நம்ப முடியாத மிக குறைவான விலையில் ரெனால்ட் கைகர் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க தோணும்...

ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் ரெனால்ட் கைகர் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க தோணும்...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி இன்று (பிப்ரவரி 15) முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. 5.45 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் ரெனால்ட் கைகர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அறிமுக சலுகை விலையாகும். முழுமையான விலை விபரத்தை நீங்கள் கீழே காணலாம்.

Variant RXE RXL RXT RXZ
ENERGY MT ₹5.45 Lakh ₹6.14 Lakh ₹6.60 Lakh ₹7.55 Lakh
EASY-R AMT ₹6.59 Lakh ₹7.05 Lakh ₹8.00 Lakh
TURBO MT ₹7.14 Lakh ₹7.60 Lakh ₹8.55 Lakh
X-TRONIC CVT ₹8.60 Lakh ₹9.55 Lakh
நம்ப முடியாத மிக குறைவான விலையில் ரெனால்ட் கைகர் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க தோணும்...

ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கான முன்பதிவு இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. CMFA+ பிளாட்பார்ம் அடிப்படையில் ரெனால்ட் கைகர் கட்டமைக்கப்பட்டுள்ளது. ரெனால்ட் ட்ரைபர், க்விட் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய கார்களிலும் இதே பிளாட்பார்ம்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் ரெனால்ட் கைகர் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க தோணும்...

ரெனால்ட் கைகர் காரின் நீளம் 3,991 மிமீ. அகலம் 1,750 மிமீ. உயரம் 1,600 மிமீ. வீல் பேஸ் நீளம் 2,500 மிமீ. ரெனால்ட் கைகர் காரின் பூட் ஸ்பேஸ் 405 லிட்டர்கள். பின் வரிசை இருக்கைகளை மடித்து வைத்து கொள்வதன் மூலம் இதனை 879 லிட்டர்களாக அதிகரித்து கொள்ள முடியும். இந்த காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 205 மிமீ. 16 இன்ச் அலாய் வீல்களில் இந்த கார் ஓடுகிறது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் ரெனால்ட் கைகர் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க தோணும்...

இந்த காரில் ஸ்பிளிட், முழு எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. பின் பகுதியில் 'C' வடிவ எல்இடி டெயில் லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறைவான விலையில் வந்திருந்தாலும், ரெனால்ட் கைகர் காரில் வசதிகளுக்கு பஞ்சமில்லை. இதன்படி இந்த காரில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் ரெனால்ட் கைகர் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க தோணும்...

மேலும் 7.0 இன்ச் டிஎஃப்டி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்ப்ளேவும் இடம்பெற்றுள்ளது. மேலும் கீ-லெஸ் எண்ட்ரி, புஷ்-பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் ஸ்மாட்போன் சார்ஜிங் மற்றும் கனெக்டிவிட்டி, பிஎம் 2.5 ஏர் ஃபில்டர் உள்ளிட்ட வசதிகளையும் ரெனால்ட் கைகர் பெற்றுள்ளது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் ரெனால்ட் கைகர் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க தோணும்...

பாதுகாப்பை பொறுத்தவரை, நான்கு ஏர்பேக்குகள், ஏபிஎஸ், ரியர் வியூ கேமரா மற்றும் பார்க்கிங் சென்சார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ரெனால்ட் கைகர் காரின் கேபின் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் விசாலமாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தாராளமான ஸ்டோரேஜ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் ரெனால்ட் கைகர் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க தோணும்...

72 ஹெச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 100 ஹெச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகள் ரெனால்ட் கைகர் காரில் வழங்கப்படுகின்றன. இந்த இரண்டு இன்ஜின் தேர்வுகள் உடனும், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் ரெனால்ட் கைகர் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க தோணும்...

அதே சமயம் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின், 5 ஸ்பீடு ஏஎம்டி தேர்வையும், டர்போ பெட்ரோல் இன்ஜின் 5 ஸ்டெப் சிவிடி தேர்வையும் பெற்றுள்ளன. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, நிஸான் மேக்னைட் உள்ளிட்ட கார்களுடன் ரெனால்ட் கைகர் போட்டியிடும்.

Most Read Articles
English summary
Renault Kiger Compact SUV Launched In India - Here Are All The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X