பளிச்சிடும் நிறங்களில் விற்பனைக்கு வரும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்!! அம்பானிகள் ஈஸியா வாங்கலாம்...

உலகம் முழுவதும் பிரபலமான கல்லினன் சொகுசு காருக்கு புதிய நிறங்களை அதன் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் வழங்கியுள்ளது. இந்த புதிய நிறத்தேர்வுகளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பளிச்சிடும் நிறங்களில் விற்பனைக்கு வரும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்!! அம்பானிகள் ஈஸியா வாங்கலாம்...

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன், பில்லியனர்களிடமே ஒன்று, இரண்டு என்று எண்ணிக்கையிலேயே இருக்கும் சொகுசு காராகும். நமக்கு தெரிந்தவரையில், இந்தியாவில் முகேஷ் அம்பானி இரு கல்லினன் கார்களை வைத்துள்ளார். ஒன்றை சமீபத்தில் தான் வாங்கி இருந்தார்.

பளிச்சிடும் நிறங்களில் விற்பனைக்கு வரும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்!! அம்பானிகள் ஈஸியா வாங்கலாம்...

இருப்பினும் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் பிராண்டில் இருந்து உலகளவில் அதிகளவில் விற்பனையாகும் கார் மாடல்களுள் ஒன்றாக கல்லினன் விளங்குகிறது. இதன் தோற்றத்தை பார்த்து குறைவாக எடை போட வேண்டாம்.

பளிச்சிடும் நிறங்களில் விற்பனைக்கு வரும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்!! அம்பானிகள் ஈஸியா வாங்கலாம்...

ஏனெனில் சொகுசு கப்பல் போல் உட்புறத்தை கொண்டிருக்கும் அதேவேளையில், நிமிர்ந்த தோற்றத்தை கொண்டிருந்தாலும், ஆஃப்-ரோடுகளிலும் சிறப்பாக செயல்படும் வகையில் ஏகப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்கள் இதில் வழங்கப்படுகின்றன.

பளிச்சிடும் நிறங்களில் விற்பனைக்கு வரும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்!! அம்பானிகள் ஈஸியா வாங்கலாம்...

இந்த நிலையில் தற்போது கல்லினனின் பலத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக நான்கு பிரத்யேகமான நிறங்களை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த நான்கு புதிய நிறங்களில் பளிச்சிடும் சிவப்பு, பாரடிசோ நீலம், டார்க் ஆலிவ் மற்றும் செல்பி கிரே உள்ளிட்டவை அடங்குகின்றன.

பளிச்சிடும் நிறங்களில் விற்பனைக்கு வரும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்!! அம்பானிகள் ஈஸியா வாங்கலாம்...

ரோல்ஸ் ராய்ஸின் கூற்றுப்படி, ஒவ்வொரு வண்ணமும் அதன் தலைமையகத்தில் உருவாக்கப்பட்டது மற்றும் கடந்த சில காலமாக அவர்களின் திட்டங்களில் இருந்துள்ளன. இருப்பினும், சில காரணங்களுக்காக, இவை இதற்கு முன்பு எந்த காரிலும் பயன்படுத்தப்படவில்லை.

பளிச்சிடும் நிறங்களில் விற்பனைக்கு வரும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்!! அம்பானிகள் ஈஸியா வாங்கலாம்...

"ரோல்ஸ் ராய்ஸ் பெஸ்போக் வடிவமைப்புத் துறையினர் மூலம் முன்னர் உருவாக்கப்பட்ட வண்ணங்களை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க நாங்கள் விரும்பினோம்" என்று ரோல்ஸ் ராய்ஸ் அமெரிக்காவின் தயாரிப்பு மேலாளர் வில் வெட்டர் கூறியுள்ளார்.

பளிச்சிடும் நிறங்களில் விற்பனைக்கு வரும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்!! அம்பானிகள் ஈஸியா வாங்கலாம்...

இந்த புதிய பிரத்யேகமாக நிறங்கள் தற்போதைக்கு கல்லினை வாங்கும் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நிறங்களில் இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை பெற எவ்வளவு கூடுதலாக செலுத்த வேண்டும் என்பது வெளியிடப்படவில்லை.

பளிச்சிடும் நிறங்களில் விற்பனைக்கு வரும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்!! அம்பானிகள் ஈஸியா வாங்கலாம்...

அமெரிக்காவில் கல்லினனின் விலை 330,000 டாலர்களாக உள்ளது. இவ்வளவு விலை கொடுத்தும் வாங்கும் வாடிக்கையாளர் நிச்சயம் தனக்கு பிடித்த நிறத்தில் வாங்க கூடுதலாக பணம் செலுத்த யோசிக்கமாட்டார். இந்த நான்கு நிறங்கள் மட்டுமின்றி மயிலின் நீலம், பளிச்சிடும் பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் என்ற நிறங்களும் கூடிய விரைவில் கல்லினன் காருக்கு வழங்கப்படவுள்ளன.

Most Read Articles

English summary
ROLLS-ROYCE OPENS THE PALETTE IN NORTH AMERICA WITH A SELECTION OF BESPOKE COLOURS OF CULLINAN.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X