முதல் மாதத்திலேயே மாஸ் காட்டிய கைகர் விற்பனை... சந்தோஷத்தில் ரெனால்ட்... சூப்பரான வளர்ச்சி...

முதல் மாதத்திலேயே ரெனால்ட் கைகர் காரின் விற்பனை மாஸ் காட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முதல் மாதத்திலேயே மாஸ் காட்டிய கைகர் விற்பனை... சந்தோஷத்தில் ரெனால்ட்... சூப்பரான வளர்ச்சி...

ரெனால்ட் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் 11,043 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 8,784 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 26 சதவீத வளர்ச்சியை ரெனால்ட் நிறுவனம் பதிவு செய்துள்ளது. இந்த சிறப்பான வளர்ச்சிக்கு கைகர் அறிமுகம் உதவி செய்துள்ளது.

முதல் மாதத்திலேயே மாஸ் காட்டிய கைகர் விற்பனை... சந்தோஷத்தில் ரெனால்ட்... சூப்பரான வளர்ச்சி...

ரெனால்ட் கைகர் கார் கடந்த பிப்ரவரி 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 3,226 கைகர் கார்களை ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ரெனால்ட் கார்களின் பட்டியலில் கைகர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இது சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் ஆகும்.

முதல் மாதத்திலேயே மாஸ் காட்டிய கைகர் விற்பனை... சந்தோஷத்தில் ரெனால்ட்... சூப்பரான வளர்ச்சி...

இந்திய சந்தையில் நிஸான் மேக்னைட், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன் ரெனால்ட் கைகர் போட்டியிட்டு வருகிறது. சவாலான விலை நிர்ணயம் காரணமாக ரெனால்ட் கைகர் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

முதல் மாதத்திலேயே மாஸ் காட்டிய கைகர் விற்பனை... சந்தோஷத்தில் ரெனால்ட்... சூப்பரான வளர்ச்சி...

அதே சமயம் கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ரெனால்ட் கார்களின் பட்டியலில் க்விட் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ரெனால்ட் நிறுவனம் 3,927 க்விட் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 4,187 ஆக இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 6 சதவீத வீழ்ச்சியை ரெனால்ட் க்விட் பதிவு செய்துள்ளது.

முதல் மாதத்திலேயே மாஸ் காட்டிய கைகர் விற்பனை... சந்தோஷத்தில் ரெனால்ட்... சூப்பரான வளர்ச்சி...

கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ரெனால்ட் கார்களின் பட்டியலில் ட்ரைபர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 3,553 ட்ரைபர் கார்களை ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 3,955 ஆக இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 10 சதவீத வீழ்ச்சியை ட்ரைபர் பதிவு செய்துள்ளது.

முதல் மாதத்திலேயே மாஸ் காட்டிய கைகர் விற்பனை... சந்தோஷத்தில் ரெனால்ட்... சூப்பரான வளர்ச்சி...

இந்த பட்டியலில் ரெனால்ட் கைகர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள நிலையில், நான்காவது மற்றும் கடைசி இடத்தை டஸ்டர் பிடித்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 337 டஸ்டர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 642 ஆக இருந்தது. எனவே விற்பனையில் 48 சதவீத வீழ்ச்சியை ரெனால்ட் டஸ்டர் சந்தித்துள்ளது.

முதல் மாதத்திலேயே மாஸ் காட்டிய கைகர் விற்பனை... சந்தோஷத்தில் ரெனால்ட்... சூப்பரான வளர்ச்சி...

ரெனால்ட் நிறுவனத்தின் க்விட், ட்ரைபர் மற்றும் டஸ்டர் ஆகிய கார்கள் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, கைகர் காரின் வருகை அந்நிறுவனத்திற்கு ஒட்டுமொத்த அடிப்படையில் நல்ல விற்பனை வளர்ச்சியை பெற்று தந்துள்ளது. வரும் மாதங்களிலும் கைகர் கார் ரெனால்ட் நிறுவனத்திற்கு நல்ல விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் மாதத்திலேயே மாஸ் காட்டிய கைகர் விற்பனை... சந்தோஷத்தில் ரெனால்ட்... சூப்பரான வளர்ச்சி...

ரெனால்ட் கைகர் காரில், 1.0 லிட்டர் மூன்று-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் மூன்று-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் அதிகபட்சமாக 72 ஹெச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் டர்போ பெட்ரோல் இன்ஜின் 100 ஹெச்பி பவரை உருவாக்கும்.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Model Wise February 2021 Sales - Kwid Leads Chart. Read in Tamil
Story first published: Monday, March 22, 2021, 13:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X