குறைக்கடத்தி பற்றாக்குறையில் இருந்து, மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பும் மாருதி சுஸுகி!! விற்பனை அதிகரிக்குமா?

குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை உலகம் முழுவதும் தலை விரித்தாடுகிறது. இதற்கு இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மட்டுமின்றி உலகளவிலான ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக மாருதி சுஸுகி மட்டும் என்ன விதிவிலக்கா!

குறைக்கடத்தி பற்றாக்குறையில் இருந்து, மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பும் மாருதி சுஸுகி!! விற்பனை அதிகரிக்குமா?

கடந்த சில மாதங்களாக இந்திய ஆட்டோமொபைல் துறையில் இத்தகைய சூழ்நிலை தான் நிலவி வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் தொழிற்சாலைகளில் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவில் தயாரிப்பு பணிகளை குறைத்து இருந்தது. ஆனால் தற்போது குறைக்கடத்திகளுக்கான தேவை மெல்ல மெல்ல சீரடைந்து வருகிறது.

குறைக்கடத்தி பற்றாக்குறையில் இருந்து, மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பும் மாருதி சுஸுகி!! விற்பனை அதிகரிக்குமா?

இதன் விளைவாக அதிகரிக்கப்பட்ட கார்களை முன்பதிவு செய்து காத்திருப்பதற்கான கால அளவு சிறிதாக சிறிதாக குறைக்கப்பட்டு வருகிறது. குறைக்கடத்திகளுக்கான உலகளாவிய தேவை எதன் காரணமாக உருவாகியது என்பது நம்மில் பெரும்பாலானோர்க்கு தெரிந்ததே, கொரோனா வைரஸ் பரவலினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளினால்.

குறைக்கடத்தி பற்றாக்குறையில் இருந்து, மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பும் மாருதி சுஸுகி!! விற்பனை அதிகரிக்குமா?

குறைக்கடத்திகள் பெரும்பான்மையாக கார்களில் பொருத்தப்படும் எலக்ட்ரானிக் தொழிற்நுட்பங்களை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. குறைக்கடத்திகளை பயன்படுத்தியே சென்சார்கள் மற்றும் கண்ட்ரோல்கள் தற்போதைய மாடர்ன் வாகனங்களில் வழங்கப்படுகின்றன. அத்துடன் நமது அன்றாட பயன்பாட்டு பொருட்களான செல்போன்கள் மற்றும் மடிக்கணினி போன்றவற்றை உருவாக்குவதற்கும் அதிகளவில் குறைக்கடத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.

குறைக்கடத்தி பற்றாக்குறையில் இருந்து, மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பும் மாருதி சுஸுகி!! விற்பனை அதிகரிக்குமா?

செல்போன்கள் & மடிக்கணிணிகள் கொரோனா பரவலுக்கு பின் மிக அதிகளவில் விற்பனையாகி வருவதாக விற்பனை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதுவும் ஆட்டோமொபைல் துறையில் குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை அதிகரிப்பதற்கு ஒரு வகையில் காரணமாகும். இருப்பினும் ஏற்கனவே கூறியதுதான், ஊரடங்குகளில் ஏகப்பட்ட தளர்வுகள் கொண்டுவரப்பட்டுவிட்டதால், குறைக்கடத்திகளுக்கான தேவை வெகுவாக குறைந்து வருகிறது.

குறைக்கடத்தி பற்றாக்குறையில் இருந்து, மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பும் மாருதி சுஸுகி!! விற்பனை அதிகரிக்குமா?

இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தாவா பேசுகையில், கடந்த சில மாதங்களாக குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை பெரியதாக உள்ளது. ஆனால் இந்த நிலைமை மாறும் விதமாகவே விளங்குகிறது. செப்டம்பரில் 40 சதவீதமாகவும், அக்டோபரில் 60 சதவீதமாகவும் இருந்த எங்களது உள்நாட்டு உற்பத்தி இந்த நவம்பர் மாதத்தில் 85 சதவீதமாக இருக்கும் என்றார்.

குறைக்கடத்தி பற்றாக்குறையில் இருந்து, மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பும் மாருதி சுஸுகி!! விற்பனை அதிகரிக்குமா?

மேலும் குறைக்கடத்திகளுக்கான தேவை ஒட்டுமொத்த இந்திய ஆட்டோமொபைல் துறைக்கும் உள்ளதாகவும் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தாவா தெரிவித்துள்ளார். மாருதி சுஸுகி நிறுவனம் 2021 அக்டோபரில் 1,34,779 யூனிட் கார்களை தயாரித்துள்ளது. இது 2020 அக்டோபரில் தயாரிக்கப்பட்ட மாருதி சுஸுகி கார்களை 26 சதவீதம் குறைவாகும்.

குறைக்கடத்தி பற்றாக்குறையில் இருந்து, மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பும் மாருதி சுஸுகி!! விற்பனை அதிகரிக்குமா?

எதிர்கால திட்டங்கள் குறித்து ஸ்ரீவஸ்தா பேசுகையில், தற்சமயம் இந்த இந்திய- ஜப்பானிய நிறுவனம் நெகிழ்வு-எரிபொருள் என்ஜின் மற்றும் மற்ற பவர்ட்ரெயின் தேர்வுகளை (எலக்ட்ரிக்) பற்றி கற்றுக்கொண்டு வருவதாக கூறியுள்ளார். மாருதி சுஸுகி நிறுவனத்தில் கடைசியாக முற்றிலும் புதிய தோற்றத்தில் செலிரியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறைக்கடத்தி பற்றாக்குறையில் இருந்து, மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பும் மாருதி சுஸுகி!! விற்பனை அதிகரிக்குமா?

புதிய ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய மாருதி செலிரியோ கார் முன்பை காட்டிலும் விசாலமானதாக எடை குறைவானதாக மற்றும் விரைப்பானதாக கொண்டுவரப்பட்டுள்ளதாக மாருதி சுஸுகி தெரிவிக்கிறது. இந்தியாவில் அதிக மைலேஜ் வழங்கக்கூடிய பெட்ரோல் காராக கொண்டுவரப்பட்டுள்ள புதிய செலிரியோ 26.68kmpl மைலேஜை வழங்கக்கூடியதாக ARAI சான்றிதழை பெற்றுள்ளது.

குறைக்கடத்தி பற்றாக்குறையில் இருந்து, மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பும் மாருதி சுஸுகி!! விற்பனை அதிகரிக்குமா?

புதிய செலிரியோவில் சுஸுகியின் புதிய கே10சி வரிசை பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 67 பிஎச்பி மற்றும் 89 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. அத்துடன் புதிய செலிரியோவில் சிறந்த எரிபொருள் திறனுக்காக ஐடியல் ஸ்டார்ட் ஸ்டாப் அமைப்பும் வழங்கப்படுகிறது.

குறைக்கடத்தி பற்றாக்குறையில் இருந்து, மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பும் மாருதி சுஸுகி!! விற்பனை அதிகரிக்குமா?

புதிய செலிரியோ மட்டுமின்றி இந்திய சந்தைக்கான ஏகப்பட்ட புதிய மாடல்களின் வடிவமைப்பிலும் மாருதி சுஸுகி நிறுவனம் தற்சமயம் ஈடுப்பட்டு வருகிறது. இந்த வகையில் அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா காம்பெக்ட் எஸ்யூவி கார் சமீபத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தது.

குறைக்கடத்தி பற்றாக்குறையில் இருந்து, மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பும் மாருதி சுஸுகி!! விற்பனை அதிகரிக்குமா?

அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனம் அதன் பிரீமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோ மற்றும் ப்ரீமியம் எம்பிவி எக்ஸ்.எல்6 மாடல்களுக்கும் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஹேட்ச்பேக் & எம்பிவி கார்களும் சமீப மாதங்களாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை இரண்டின் அறிமுகத்தையும் அடுத்த ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

English summary
Semiconductor chips slowly improved, Maruti Suzuki increase it production.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X