ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா?

ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் உயர்ந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா?

ரெனால்ட் கைகர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் காத்திருப்பு காலம் 16 வாரங்களாக உயர்ந்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் நடப்பாண்டு தொடக்கத்தில்தான் கைகர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. குறைவான விலை காரணமாக உடனடியாக வாடிக்கையாளர்களை ரெனால்ட் கைகர் கவர்ந்தது.

ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா?

வேரியண்ட் வாரியாக காத்திருப்பு காலத்தை ரெனால்ட் நிறுவனம் வெளியிடவில்லை. எனினும் புகழ்பெற்ற வேரியண்ட்களான ஆர்எக்ஸ்டி, ஆர்எக்ஸ்இஸட் போன்ற வேரியண்ட்களின் காத்திருப்பு காலம் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ரெனால்ட் கைகர் காரில் மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அவை இரண்டுமே பெட்ரோல் இன்ஜின்கள்தான்.

ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா?

இதில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் மூன்று-சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 70 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. அதே சமயம் 5 ஸ்பீடு ஏஎம்டி தேர்வு ஆப்ஷனலாக வழங்கப்பட்டு வருகிறது.

ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா?

இதுதவிர 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் ரெனால்ட் கைகர் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 97 பிஹெச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ரெனால் கைகர் காரில் வசதிகளுக்கும் பஞ்சமில்லை.

ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா?

ரெனால்ட் கைகர் காரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், வயர்லெஸ் சார்ஜர், 8 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் என ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் பாதுகாப்பு வசதிகளிலும் ரெனால்ட் நிறுவனம் குறை வைக்கவில்லை. 4 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் என ஏராளமான வசதிகளை ரெனால்ட் கைகர் பெற்றுள்ளது.

ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா?

சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களை வாங்குபவர்கள் மட்டுமல்லாது, ஹேட்ச்பேக் வாடிக்கையாளர்களையும் ரெனால்ட் கைகர் தன்பக்கம் ஈர்த்துள்ளது. இதற்கு அதன் குறைவான விலைதான் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. கைகர் காருக்கு அதிக டிமாண்ட் இருந்து வருவதற்கு, அதன் குறைவான விலைக்குதான் ரெனால்ட் நிறுவனம் நன்றி சொல்ல வேண்டும்.

ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா?

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் நிஸான் மேக்னைட் உள்ளிட்ட கார்களுடன் ரெனால்ட் கைகர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் போட்டியிட்டு வருகிறது.

ரெனால்ட் கைகர் காரின் காத்திருப்பு காலம் அதிகரிப்பு... இவ்வளவு வாரங்கள் வெயிட் பண்ணணுமா?

ரெனால்ட் கைகர் மட்டுமல்லாது, பொதுவாக சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் அனைத்து கார்களுக்குமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. எனவே முன்னணி நிறுவனங்கள் பலவும் தொடர்ச்சியாக இந்த செக்மெண்ட்டில் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. எனவே வரும் காலங்களில் இந்த செக்மெண்ட்டில் போட்டி பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles
English summary
Renault Kiger Compact SUV Waiting Period In India Stretches To 16 Weeks. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X