புதிய போர்ஷே 911 ஜிடி3 டூரிங் கார் வெளியீடு!! முக்கியமான பின்பக்க இறக்கையை இழந்தது...

புதிய 911 ஜிடி3 ஸ்போர்ட்ஸ் காரை போர்ஷே நிறுவனம் உலகளவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய போர்ஷே காரை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய போர்ஷே 911 ஜிடி3 டூரிங் கார் வெளியீடு!! முக்கியமான பின்பக்க இறக்கையை இழந்தது...

விலையில்லா டூரிங் தொகுப்புடன் வெளியிடப்பட்டுள்ள புதிய போர்ஷே 911 ஜிடி3 காரில் மிக முக்கிய மாற்றமாக வழக்கமாக வழங்கப்படும் பின்பக்க இறக்கை நீக்கப்பட்டுள்ளது.

புதிய போர்ஷே 911 ஜிடி3 டூரிங் கார் வெளியீடு!! முக்கியமான பின்பக்க இறக்கையை இழந்தது...

இந்த அதிக செயல்திறன் கொண்ட வாகனம் குறைவான அம்சங்களை கொண்டுள்ளது எனவும், இந்த 911 ஜிடி3 கார் அதன் திறமைகளை வெளிப்படையாக காட்டாது எனவும் போர்ஷே தெரிவித்துள்ளது.

புதிய போர்ஷே 911 ஜிடி3 டூரிங் கார் வெளியீடு!! முக்கியமான பின்பக்க இறக்கையை இழந்தது...

1,418 கிலோ எடை கொண்டதாக உள்ள இந்த புதிய போர்ஷே ஸ்போட்ஸ் கார் 375 கிலோவாட்ஸ் என்ஜின் ஆற்றலில் இயங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய 911 ஜிடி3 காரில் 6-ஸ்பீடு ஜிடி கியர்பாக்ஸ் நிலையாக வழங்கப்பட்டுள்ளது.

புதிய போர்ஷே 911 ஜிடி3 டூரிங் கார் வெளியீடு!! முக்கியமான பின்பக்க இறக்கையை இழந்தது...

அதேநேரம் 7-ஸ்பீடு பிடிகே ட்யுல்-க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் தேர்வையும் இந்த ஸ்போர்ட்ஸ் காருடன் போர்ஷே வழங்கியுள்ளது. டூரிங் தொகுப்பாக வழங்கப்பட்டுள்ள இந்த கூடுதல் டிரான்ஸ்மிஷன் தேர்வு முதன்முறையாக எந்தவொரு கூடுதல் தொகையுமின்றி கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய போர்ஷே 911 ஜிடி3 டூரிங் கார் வெளியீடு!! முக்கியமான பின்பக்க இறக்கையை இழந்தது...

அதிவேகத்தில் செல்லும்போது தேவையான கீழ்நோக்கிய அழுத்தம் வழங்குவதை, பின்பக்க இறக்கை நீக்கப்பட்டதால், பின் ஸ்பாய்லர் கவனித்து கொள்ளும் என போர்ஷே தெரிவித்துள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், அனோடைஸ் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட சில்வர் நிற ஸ்ட்ரிப் அதிக பளபளப்பானதாக பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடிகளில் பார்டராக வழங்கப்பட்டுள்ளது.

புதிய போர்ஷே 911 ஜிடி3 டூரிங் கார் வெளியீடு!! முக்கியமான பின்பக்க இறக்கையை இழந்தது...

‘ஜிடி3 டூரிங்' லோகோவை நேர்த்தியான டிசைனில் பின்பக்க மூடிய க்ரில் பகுதியில் பார்க்க முடிகிறது. முன் விளக்குகள் அடர் நிறத்தில் டிண்ட் செய்யப்பட்டுள்ளன. உட்புறத்தில் ஸ்டேரிங் சக்கர ரிம், கியர் லிவர், மைய கன்சோலின் கவர், கதவு பேனல்களில் & கதவு கைப்பிடிகளில் ஆர்ம்ரெஸ்ட்கள் கருப்பு நிற லெதரால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

புதிய போர்ஷே 911 ஜிடி3 டூரிங் கார் வெளியீடு!! முக்கியமான பின்பக்க இறக்கையை இழந்தது...

இத்தகைய கருப்பு நிற உள்ளமைவு உண்மையில் புதிய 911 ஜிடி3 காரின் வெளிப்புற கருப்பு நிற பெயிண்ட்டிற்கு மிகவும் எடுப்பாக உள்ளது. டேஸ்போர்டின் முன்பகுதி மற்றும் கதவு பேனல்களின் மேற்பகுதி உள்ளிட்டவை பிரத்யேகமான புடைப்புடன் உள்ளன.

புதிய போர்ஷே 911 ஜிடி3 டூரிங் கார் வெளியீடு!! முக்கியமான பின்பக்க இறக்கையை இழந்தது...

மற்றப்படி, சக்கரங்கள், போர்ஷே டைனாமிக் லைட் சிஸ்டம் & போர்ஷே டைனாமிக் லைட் சிஸ்டம்+ உடன் எல்இடி ஹெட்லைட்கள், வெவ்வேறான உதவி அமைப்புகள், பிசிசிபி பீங்கான் ப்ரேக்கிங் சிஸ்டம், முன்பக்கத்தை தேவைப்படும் நேரத்தில் தூக்கும் லிஃப்ட் சிஸ்டம், க்ரோனோ தொகுப்பு மற்றும் ஆடியோ சிஸ்டங்கள் உள்ளிட்ட வசதிகள் அனைத்தையும் ஸ்டாண்டர்ட் 911 ஜிடி3 காரில் இருந்து 911 ஜிடி3 டூரிங் மாடல் பெற்றுள்ளது.

புதிய போர்ஷே 911 ஜிடி3 டூரிங் கார் வெளியீடு!! முக்கியமான பின்பக்க இறக்கையை இழந்தது...

இவற்றுடன் இந்த போர்ஷே காருக்கு வழங்கப்பட்டுள்ள டூரிங் தொகுப்பில் போர்ஷே வடிவமைப்பு மையத்தின் சிறப்பு ஃப்ளைபேக் கால வரைப்படமும் அடங்குகின்றது. புதிய போர்ஷே 911 ஜிடி3 காரில் சக்கரங்களின் டிசைனை 6 வெவ்வேறான வெர்சன்களில் இருந்து தேர்ந்தெடுக்கலாம்.

Most Read Articles

மேலும்... #போர்ஷே #porsche
English summary
Porsche 911 GT3 Touring (2022) Unveiled. Read All Datails In Tamil.
Story first published: Thursday, June 17, 2021, 22:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X