நவம்பர் 12இல் செம்ம சம்பவம் காத்திருக்கு... ஒரே நேரத்தில் இரு கார்களை அறிமுகம் செய்கிறது பிரபல கார் நிறுவனம்!

போர்ஷே நிறுவனம் அதன் டேகான் ஸ்போர்ட்ஸ் ரக காரை எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முக்கிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நவம்பர் 12இல் செம்ம சம்பவம் காத்திருக்கு... ஒரே நேரத்தில் இரு கார்களை அறிமுகம் செய்கிறது பிரபல கார் நிறுவனம்!

போர்ஷே (Porsche) நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் டேகான் (Taycan)மாடலும் ஒன்று. இது ஓர் ஸ்போர்ட்ஸ் ரக காராகும். இக்காரை நிறுவனம் மிக விரைவில் எலெக்ட்ரிக் கார் வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. இதனால், இக்காரின் மீதான எதிர்பார்ப்பு இந்திய சூப்பர் கார் பிரியர்கள் மத்தியில் சற்றே அதிகரித்துக் காணப்பட்டது.

நவம்பர் 12இல் செம்ம சம்பவம் காத்திருக்கு... ஒரே நேரத்தில் இரு கார்களை அறிமுகம் செய்கிறது பிரபல கார் நிறுவனம்!

ஆனால், இதற்கு ஆப்பு வைக்கும் வகையில் கோவிட் 19 வைரஸ் பரவல் அமைந்தது. வைரஸ் பரவலால் போன வருடம் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்க இருந்த டேகான் எலெக்ட்ரிக் கார் நடப்பாண்டு வரை நகர்ந்து வந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே டேகான் எலெக்ட்ரிக் கார் எதிர்பார்பாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் போர்ஷே நிறுவனம் ஓர் தகவலை வெளியிட்டிருக்கின்றது.

நவம்பர் 12இல் செம்ம சம்பவம் காத்திருக்கு... ஒரே நேரத்தில் இரு கார்களை அறிமுகம் செய்கிறது பிரபல கார் நிறுவனம்!

ஆம், எலெக்ட்ரிக் அறிமுக நாள் பற்றிய தகவலை நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. வரும் நவம்பர் மாதம் டேகான் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய போர்ஷே நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. புதுப்பிக்கப்பட்ட மஸான் காரை வரும் நவம்பர் 12ம் தேதி அன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இந்த நாளிலேயே டேகான் எலெக்ட்ரிக் காரும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

நவம்பர் 12இல் செம்ம சம்பவம் காத்திருக்கு... ஒரே நேரத்தில் இரு கார்களை அறிமுகம் செய்கிறது பிரபல கார் நிறுவனம்!

உலகளவில் டேகான் எலெக்ட்ரிக் சூப்பர் கார் மாடலுக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. ஏற்கனவே இக்காரின் 28,640 யூனிட்டுகளை நிறுவனம் விற்பனைச் செய்திருக்கின்றது. இது எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வெறும் ஒன்பதே மாதங்களில் பெற்ற அதீத விற்பனையாகும். இதுமாதிரியான சிறப்பான வரவேற்பு இந்தியாவிலும் கிடைக்கும் என போர்ஷே நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றது.

நவம்பர் 12இல் செம்ம சம்பவம் காத்திருக்கு... ஒரே நேரத்தில் இரு கார்களை அறிமுகம் செய்கிறது பிரபல கார் நிறுவனம்!

உலக நாடுகளில் போர்ஷே டேகான் எலெக்ட்ரிக் கார் 4எஸ், டர்போ மற்றும் டர்போ எஸ் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதில், 4எஸ் மாடலே ஆரம்ப நிலை தேர்வாகும். இதில், 79.2kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன் டர்போ வேரியண்டுகளில் 93.4kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

நவம்பர் 12இல் செம்ம சம்பவம் காத்திருக்கு... ஒரே நேரத்தில் இரு கார்களை அறிமுகம் செய்கிறது பிரபல கார் நிறுவனம்!

பேட்டரியை போலவே மின் மோட்டார் விஷயத்திலும் இந்த தேர்வுகள் மாறுபட்டு காட்சியளிக்கின்றன. 4எஸ் தேர்வில் 530 பிஎஸ் மற்றும் 640 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டாரும், டர்போ வேரியண்டில் 670 பிஎஸ் மற்றும் 850 என்எம் டார்க்கை வழங்கும் மின் மோட்டாரும், டர்போ எஸ் தேர்வில் 750 பிஎஸ் மற்றும் 1050 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டாரும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

நவம்பர் 12இல் செம்ம சம்பவம் காத்திருக்கு... ஒரே நேரத்தில் இரு கார்களை அறிமுகம் செய்கிறது பிரபல கார் நிறுவனம்!

தொடர்ந்து, ரேஞ்ஜ் விஷயத்திலும் இந்த தேர்வுகள் வித்தியாசங்களைக் கொண்டிருக்கின்றன. டேகான் எலெக்ட்ரிக் காரின் உச்சநிலை வேரியண்ட் ஓர் முழுமையான சார்ஜில் 500 கிமீ வரை ரேஞ்ஜை வழங்கும். இதற்காக உயர் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

நவம்பர் 12இல் செம்ம சம்பவம் காத்திருக்கு... ஒரே நேரத்தில் இரு கார்களை அறிமுகம் செய்கிறது பிரபல கார் நிறுவனம்!

இக்காருக்கு 800 வோல்ட் சார்ஜர் வழங்கப்படுகின்றது. மிக அதிக வேகத்தில் சார்ஜ் செய்வதற்காக இது வழங்கப்படுகின்றது. இந்த சார்ஜரில் வைத்து சார்ஜ் செய்யும்போது 400 கிமீ தூரம் பயணிப்பதற்கான திறனை வெறும் 15 நிமிடங்களிலேயே பெற்றுக் கொள்ள முடியும். மேலும், போர்ஷே டேகான் எலெக்ட்ரிக் கார் வெறும் 3.5 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது.

நவம்பர் 12இல் செம்ம சம்பவம் காத்திருக்கு... ஒரே நேரத்தில் இரு கார்களை அறிமுகம் செய்கிறது பிரபல கார் நிறுவனம்!

இத்தகைய சிறப்பு வசதிக் கொண்ட மின்சார காரையே போர்ஷே நிறுவனம் வரும் நவம்பர் 12ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இத்துடன் சேர்ந்து புதுப்பிக்கப்பட்ட மஸான் காரையும் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. கடந்த ஆண்டே இப்புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் மஸான் உலகளவில் நிறுவனம் வெளியீட்டைப் பெற்றது.

நவம்பர் 12இல் செம்ம சம்பவம் காத்திருக்கு... ஒரே நேரத்தில் இரு கார்களை அறிமுகம் செய்கிறது பிரபல கார் நிறுவனம்!

பன்முக சிறப்பம்சங்களைப் புதுப்பித்தலின் வாயிலாக மஸான் பெற்றிருக்கின்றது. உட்புறம் மற்றும் வெளிப்புறம் என அனைத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இக்கார் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.9 லிட்டர் வி6 எஞ்ஜின் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

நவம்பர் 12இல் செம்ம சம்பவம் காத்திருக்கு... ஒரே நேரத்தில் இரு கார்களை அறிமுகம் செய்கிறது பிரபல கார் நிறுவனம்!

போர்ஷே டேகான் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் ரூ. 2 கோடிக்கும் அதிகமான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. மஸான் ரூ. 80 லட்சத்திற்கும் அதிகமான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. பிரீமியம் அம்சங்கள் சேர்ப்பு மற்றும் புதுப்பித்தலின் காரணத்தினால் சற்று கூடுதல் விலையில் இக்கார் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #போர்ஷே #porsche
English summary
Porsche taycan ev and macan facelift india launch date revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X