க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...

ரெனால்ட் க்விட் பட்ஜெட் ஹேட்ச்பேக் காரின் புதிய டிவிசி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதன்மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...

கடந்த 10 வருடங்களாக இந்திய சந்தையில் தயாரிப்புகளை விற்பனை செய்யும் ரெனால்ட் பிராண்டின் பிரபலமான மாடல்களுள் ஒன்று க்விட் ஹேட்ச்பேக். இன்னும் சொல்லப்போனால் தற்சமயம் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் விலை குறைவான ரெனால்ட் கார் க்விட் ஆகும்.

க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...

க்விட்டின் பிரபலத்திற்கு அதன் ஸ்போர்டியான தோற்றம் மற்றும் பிரிவிலேயே முதல் மாடலாக வழங்கப்பட்ட தொடுத்திரை மிக முக்கியமான காரணமாக சொல்லலாம். ஹேட்ச்பேக் காராக இருந்தாலும் முன்பக்கம் எஸ்யூவி கார் போல் தோற்றமளிப்பது க்விட்டின் கூடுதல் சிறப்பம்சம்.

க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...

க்விட்டின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் கடந்த 2020ஆம் ஆண்டில் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரை பிரபலப்படுத்தும் நோக்கில் இதன் தொலைக்காட்டி கமர்ஷியல் (டிவிசி) வீடியோவினை ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த டிவிசி வீடியோ க்விட் காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தை அருகாமையிலும் தொலைவில் இருந்தும் காட்டுவதில் இருந்து ஆரம்பிக்கிறது.

க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...

வீடியோ ஆரம்பித்ததில் இருந்து முடியும்வரை ராப் பாடல் இசைக்கப்படுகிறது. நடுவில் வண்ண தொடுத்திரை போன்ற க்விட் காரின் சிறப்பம்சங்கள் காட்டப்படுகின்றன. விற்பனையில் ரெனால்ட் க்விட்டிற்கு மாருதி எஸ்-பிரெஸ்ஸோ, மாருதி ஆல்டோ, டாடா டியாகோ முக்கிய போட்டி கார் மாடல்களாக விளங்குகின்றன.

க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக காரில் கவனிக்கத்தக்க மாற்றங்களை ரெனால்ட் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக காரின் முன்பக்கம் எல்இடி டிஆர்எல்களுடன் ப்ரீமியம் கார்களுக்கு இணையான தோற்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...

ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் கார் தற்சமயம் ரெகுலர் மற்றும் க்ளிம்பர் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. 800சிசி மற்றும் 1.0 லிட்டர் என்ற இரு பெட்ரோல் என்ஜின்கள் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமானதாக இவற்றில் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...

இதில் 800சிசி பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 54 பிஎஸ் மற்றும் 72 என்எம் டார்க் திறனையும், 1.0 லிட்டர் என்ஜின் 68 பிஎஸ் மற்றும் 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றன. 800சிசி என்ஜின் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனிலும், 1.0 லிட்டர் என்ஜின் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Kwid budget hatchback gets a new TVC
Story first published: Wednesday, January 27, 2021, 21:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X