தனது பென்ஸ் காரின் மைலேஜை அதிகரிக்க இளைஞரின் வித்தியாசமான யோசனை!! என்ன செஞ்சிருக்காருனு பாருங்க...

மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் செடான் காரில் உரிமையாளர் ஒருவர் சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) தொகுப்பை பொருத்தி பல மாதங்களாக பயன்படுத்தி வருகிறார். இந்த பென்ஸ் சிஎன்ஜி காரை பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

தனது பென்ஸ் காரின் மைலேஜை அதிகரிக்க இளைஞரின் வித்தியாசமான யோசனை!! என்ன செஞ்சிருக்காருனு பாருங்க...

சமீபத்த்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் இந்திய அரசாங்கம் கொண்டுவந்த அதிரடி அதிகரிப்பிற்கு பிறகு பெரும்பாலானோரின் கவனம் சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் பக்கமும் சென்றுள்ளது.

தனது பென்ஸ் காரின் மைலேஜை அதிகரிக்க இளைஞரின் வித்தியாசமான யோசனை!! என்ன செஞ்சிருக்காருனு பாருங்க...

விற்பனையில் உள்ள எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிஎன்ஜி கார்களை சற்று அதிகமாகவே சாலையில் பார்க்க முடிகிறது. சிஎன்ஜி தொகுப்பு ஆனது கார்களில் அவற்றின் மைலேஜை அதிகரிக்கும் நோக்கில் பொருத்தப்படுகிறது. இதனால் பெரும்பாலும் சிஎன்ஜி கிட்-ஐ பட்ஜெட் கார்களில் தான் பார்த்துள்ளோம்.

தனது பென்ஸ் காரின் மைலேஜை அதிகரிக்க இளைஞரின் வித்தியாசமான யோசனை!! என்ன செஞ்சிருக்காருனு பாருங்க...

ஆனால் இங்கு ஒருவர் சிஎன்ஜி தொகுப்பை தனது லக்சரி மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் செடான் காரில் பொருத்தியுள்ளார். ராஸ்ப்ரீட் கில் என்ற யுடியூப் சேனலில் பதிவிப்படப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவில் சிஎன்ஜி தொகுப்பு பொருத்தப்பட்ட பென்ஸ் கார் தொடர்ந்து பயன்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Courtesy: Raspreet Gill

இந்த சி-கிளாஸ் காரில் உள்ள தொழிற்நுட்ப அம்சங்களை விளக்குவதில் இருந்து துவங்கும் இந்த வீடியோவில் காரில் பொருத்தப்பட்டுள்ள பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 185 பிஎச்பி மற்றும் 285 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது என கூறப்பட்டுள்ளது.

தனது பென்ஸ் காரின் மைலேஜை அதிகரிக்க இளைஞரின் வித்தியாசமான யோசனை!! என்ன செஞ்சிருக்காருனு பாருங்க...

சுமார் 12 வருடங்கள் முன்பு வாங்கப்பட்ட இந்த பென்ஸ் கார் சிஎன்ஜி தொகுப்பு பொருத்தப்பட்டதற்கு பிறகு இதுவரையில் சுமார் 3,000கிமீ தூரம் இயங்கிவிட்டதாக உரிமையாளர் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

தனது பென்ஸ் காரின் மைலேஜை அதிகரிக்க இளைஞரின் வித்தியாசமான யோசனை!! என்ன செஞ்சிருக்காருனு பாருங்க...

காரின் பின்பக்க சேமிப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிஎன்ஜி வாயு சிலிண்டர் மட்டுமின்றி காருக்கு அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிஎன்ஜி தொகுப்பையும் இந்த வீடியோவில் தெளிவாக காட்டியுள்ளனர்.

தனது பென்ஸ் காரின் மைலேஜை அதிகரிக்க இளைஞரின் வித்தியாசமான யோசனை!! என்ன செஞ்சிருக்காருனு பாருங்க...

மேலும், காரின் பொனெட்டிற்கு அடியில் பொருத்தப்பட்டுள்ள சிஎன்ஜி தொகுப்பிற்கான சான்றிதழ் தகடை காட்டி அருகில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு சென்று காரில் எரிவாயு நிரப்பப்படுவதும் இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

தனது பென்ஸ் காரின் மைலேஜை அதிகரிக்க இளைஞரின் வித்தியாசமான யோசனை!! என்ன செஞ்சிருக்காருனு பாருங்க...

ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கொண்ட இந்த சி-கிளாஸ் கார் 12 வருடங்கள் பழமையான போதிலும், வழங்கப்பட்டுள்ள அத்தனை தொழிற்நுட்பங்களும் மிக சிறப்பாகவே இப்போதும் செயல்படுகின்றன. இவ்வாறான லக்சரி கார்களில் சிஎன்ஜி தொகுப்பு பொருத்தப்பட்டால் சில பாகங்களின் செயல்பாடு சீர்க்குலையும் என்ற கருத்து உள்ளது.

தனது பென்ஸ் காரின் மைலேஜை அதிகரிக்க இளைஞரின் வித்தியாசமான யோசனை!! என்ன செஞ்சிருக்காருனு பாருங்க...

ஆனால் இந்த காரில் அவ்வாறான எந்த பிரச்சனையும் இல்லை என காரின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். எரிவாயு, என்ஜின் அமைப்பிற்கு செல்லும்போது மட்டும் சிறிது சத்தம் வெளிப்படுகிறது. மற்றப்படி வேறெந்த வித்தியாசமும் தெரியவில்லை.

தனது பென்ஸ் காரின் மைலேஜை அதிகரிக்க இளைஞரின் வித்தியாசமான யோசனை!! என்ன செஞ்சிருக்காருனு பாருங்க...

நகர்புற பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றதாக விளங்குவதாக இந்த சி-கிளாஸ் சிஎன்ஜி காரை புகழ்ந்து தள்ளியுள்ள காரின் உரிமையாளர் எரிபொருள் செலவை பற்றி பயப்படவே தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.

தனது பென்ஸ் காரின் மைலேஜை அதிகரிக்க இளைஞரின் வித்தியாசமான யோசனை!! என்ன செஞ்சிருக்காருனு பாருங்க...

தேவைக்கு ஏற்றாற்போல் பெட்ரோல் அல்லது சிஎன்ஜி மோடிற்கு காரை மாற்றி கொள்ள பொத்தான் ஒன்று ஸ்டேரிங் சக்கரத்திற்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோல், கார்களில் புதியதாக சிஎன்ஜி தொகுப்பை சேர்க்கிறீர்கள் என்றால், அந்த தொகுப்பு ஆர்டிஒ-வால் சான்றழிக்கப்பட்டதாக என்பதை ஒருமுறை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

Most Read Articles
English summary
Running a Mercedes Benz C-Class supercharged sedan on CNG, What does it run like. Read In Tamil.
Story first published: Saturday, April 10, 2021, 2:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X