ரெனோ ட்ரைபர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம் தள்ளிப்போகிறது!

வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரெனோ ட்ரைபர் காரின் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம் தள்ளிப்போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 ரெனோ ட்ரைபர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம் தள்ளிப்போகிறது!

கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ ட்ரைபர் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், 5 பெரியவர்கள் 2 சிறியவர்கள் செல்வதற்கான வாய்ப்பை வழங்குவதால் சிறந்த மதிப்பை வழங்கி வருகிறது.

 ரெனோ ட்ரைபர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம் தள்ளிப்போகிறது!

இந்த நிலையில், ரெனோ ட்ரைபர் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

 ரெனோ ட்ரைபர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம் தள்ளிப்போகிறது!

இந்த நிலையில், ட்ரைபர் காரில் சக்திவாய்ந்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வை அறிமுகம் செய்வதற்கு ரெனோ திட்டமிட்டுள்ளது. இந்த எஞ்சின் 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்கும் என்பதால், இந்த 7 சீட்டர் மாடலுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என்று வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவல் இருந்து வருகிறது.

 ரெனோ ட்ரைபர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம் தள்ளிப்போகிறது!

மேலும், மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, சிவிடி கியர்பாக்ஸ் தேர்விலும் வரும் என்பதால் மிகச் சிறந்த தேர்வாக மாறும். அதாவது, ரூ.10 லட்சம் ஆன்ரோடு விலையில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு கொண்ட 7 சீட்டர் மாடலாக வந்துவிடும். எனவே, தொடர்ந்து இந்த மாடல் வாடிக்கையாளர்களின் பட்டியலில் இருந்து வருகிறது.

 ரெனோ ட்ரைபர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம் தள்ளிப்போகிறது!

ஆனால், கொரோனா பிரச்னையால் ஆட்டோமொபைல் சந்தையில் உள்ள நிலவரத்தை கருத்தில்கொண்டு, இந்த டர்போ பெட்ரோல் ட்ரைபர் கார் அறிமுகத்தை ரெனோ தள்ளிப்போட்டு வருகிறது. அண்மையில் இதனை ரெனோ இந்தியா நிறுவனத்தின் சிஇஓ வெங்கட்ராம் கூட உறுதிப்படுத்தி உள்ளார்.

 ரெனோ ட்ரைபர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம் தள்ளிப்போகிறது!

அதாவது, இந்த ஆண்டு ட்ரைபர் டர்போ மாடல் அறிமுகம் செய்யப்படாது என்று கூறி இருந்தார். இதனால், ட்ரைபர் டர்போ பெட்ரோல் மாடல் அடுத்த ஆண்டுதான் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ரெனோ ட்ரைபர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம் தள்ளிப்போகிறது!

மேலும், ரெனோ ட்ரைபர் கார் வந்து இரண்டு ஆண்டுகளை கடந்த பின்னர் புதுப்பொலிவு கொடுக்கவும் ரெனோ திட்டமிட்டுள்ளது. இதனால், ரெனோ ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வை வழங்குவதற்கு ரெனோ திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

 ரெனோ ட்ரைபர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம் தள்ளிப்போகிறது!

ரெனோ ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் எல்இடி ஹெட்லைட்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல், 16 அங்குல அலாய் வீல்கள், புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார் ப்ளே, வயர்லெஸ் சார்ஜர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

 ரெனோ ட்ரைபர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம் தள்ளிப்போகிறது!

ரெனோ ட்ரைபர் காரில் எதிர்பார்க்கப்படும் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட நிஸான் மேக்னைட் மற்றும் ரெனோ கைகர் ஆகிய சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Via- Rushlane

Most Read Articles
tt
English summary
According to reports, Renualt is planning to launch Triber turbo petrol engine option by next year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X