Just In
- 3 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 3 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யார் ஜெய்ப்பது என்ற போட்டி... மற்றொரு வீரருடன் ரேஸில் ஈடுப்பட்டு விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்
நம்மில் பெரும்பான்மையானர்களுக்கு தெரிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் மோசமான விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் சோயிப் மாலிக் இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டவர். இதனால் நம் நாட்டிலும் இவர் பிரபலமானார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் பங்கேற்றுவரும் சோயிப் மாலிக் அந்த கிரிக்கெட் போட்டி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஹோட்டல் திரும்பிய போது மோசமான விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார்.

லாகூர் பகுதியில் நடந்துள்ள இந்த விபத்தில் மாலிக்கின் விலை மதிப்புமிக்க காரின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்துள்ளது. லாகூரில் லோக்கல் உண விடுதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரக்கின் மீது சோயிப் மாலிக்கின் கார் மோதியுள்ளது.

இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் ஊடகங்களில், சோயிக் மாலிக் தனது எக்ஸ்பென்ஷிவ் காருடன் மற்றொரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான வாகப் ரியாஸின் காரை முந்த முயன்றுள்ளார். அப்போது மாலிக்கின் கார் முழுவதுமாக கண்ட்ரோலை இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த விபத்தில் சோயிப் மாலிக்கிற்கு பெரிய அளவில் எந்த காயமும் ஏற்படவில்லை என அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே வேகமாக பரவியதை அடுத்து, தனது நிலை குறித்து சோயிக் மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், தான் நாலமாக உள்ளதாகவும், எனக்காக வருத்தப்பட்ட ஒவ்வொரு நல் உள்ளத்திற்கும் நன்றி என தெரிவித்துள்ளார். 38 வயதான சோயிப் மாலிக் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து கடந்த 2019ல் ஓய்வு பெற்றார். தற்போதைக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்றுவரும் ப்ரீமியர் போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டு வருகிறார்.