முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்! இப்பவே எதிர்பார்ப்பு எகிறுதே!

பிரபல கார் உற்பத்தி நிறுவனம் அதன் முதல் மின்சார தயாரிப்பை நாளை உலகளவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் நிறுவனம் ஒரு வழியாக நாளை தனது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கின்றது. இதுகுறித்த மேலும் முக்கிய விபரங்களை இப்பதிவில் காணலாம்.

தனது முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது!

பிரபல முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று நாளை தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாக எலெக்ட்ரிக் காரை கான்செப்ட் (மாதிரி) மாடலாக மட்டுமே காட்சிப்படுத்தி அதன் வாடிக்கையாளர்களை ஈர்த்து வந்த நிலையில் ஒரு வழியாக நாளை அக்காரை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

தனது முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது!

உலகின் முன்னணி சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனமே அதன் முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்ய இருக்கும் நிறுவனம் ஆகும். நாளை (புதன்கிழமை) அன்று பெரிதும் எதிர்பார்ப்பைத் தூண்டி வரும் விஷன் நெக்ஸ்ட் 100 (Vision Next 100) அறிமுகமாக இருக்கின்றது. இது, சைலன்ட் ஷேடோ (Silent Shadow) எனும் பெயரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தனது முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது!

இந்த அதிக சொகுசு வாகனமாக மட்டுமின்றி ஒற்றை முழுமையான சார்ஜில் மிக அதிக ரேஞ்ஜ் (பயண தூரத்தை) வழங்கும் வாகனமாகவும் உருவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்காரின் அறிமுகத்தை நிறுவனத்தின் சிஇஓ டார்ஸ்டென் முல்லர்-ஓட்வோஸ் (Torsten Muller-Otvos) அவரது லிங்க்ட் இன் கணக்கு வாயிலாக அதிகாரப்பூர்வ வெளியிட்டுள்ளார்.

தனது முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது!

இதுகுறித்து அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது, "இந்த தசாப்தத்திற்குள் மின்சாரத்தால் மட்டும் இயங்கும் முதல் ரோல்ஸ் ராய்ஸ் காரை கொண்டு வருவோம் நான் ஓர் பொது வாக்குறுதி அளித்திருந்தேன். இப்போது, எங்கள் நிறுவனம் இந்த வரலாற்று நிகழ்வை நிறைவேற்ற இருக்கின்றது" என்றார். இவ்வாறு கூறி நிறுவனத்தின் முதல் அதி சொகுசு வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் காரின் வருகையை அவர் உறுதிப்படுத்தினார்.

தனது முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மிக விரைவில் எரிபொருளால் இயங்கும் எஞ்ஜின் கொண்ட கார்களின் உற்பத்தியை கைவிட்டுவிட்டு முழுமையாக மின்சாரத்தால் இயங்கும் கார்களை மட்டுமே உருவாக்க திட்டமிட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கையில் 20 ஆண்டிற்குள் களமிறங்க இருப்பதாக நிறுவனம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

தனது முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது!

2011ம் ஆண்டில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தன் பேந்தம் (Phantom) கார் மாடல் அடிப்படையிலான ஓர் எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலை காட்சியப்படுத்தியது. தொடர்ந்து, 2016ம் ஆண்டில் விஷன் நெக்ஸ்ட் 100 எனும் பெயரில் ஓர் புதிய கான்செப்ட் எலெக்ட்ரிக் கார் மாடலை காட்சிப்படுத்தியது. இது முழுமையான தன்னாட்சி அம்சங்கள் கொண்ட மின்சார காராகும்.

தனது முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது!

இந்த காரையே நாளை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் உலகளவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேலையில், புதிய சொகுசு மின்சார கார்குறித்த எந்தவொரு தகவலையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. ஆகையால், நாளை பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தனது முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது!

மேலும் பல ஆண்டுகளாக கான்செப்ட் மாடலாக மட்டுமே காட்சியளித்து வந்த ரோல்ஸ் ராய்ஸ்-இன் இந்த கான்செப்ட் கார் நாளை தயாரிப்பு மாடலாகவும் காட்சியளிக்க இருக்கின்றது. ஏற்கனவே இந்த சொகுசு காருக்கான வர்த்தக பதிவை நிறுவனம் செய்துவிட்டது. 'ஷேடோ' (Shadow) எனும் வர்த்தகத்திற்கான பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. எனவே புதிய எலெக்ட்ரிக் கார் இந்த பெயரிலேயே விற்பனைக்கு வரும் என்பது உறுதியாகியுள்ளது.

தனது முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது!

மேலும், தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி ரோல்ஸ் ராய்ஸ்-இன் புதிய எலெக்ட்ரிக் காரில் 100 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த பேட்டரி பேக் ஓர் முழுமையான சார்ஜில் அதிகபட்சமாக 500 கிமீ ரேஞ்ஜை வழங்கும் வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. எனவே இந்த காரின் அறிமுகத்தை நோக்கி சொகுசு கார் பிரியர்கள் காத்துக் கொண்டிருக்க தொடங்கியிருக்கின்றனர்.

தனது முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மிக சமீபத்தில் உலகின் மிக விலையுயர்ந்த சொகுசு காரை விற்பனைக்குக் கொண்டு வந்தது. போட் டெயில் எனப்படும் 19 அடி நீளம் கொண்ட காரை அது அறிமுகப்படுத்தியது. இக்காருக்கு 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ. 202.8 கோடி ஆகும்.

Most Read Articles
English summary
Rolls royce debut its first electric luxury car tomorrow
Story first published: Tuesday, September 28, 2021, 12:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X