இந்தியாவில் தயாரிக்கப்படும், பிரவாக் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 எலக்ட்ரிக் செடான் கார்!! 2022இல் அறிமுகம்

பிரவாக் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 எலக்ட்ரிக் செடான் கார் அடுத்த 2022ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பிரவாக் டைனாமிக்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஆலோசனை கூட்ட நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் வெளியிடப்பட்டுள்ள விபரங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

இந்தியாவில் தயாரிக்கப்படும், பிரவாக் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 எலக்ட்ரிக் செடான் கார்!! 2022இல் அறிமுகம்

பெங்களூரை சேர்ந்த இவி ஸ்டார்ட்அப் நிறுவனம் பிரவாக் டைனாமிக்ஸ். இதன் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 தயாரிப்பிற்கு பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், இந்த எலக்ட்ரிக் செடான் காரை கடந்த ஆண்டு இறுதியில் தயாரிப்பு நிறுவனம் வெளியீடு செய்தது.

இந்தியாவில் தயாரிக்கப்படும், பிரவாக் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 எலக்ட்ரிக் செடான் கார்!! 2022இல் அறிமுகம்

அதனை தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்தில், ஜனவரி மாதத்தில் இந்த எலக்ட்ரிக் காரின் உட்புற கேபினை பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இருப்பினும் இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த எலக்ட்ரிக் செடான் காரின் அறிமுகம் எப்போது இருக்கும் என்பதில் ஒரு உறுதியான தகவல் எதுவும் இல்லாமல் இருந்தது.

இந்தியாவில் தயாரிக்கப்படும், பிரவாக் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 எலக்ட்ரிக் செடான் கார்!! 2022இல் அறிமுகம்

இந்த நிலையில் இன்று (செப்.24) பிற்பகலில் பிரவாக் டைனாமிக்ஸ் நிறுவனம் சார்பில், தொழில்துறை ஆலோசனை கூட்ட நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரவாக் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 எலக்ட்ரிக் காரின் அறிமுகம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தியாவில் தயாரிக்கப்படும், பிரவாக் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 எலக்ட்ரிக் செடான் கார்!! 2022இல் அறிமுகம்

அதன்படி எக்ஸ்டிங்ஷன் எம்கே1 வருகிற 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2022ல் 2,500 கார்களையும், 2023ல் ஒரு இலட்ச கார்களையும், 2025ஆம் ஆண்டிற்குள்ளாக ஒரு மில்லியன் கார்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரவாக் டைனாமிக்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும், பிரவாக் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 எலக்ட்ரிக் செடான் கார்!! 2022இல் அறிமுகம்

முதற்கட்டமாக டாக்ஸி பயன்பாட்டிற்காக மட்டுமே எலக்ட்ரிக் கார்களை பிரவாக் தயாரிக்கவுள்ளது. அதாவது எலக்ட்ரிக் கார்களை தயாரித்து டாக்ஸி பயன்பாட்டில் இந்த நிறுவனம் உட்படுத்தவுள்ளது. பிரவாக் டாக்ஸியை வாடிக்கையாளர்கள் பிரவாக் செயலியின் மூலம் புக் செய்து கொள்ளலாமாம்.

இந்தியாவில் தயாரிக்கப்படும், பிரவாக் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 எலக்ட்ரிக் செடான் கார்!! 2022இல் அறிமுகம்

இந்த டாக்ஸி வணிகத்திற்காக பயண பகிர்வு செயலியை உருவாக்கவுள்ள பிரவாக் டைனாமிக்ஸ் நிறுவனம், டாக்ஸி ஓட்டுனர்களாக நியமிக்கப்பட உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது. எதிர்காலத்தில் பிரவாக் டைனாமிக்ஸ் தயாரிக்கவுள்ள எலக்ட்ரிக் கார்கள் அனைத்துமே தொழிற்நுட்ப அம்சங்கள் மிகுந்ததாக இருக்கும் என இந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளனர்.

இந்தியாவில் தயாரிக்கப்படும், பிரவாக் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 எலக்ட்ரிக் செடான் கார்!! 2022இல் அறிமுகம்

எந்த அளவிற்கு என்றால், பிரவாக் எலக்ட்ரிக் கார்கள் நேரடியாக மெர்சிடிஸ்-மேபக் கார்களுக்கு போட்டியாக இருக்குமாம். மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களை காட்டிலும், மெர்சிடிஸ்-பேமக் கார்கள் கூடுதல் லக்சரி தரத்திலானவை மற்றும் விலைமிக்கவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில், பிரவாக் எக்ஸ்டிங்ஷன் எலக்ட்ரிக் செடான், தானியங்கி நிலை-2 திறன்களை கொண்டதாக வடிவமைக்கப்பட உள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும், பிரவாக் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 எலக்ட்ரிக் செடான் கார்!! 2022இல் அறிமுகம்

அதன்பின் சந்தை நிலைப்பாட்டை பொறுத்து இந்த தானியங்கி திறன்கள் அதிகரிக்கப்பட உள்ளன. டாக்ஸி பயன்பாட்டிற்காக அல்லாமல், தனிப் பயன்பாட்டிற்காக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ள எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே அதிகரிக்கப்பட்ட தானியங்கி நிலை-2 திறன்களை கொண்டவைகளாக இருக்கும் என்கிறது பிரவாக் டைனாமிக்ஸ்.

இந்தியாவில் தயாரிக்கப்படும், பிரவாக் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 எலக்ட்ரிக் செடான் கார்!! 2022இல் அறிமுகம்

தங்களது எலக்ட்ரிக் காரில் பொருத்தவுள்ள பேட்டரிகளை இந்த பெங்களூர் ஸ்டார்ட்-அப் நிறுவனமே அதன் தொழிற்சாலையில் தயாரிக்கவுள்ளது. பேட்டரி மட்டுமல்ல, காரின் மற்ற பாகங்களும் பிரவாக் நிறுவனத்தின் தொழிற்சாலையில் தான் உருவாக்கப்பட உள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்படும், பிரவாக் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 எலக்ட்ரிக் செடான் கார்!! 2022இல் அறிமுகம்

ஆனால் தானியங்கி தொழிற்நுட்பங்கள் அமெரிக்காவை சேர்ந்த என்விடியா (NVIDIA) நிறுவனத்திடம் இருந்தும், சக்கரங்களில் பொருத்தப்பட உள்ள டயர்கள் சியாட் நிறுவனத்திடம் இருந்தும் பெறப்பட உள்ளன. அதேபோல் பிரீமியம் சவுண்ட் சிஸ்டத்தை டெவியாலெட் நிறுவனத்தில் இருந்து வாங்க பிரவாக் டைனாமிக்ஸ் முடிவெடுத்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும், பிரவாக் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 எலக்ட்ரிக் செடான் கார்!! 2022இல் அறிமுகம்

இருப்பினும் இந்தியாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் கார் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 என பிரவாக் நிறுவனம் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு தைரியமாக சொல்லலாம். ஏனெனில் இந்தியாவின் லக்சரி எலக்ட்ரிக் செடான் கார் என்கிற அடையாளத்துடனே இந்த இவி மாடல் கொண்டுவரப்படுகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும், பிரவாக் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 எலக்ட்ரிக் செடான் கார்!! 2022இல் அறிமுகம்

பிரவாக் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 எலக்ட்ரிக் செடானில் 96 kHw பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட உள்ளதாக இதுவரையில் நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன. இந்த பேட்டரி அதிகப்பட்சமாக 200 எச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது. இதன் உதவியுடன் இந்த எலக்ட்ரிக் காரில் அதிகப்பட்சமாக மணிக்கு 196கிமீ வேகத்தில் செல்ல முடியுமாம். அதேபோல் இந்த இந்திய எலக்ட்ரிக் செடான் காரின் ரேஞ்ச் 500கிமீ-க்கு மேல் கொண்டுவரப்படும் எனவும் கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
Pravaig Dynamics will launch its car in 2022.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X