபல நிறுவனத்தின் முதல் மின்சார கார்... இதன் அறிமுகம் எப்போது தெரியுமா?

தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவது இரண்டாம் கட்ட பரிசோதனை ஓட்டம் என்று இதுபோன்று பல கட்ட சோதனையோட்டத்தில் போர்ஷே மசான் மின்சார கார் ஈடுபடுத்தப்பட இருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. இத்தகைய பல பரீட்சைகள் அனைத்து முடிவுக்கு வந்த பின்னர் இக்கார் 2023ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும்.

2ம் கட்ட பல பரீட்சையில் பிரபல நிறுவனத்தின் முதல் மின்சார கார்... இதன் அறிமுகம் எப்போது தெரியுமா?

இதன் இந்திய வருகைகுறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது போர்ஷே மசான் மின்சார கார் முன் மாதிரி மாடலாக உற்பத்தி செய்யப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதால் இதன் அறிமுகத்திற்கு பின்னர் இக்கார் எந்தெந்த நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கும் என்பது பற்றிய தகவலை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.

Most Read Articles

மேலும்... #போர்ஷே #porsche
English summary
Porsche Macan Electric Testing Launch In 2023. Read In Tamil.
Story first published: Tuesday, May 11, 2021, 18:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X