ரெனால்ட் கிகரில் புதிய ஆர்.எக்ஸ்.டி(O) வேரியண்ட்!! ரூ.7.37 லட்சத்தில் அறிமுகம்!

ரெனால்ட் கிகரில் புதிய ஆர்.எக்ஸ்.டி(O) என்கிற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெனால்ட்டின் இந்த புதிய கிகர் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ரெனால்ட் கிகரில் புதிய ஆர்.எக்ஸ்.டி(O) வேரியண்ட்!! ரூ.7.37 லட்சத்தில் அறிமுகம்!

ரெனால்ட் நிறுவனம் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் கிகர் காரில் புதிய ட்ரிம் நிலையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு முன் ரெனால்ட் கிகர் மாடல் ஆர்.எக்ஸ்.இ, ஆர்.எக்ஸ்.எல், ஆர்.எக்ஸ்.டி மற்றும் ஆர்.எக்ஸ்.இசட் என்ற நான்கு ட்ரிம் நிலைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ரெனால்ட் கிகரில் புதிய ஆர்.எக்ஸ்.டி(O) வேரியண்ட்!! ரூ.7.37 லட்சத்தில் அறிமுகம்!

ஆனால் புதியதாக ஆர்.எக்ஸ்.டி(O) ட்ரிம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், கிகரின் ட்ரிம் நிலைகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கவுள்ள இந்த புதிய ட்ரிம்-இன் எக்ஸ்-ஷோரூம் விலை மேனுவல் தேர்வில் ரூ.7.37 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் கிகரில் புதிய ஆர்.எக்ஸ்.டி(O) வேரியண்ட்!! ரூ.7.37 லட்சத்தில் அறிமுகம்!

அதேநேரம் ஆட்டோமேட்டிக் தேர்வில் சற்று அதிகமாக ரூ.7.87 லட்சமாக விலை கொண்டுவரப்பட்டுள்ளது. இன்றில் (ஆகஸ்ட் 6) இருந்து கிகர் ஆர்.எக்ஸ்.டி(O) காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் இரட்டை-நிற தேர்விலும் கிகரின் இந்த புதிய வேரியண்ட்டை முன்பதிவு செய்யலாம்.

ரெனால்ட் கிகரில் புதிய ஆர்.எக்ஸ்.டி(O) வேரியண்ட்!! ரூ.7.37 லட்சத்தில் அறிமுகம்!

ஆனால் அதற்கு கூடுதலாக ரூ.20,000 செலுத்த வேண்டிவரும். கிகரின் ஆர்.எக்ஸ்.டி ட்ரிம்மிற்கும், ஆர்.எக்ஸ்.இசட் ட்ரிம்மிற்கும் இடையில் இந்த புதிய ட்ரிம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த இரு ட்ரிம்களில் வழங்கப்படும் அம்சங்கள் இந்த புதிய ஆர்.எக்ஸ்.டி(O) ட்ரிம்மிலும் வழங்கப்பட்டுள்ளன.

ரெனால்ட் கிகரில் புதிய ஆர்.எக்ஸ்.டி(O) வேரியண்ட்!! ரூ.7.37 லட்சத்தில் அறிமுகம்!

கிகர் ஆர்.எக்ஸ்.டி ட்ரிம்-ஐ காட்டிலும் ரூ.35,000 விலை அதிகம் பெற்றுள்ள இந்த புதிய ட்ரிம், அதேநேரம் டாப் ஆர்.எக்ஸ்.இசட் ட்ரிம்-ஐ காட்டிலும் ரூ.54,000 மலிவானது. ரெனால்ட் சில விரும்பத்தக்க அம்சங்களை டாப்-ஸ்பெக்கிற்கு என்றே இதுவரை ஒதுக்கி வைத்திருந்தது.

ரெனால்ட் கிகரில் புதிய ஆர்.எக்ஸ்.டி(O) வேரியண்ட்!! ரூ.7.37 லட்சத்தில் அறிமுகம்!

முழு-எல்இடி ஹெட்லேம்ப்கள், 16-இன்ச் டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், கூல்டு க்ளோவ் பாக்ஸ், வயர் இல்லா ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி, காரை சுற்றிலும் விளக்குகள், ஆர்கைம்ஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் டிரைவிங் மோட்கள் உள்ளிட்டவை இந்த அம்சங்களில் அடங்குகின்றன.

ரெனால்ட் கிகரில் புதிய ஆர்.எக்ஸ்.டி(O) வேரியண்ட்!! ரூ.7.37 லட்சத்தில் அறிமுகம்!

இதில் புதிய ஆர்.எக்ஸ்.டி(O) ட்ரிம் ஆனது, எல்இடி ஹெட்லேம்ப்கள், 16-இன்ச் அலாய் சக்கரங்கள், பிஎம்2.5 காற்று சுத்திகரிப்பான், ஆர்.எக்ஸ்டி ட்ரிம்-இல் வழங்கப்படாத வயர் இல்லா ஸ்மார்ட்போன் இணைப்பு உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.

ரெனால்ட் கிகரில் புதிய ஆர்.எக்ஸ்.டி(O) வேரியண்ட்!! ரூ.7.37 லட்சத்தில் அறிமுகம்!

டாப் ஆர்.எக்ஸ்.இசட் ட்ரிம்-இன் சில வசதிகளை பெறாவிடினும், தோற்றத்தில் புதிய வேரியண்ட் டாப் ஆர்.எக்ஸ்.இசட் வேரியண்ட் போன்றே உள்ளது. இதனால் கிகர் ஆர்.எக்ஸ்.டி(O) ட்ரிம்மிற்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று ரெனால்ட் நம்பிக்கையாக உள்ளது.

ரெனால்ட் கிகரில் புதிய ஆர்.எக்ஸ்.டி(O) வேரியண்ட்!! ரூ.7.37 லட்சத்தில் அறிமுகம்!

குறிப்பாக வயர் இல்லா ஸ்மார்ட்போன் இணைப்பு பலரை வெகுவாக கவரும். கிகரில் வழங்கப்படுகின்ற 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 72 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ரெனால்ட் கிகரில் புதிய ஆர்.எக்ஸ்.டி(O) வேரியண்ட்!! ரூ.7.37 லட்சத்தில் அறிமுகம்!

இந்த என்ஜினை 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் பெற முடிகிறது. இதனுடன் 1.0 லிட்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்விலும் இந்த ரெனால்ட் கார் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த என்ஜினின் மூலமாக 100 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக பெறலாம்.

ரெனால்ட் கிகரில் புதிய ஆர்.எக்ஸ்.டி(O) வேரியண்ட்!! ரூ.7.37 லட்சத்தில் அறிமுகம்!

இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் டர்போ பெட்ரோல் என்ஜினில் அதிகப்பட்சமாக 152 என்எம் டார்க் திறனை பெறலாம் என்கிறது ரெனால்ட்.

ரெனால்ட் கிகரில் புதிய ஆர்.எக்ஸ்.டி(O) வேரியண்ட்!! ரூ.7.37 லட்சத்தில் அறிமுகம்!

விற்பனையில் ரெனால்ட் கிகருக்கு நிஸான் மேக்னைட், ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் உள்ளிட்டவை போட்டியாக உள்ளன. இதில் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட நிஸான் மேக்னைட் தான் கிகர் காருக்கு முக்கிய போட்டியாக விளங்குகிறது.

ரெனால்ட் கிகரில் புதிய ஆர்.எக்ஸ்.டி(O) வேரியண்ட்!! ரூ.7.37 லட்சத்தில் அறிமுகம்!

இந்த பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக சில சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் நமது தமிழகம் உட்படவில்லை என்றாலும், மஹாராஷ்டிராவில் உள்ள வாடிக்கையாளர்கள் அதிகப்பட்சமாக ரூ.92,000 வரையிலான சலுகைகளுடன் ரெனால்ட் கார்களை வாங்கலாம்.

ரெனால்ட் கிகரில் புதிய ஆர்.எக்ஸ்.டி(O) வேரியண்ட்!! ரூ.7.37 லட்சத்தில் அறிமுகம்!

இத்துடன் வாடிக்கையாளர்களை கவர ரெனால்ட் நிறுவனம் அதன் க்விட், கிகர் மற்றும் டிரைபர் கார்களுக்கு ‘இப்போது வாங்குங்கள், 2022ல் பணத்தை செலுத்துங்கள்' என்கிற சலுகையினை வழங்கியுள்ளது. இந்த ரெனால்ட் கார்களை இப்போது வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களது மாதத்தவணை தொகையை 6 மாதங்கள் கழித்து 2022ல் இருந்து செலுத்த துவங்கலாம்.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault kiger rxt o variant launched at rs 7 37 lakh features details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X