சிம் கார்டைபோல் கார்களை ஸ்டால் அமைத்து விற்கும் ரெனால்ட்... கிராமப்புற மக்களை கவர செம்ம யுக்தி...

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சிம் கார்டுகளை விற்பனைச் செய்வதைப் போல ரெனால்ட் நிறுவனம் அதன் தயாரிப்புகளை (கார்களை) விற்பனைச் செய்ய தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

சிம் கார்டைபோல் கார்களை ஸ்டால் அமைத்து விற்கும் ரெனால்ட்... கிராமப்புற மக்களை கவர செம்ம யுக்தி...

கொரோனா வைரஸ் பரவலால் புதிய வாகன விற்பனை மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்ததுள்ளது. நாட்டின் முன்னணி நிறுவனங்கள்கூட விற்பனை இலக்கை எட்ட முடியாமல் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி தவித்து வருகின்றன. இந்த நிலையை மாற்ற பல்வேறு புதிய யுக்திகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் கையாளத் தொடங்கியிருக்கின்றன.

சிம் கார்டைபோல் கார்களை ஸ்டால் அமைத்து விற்கும் ரெனால்ட்... கிராமப்புற மக்களை கவர செம்ம யுக்தி...

அண்மையில், நாட்டின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், கோடக் மஹிந்திரா நிதி நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியது. இந்த கூட்டணியின் அடிப்படையில் எளிய கடன் மற்றும் சுலப மாதத் தவணை திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இரு நிறுவனங்களும் திட்டமிட்டிருக்கின்றன.

சிம் கார்டைபோல் கார்களை ஸ்டால் அமைத்து விற்கும் ரெனால்ட்... கிராமப்புற மக்களை கவர செம்ம யுக்தி...

இந்தநிலையில், மக்களைக் கவர ரெனால்ட் நிறுவனமும் ஓர் புதிய யுக்தியைக் கையிலெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம் குறிப்பாக கிராமப்புற வாடிக்கையாளர்களைக் கவர சிறப்பு ஷோரூம்களை அமைத்து வாகனங்களை விளம்பரப்படுத்த தொடங்கியிருக்கின்றது.

சிம் கார்டைபோல் கார்களை ஸ்டால் அமைத்து விற்கும் ரெனால்ட்... கிராமப்புற மக்களை கவர செம்ம யுக்தி...

பிரத்யேக நடமாடும் ஷோரூம்களையே நிறுவனம் தற்போது பயன்பாட்டிற்குக் கொண்டி வந்திருக்கின்றது. இந்த ஷோரூம்கள் ஒரே இடத்தில் நின்றவாறு புதிய தயாரிப்புகளை விற்பனைச் செய்ய இருக்கின்றன. இங்கு விருப்புமுள்ளவர்களால் புதிய கார்களை புக் செய்தல் அல்லது வாங்குதல் முடியும்.

சிம் கார்டைபோல் கார்களை ஸ்டால் அமைத்து விற்கும் ரெனால்ட்... கிராமப்புற மக்களை கவர செம்ம யுக்தி...

இதுமட்டுமின்றி, புதிய கார்கள்குறித்த விசாரனைகளைகூட இங்கு மேற்கொள்ளலாம். ஆகையால், வழக்கமான ஷோரூம்களுக்கு சற்றும் குறைவில்லாத விற்பனையகங்களாக இவை செயல்படும் என தெரிகின்றது. ரெனால்ட் நிறுவனத்தின் பெரும்பாலான ஷோரூம்கள் நகர்புறங்களை மையப்படுத்தியே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

சிம் கார்டைபோல் கார்களை ஸ்டால் அமைத்து விற்கும் ரெனால்ட்... கிராமப்புற மக்களை கவர செம்ம யுக்தி...

எனவேதான் இந்த நடமாடும் ஷோரூம்களை கிராமப்புறங்களை மையப்படுத்தி ரெனால்ட் களமிறக்கியிருக்கின்றது. குறிப்பாக, மிக உட்புறப் பகுதியில் இருக்கும் கிராமங்களைக்கூட சென்று சேரும் வகையில் இந்த ஷோரூம்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

சிம் கார்டைபோல் கார்களை ஸ்டால் அமைத்து விற்கும் ரெனால்ட்... கிராமப்புற மக்களை கவர செம்ம யுக்தி...

பான் இந்தியா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டிருக்கும் இந்த ஷோரூம் திட்டம் நாட்டின் பல முன்னணி மாநிலங்களில் ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கில் ஹரியானாவிலும், கிழக்கில் பீகாரிலும், மேற்கில் மத்தியப் பிரதேசத்திலும், தெற்கில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலும், மத்தியில் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ரெனால்டின் புதிய மொபைல் ஷோரும்கள் இயங்கத் தொடங்கியிருக்கின்றன.

சிம் கார்டைபோல் கார்களை ஸ்டால் அமைத்து விற்கும் ரெனால்ட்... கிராமப்புற மக்களை கவர செம்ம யுக்தி...

இந்த மொபைல் ஷோரூம்கள் 13 மாநிலங்களில் 233க்கும் அதிகமான முக்கிய டவுன் பகுதிகளில் சென்றுச் சேர்ந்திருப்பதாகவும், அங்கு பலருக்கு டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பை நிறுவனம் வழங்கியதாகவும் கூறப்படுகின்றது. 'ரூரல் ஃப்ளோட்' எனும் பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் இத்திடன்கீழ் அதிகபட்சமாக 2,700 பேர் ரெனால்ட் கார்களை டெஸ்ட் டிரைவ் செய்திருக்கின்றனர்.

சிம் கார்டைபோல் கார்களை ஸ்டால் அமைத்து விற்கும் ரெனால்ட்... கிராமப்புற மக்களை கவர செம்ம யுக்தி...

தற்போது ரெனால்டின் புதிய மற்றும் புகழ்வாய்ந்த தயாரிப்புகளான கைகர், ட்ரைபர், க்விட் உள்ளிட்ட சில மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கே மக்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுத்ததாக மொபைல் ஷோரூம் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

சிம் கார்டைபோல் கார்களை ஸ்டால் அமைத்து விற்கும் ரெனால்ட்... கிராமப்புற மக்களை கவர செம்ம யுக்தி...

இச்சிறப்பு மொபைல் ஷோரூம் வாயிலாக இதுவரை 23 ஆயிரம் வாடிக்கையாளர்களை ரெனால்ட் சென்று சேர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதனை இன்னும் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் நிறுவனம் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றது.

சிம் கார்டைபோல் கார்களை ஸ்டால் அமைத்து விற்கும் ரெனால்ட்... கிராமப்புற மக்களை கவர செம்ம யுக்தி...

தற்போது ரெனால்ட் நிறுவனத்தின்கீழ், இந்தியாவில் 500 விற்பனையகம் மற்றும் சர்வீஸ் மையங்களும், 200க்கும் மேற்பட்ட ஒர்க்ஷாப்புகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை நகர்புறங்களை மையப்படுத்தியே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Launches Mobile Showroom For India's Rural Cities. Read In Tamil.
Story first published: Friday, June 25, 2021, 13:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X