இவ்ளோ கெடைக்குதா? மைலேஜை வாரி வழங்கும் ரெனால்ட் கைகர் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ரெனால்ட் கைகர் காரின் அராய் மைலேஜ் விபரங்கள் வெளியாகியுள்ளன. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இவ்ளோ கெடைக்குதா? மைலேஜை வாரி வழங்கும் ரெனால்ட் கைகர் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ரெனால்ட் நிறுவனம் தனது கைகர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார், அராய் அமைப்பின் சோதனையில், ஒரு லிட்டருக்கு 20.5 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இதுதான் இந்த செக்மெண்ட்டிலேயே சிறப்பான மைலேஜ் என ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்ளோ கெடைக்குதா? மைலேஜை வாரி வழங்கும் ரெனால்ட் கைகர் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

அதாவது ரெனால்ட் கைகர் தன்னை எதிர்த்து போட்டியிடும் வேறு எந்த பெட்ரோல் கார்களுடனும் ஒப்பிடுகையில் இதுதான் சிறப்பான மைலேஜ் என்பது ரெனால்ட் நிறுவனத்தின் கருத்து. ரெனால்ட் கைகர் காரில் இரண்டு 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் ஒன்று டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும். மற்றொன்று நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின்.

இவ்ளோ கெடைக்குதா? மைலேஜை வாரி வழங்கும் ரெனால்ட் கைகர் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இதில், டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஎஸ் பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ரெனால்ட் கைகர் காரில், மேனுவல், ஏஎம்டி மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இவ்ளோ கெடைக்குதா? மைலேஜை வாரி வழங்கும் ரெனால்ட் கைகர் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ரெனால்ட் கைகர் காரில், ஸ்பிளிட் ஹெட் லைட்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், 16 இன்ச் அலாய் வீல்கள், C வடிவ எல்இடி டெயில் லைட்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. RXE, RXL, RXT, RXT (O) மற்றும் RXZ என மொத்தம் 5 வேரியண்ட்களில் ரெனால்ட் கைகர் கார் கிடைக்கும். ரெனால்ட் கைகர் காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்ளோ கெடைக்குதா? மைலேஜை வாரி வழங்கும் ரெனால்ட் கைகர் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இதில், 8 இன்ச் டச் ஸ்க்ரீன், 7 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, கூல்டு க்ளவ் பாக்ஸ், ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் பிஎம் 2.5 ஃபில்டர் ஆகியவை முக்கியமானவை. இந்தியாவில் கிடைக்கும் மிகவும் மலிவான சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ரெனால்ட் கைகரும் ஒன்று.

இவ்ளோ கெடைக்குதா? மைலேஜை வாரி வழங்கும் ரெனால்ட் கைகர் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ஏனெனில் இந்த காரின் ஆரம்ப விலை வெறும் 5.64 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.09 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்திய சந்தையில் ரெனால்ட் கைகர் காரின் போட்டியாளர்கள் என எடுத்து கொண்டால், மிக நீண்ட பட்டியலையே வழங்க வேண்டியிருக்கும்.

இவ்ளோ கெடைக்குதா? மைலேஜை வாரி வழங்கும் ரெனால்ட் கைகர் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, நிஸான் மேக்னைட், டாடா நெக்ஸான், கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300, டொயோட்டா அர்பன் க்ரூஸர் உள்ளிட்ட கார்களுடன் ரெனால்ட் கைகர் போட்டியிட்டு வருகிறது. சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் மிகவும் சவால் நிறைந்தது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

இவ்ளோ கெடைக்குதா? மைலேஜை வாரி வழங்கும் ரெனால்ட் கைகர் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்த செக்மெண்ட்டில் குறைந்தபட்சம் ஒரு தயாரிப்பையாவது வைத்திருக்க வேண்டும் என அனைத்து நிறுவனங்களும் விரும்புகின்றன. ஏனெனில் இந்த செக்மெண்ட்டை சேர்ந்த கார்களை வாடிக்கையாளர்கள் அதிகமாக தேர்வு செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் இந்த செக்மெண்ட்டில் இருந்து வெளியேறியுள்ளது.

இவ்ளோ கெடைக்குதா? மைலேஜை வாரி வழங்கும் ரெனால்ட் கைகர் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

கடும் நஷ்டம் காரணமாக ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தையை விட்டு வெளியேறுவதுதான் இதற்கு காரணம். எனினும் வரும் காலங்களில் இன்னும் நிறைய கார்கள் இந்த செக்மெண்ட்டில் விற்பனைக்கு வரவுள்ளன. எனவே ஏற்கனவே கடுமையான போட்டி இருக்கும் நிலையில், வரும் காலங்களில் இந்த செக்மெண்ட்டில் போட்டி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்ளோ கெடைக்குதா? மைலேஜை வாரி வழங்கும் ரெனால்ட் கைகர் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

தற்போது இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகி வரும் ரெனால்ட் நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக கைகர் திகழ்கிறது. அந்த காரின் மிக குறைவான விலையே காரணம். குறைவான விலை என்றாலும் ரெனால்ட் நிறுவனம் வசதிகளை நிறைவாக வழங்கியுள்ளது. அத்துடன் ரெனால்ட் கைகர் கார் சிறப்பான மைலேஜையும் வழங்குகிறது.

இவ்ளோ கெடைக்குதா? மைலேஜை வாரி வழங்கும் ரெனால்ட் கைகர் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

எனவே வரும் காலங்களில் ரெனால்ட் கைகர் காரின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த செக்மெண்ட்டை பொறுத்தவரை, சமீப காலமாக டாடா நெக்ஸான் காரின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் மிகவும் பாதுகாப்பான ஒன்றாக டாடா நெக்ஸான் இருப்பதுதான் இதற்கு காரணம்.

Most Read Articles
English summary
Renault kiger arai mileage details
Story first published: Monday, October 18, 2021, 22:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X