குறைந்த விலை காரின் விலை உயரப்போகிறது! ரெனால்டின் அதிரடி அறிவிப்பால் ஏற்கனவே புக் செய்தவர்களும் அதிர்ச்சி!

ரெனால்ட் நிறுவனம் அதன் மலிவு விலை காரின் விலையை விரைவில் உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

குறைந்த விலை காரின் விலை உயரப்போகிறது! ரெனால்டின் அதிரடி அறிவிப்பால் ஏற்கனவே புக் செய்தவர்களும் அதிர்ச்சி!

ரெனால்ட் நிறுவனத்தின் மிக சமீபத்திய அறிமுகமான கைகர் காரின் விலை உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 1ம் தேதி முதல் இக்காரின் விலை உயர இருக்கின்றது. இந்த புதுமுக காரை கடந்த 2021 பிப்ரவரி மாதம் 15ம் தேதி அன்றே ரெனால்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

குறைந்த விலை காரின் விலை உயரப்போகிறது! ரெனால்டின் அதிரடி அறிவிப்பால் ஏற்கனவே புக் செய்தவர்களும் அதிர்ச்சி!

இதைத்தொடர்ந்து, மார்ச் 3ம் தேதி முதல் கைகர் காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டன. இது ஓர் மலிவு விலை சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் என்பதால் இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ரெனால்ட் நிறுவனம் இக்காரின் விலையை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறைந்த விலை காரின் விலை உயரப்போகிறது! ரெனால்டின் அதிரடி அறிவிப்பால் ஏற்கனவே புக் செய்தவர்களும் அதிர்ச்சி!

அலுமினியம், ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக் போன்ற வாகனங்களைக் கட்டமைக்க உதவும் முக்கிய பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருவதை அடுத்து விலையுயர்வு நடவடிக்கையை ரெனால்ட் கையிலெடுத்துள்ளது. ஆகையால், வரும் 1ம் தேதி முதல் புதிய விலையுயர்விலேயே கைகர் விற்பனைக்குக் கிடைக்கும்.

குறைந்த விலை காரின் விலை உயரப்போகிறது! ரெனால்டின் அதிரடி அறிவிப்பால் ஏற்கனவே புக் செய்தவர்களும் அதிர்ச்சி!

சுமார் ரூ. 10 ஆயிரம் தொடங்கி 15 ஆயிரம் ரூபாய் வரையில் இக்கார் விலையுயர்வைப் பெற இருக்கின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை ரெனால்ட் இன்னும் வெளியிடவில்லை. விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறைந்த விலை காரின் விலை உயரப்போகிறது! ரெனால்டின் அதிரடி அறிவிப்பால் ஏற்கனவே புக் செய்தவர்களும் அதிர்ச்சி!

விலையுயர்வு பற்றிய தகவல் ரெனால்ட் நிறுவனத்தின் கார் விற்பனையாளர்கள் வாயிலாக வெளி வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இப்புதிய விலையுயர்வு ஏற்கனவே ரெனால்ட் கைகர் காரை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறைந்த விலை காரின் விலை உயரப்போகிறது! ரெனால்டின் அதிரடி அறிவிப்பால் ஏற்கனவே புக் செய்தவர்களும் அதிர்ச்சி!

எனவே, ரெனால்ட்-இன் இந்த விலையுயர்வு பற்றிய தகவல் புதிதாக காரை புக் செய்ய இருப்பவர்களை மட்டுமின்றி ஏற்கனவே காரை புக் செய்து காத்திருப்போருக்கும் அதிர்ச்சி தகவலாக அமைந்துள்ளது. இருப்பினும், விற்பனையாளர்கள் சிலர் நீண்ட நாட்களுக்கு முன்னர் புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு இதில் இருந்து விளக்களிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

குறைந்த விலை காரின் விலை உயரப்போகிறது! ரெனால்டின் அதிரடி அறிவிப்பால் ஏற்கனவே புக் செய்தவர்களும் அதிர்ச்சி!

ஆனால், இதுகுறித்த எந்தவொரு விபரத்தையும் இதுவரை ரெனால்ட் நிர்வாகம் சார்பில் வெளியிடப்படவில்லை என்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். விலைக் குறைந்த கார் இதுவென்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

குறைந்த விலை காரின் விலை உயரப்போகிறது! ரெனால்டின் அதிரடி அறிவிப்பால் ஏற்கனவே புக் செய்தவர்களும் அதிர்ச்சி!

இதனால், தற்போதைய நிலவரப்படி இக்காரை புக் செய்தோர் 10 வாரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகின்றது. தேர்வு செய்யப்படும் வேரியண்டைப் பொருத்து இந்த காத்திருப்பு காலம் நிலவுகின்றது. ரெனால்ட் கைகர் பெட்ரோல், டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

குறைந்த விலை காரின் விலை உயரப்போகிறது! ரெனால்டின் அதிரடி அறிவிப்பால் ஏற்கனவே புக் செய்தவர்களும் அதிர்ச்சி!

1.0 லிட்டர், 3 சிலிண்டர், பெட்ரோல் எஞ்ஜினிலும் - 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ எஞ்ஜினிலும் இது கிடைக்கின்றது. இதில், பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 70 பிஎச்பியையும், 96 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதேபோன்று, டர்போ எஞ்ஜின் 97 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைப் பெற்றிருக்கின்றது.

குறைந்த விலை காரின் விலை உயரப்போகிறது! ரெனால்டின் அதிரடி அறிவிப்பால் ஏற்கனவே புக் செய்தவர்களும் அதிர்ச்சி!

இதில், டர்போ எஞ்ஜினில் மட்டும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு சிவிடி ஆகிய இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகின்றது. இதுதவிர, உயர்ரக வேரியண்டுகளில் வழக்கமான, ஈகோ மற்றும் ஸ்போர்ட்ஸ் என மூன்று விதமான டிரைவிங்க மோட்கள் வழங்கப்படுகின்றன.

குறைந்த விலை காரின் விலை உயரப்போகிறது! ரெனால்டின் அதிரடி அறிவிப்பால் ஏற்கனவே புக் செய்தவர்களும் அதிர்ச்சி!

தொடர்ந்து, 8 இன்சிலான தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்சிலான டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக் கூடிய டிரைவர் இருக்கை, ஆர்கேமிஸ் ஆடியோ சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா மற்றும் 4 ஏர் பேக்குகள் என எக்கசக்க சிறப்பு அம்சங்களும் ரெனால்ட் கைகர் காரில் வழங்கப்பட்டுள்ளன.

குறைந்த விலை காரின் விலை உயரப்போகிறது! ரெனால்டின் அதிரடி அறிவிப்பால் ஏற்கனவே புக் செய்தவர்களும் அதிர்ச்சி!

தற்போதைய நிலவரப்படி ரூ. 5.45 லட்சம் என்ற ஆரம்ப விலையில் ரெனால்ட் கைகர் சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் உயர்நிலை வேரியண்டின் விலை ரூ. 9.55 லட்சங்கள் ஆகும். இவையனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எக்ஸ்-ஷோரும் விலையிலேயே ரெனால்ட் நிறுவனம் விரைவில் மாற்றம் செய்ய இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Planning To Hike Kiger SUV Price From April 1st. Read In Tamil.
Story first published: Saturday, March 27, 2021, 10:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X