குஷாக்கிற்கு குவியும் புக்கிங்!! விற்பனையில் 281% வளர்ச்சியை பதிவு செய்தது ஸ்கோடா!

ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் அதன் குஷாக் எஸ்யூவி மாடலின் உதவியால் கணிசமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இதனை வெளிக்காட்டும் வகையிலான ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் கடந்த 2021 ஆகஸ்ட் மாத விற்பனை எண்ணிக்கை குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

குஷாக்கிற்கு குவியும் புக்கிங்!! விற்பனையில் 281% வளர்ச்சியை பதிவு செய்தது ஸ்கோடா!

செக் குடியரசு நாட்டை சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 3,829 பயணிகள் கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை ஸ்கோடா பிராண்டை பொறுத்தவரையில் அதிகமாகும்.

குஷாக்கிற்கு குவியும் புக்கிங்!! விற்பனையில் 281% வளர்ச்சியை பதிவு செய்தது ஸ்கோடா!

அதிலும் கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், 3,829 என்ற கடந்த மாத விற்பனை எண்ணிக்கை சுமார் 281.75% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 1,003 ஸ்கோடா கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதேபோல் இந்திய சந்தையில் மொத்த பயணிகள் கார்கள் விற்பனையில் ஸ்கோடாவின் பங்கும் கடந்த மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது.

குஷாக்கிற்கு குவியும் புக்கிங்!! விற்பனையில் 281% வளர்ச்சியை பதிவு செய்தது ஸ்கோடா!

அதாவது ஸ்கோடாவின் 3,829 என்ற எண்ணிக்கை, கடந்த மாதத்தில் நம் நாட்டு சந்தையில் மொத்தமாக விற்பனையான பயணிகள் கார்களின் எண்ணிக்கையில் 1.5 சதவீதமாகும். அதுவே 2020 ஆகஸ்ட்டின் 1,003 யூனிட் ஸ்கோடா கார்களின் விற்பனை, மொத்த விற்பனையில் வெறும் 0.4 சதவீதமாகவே இருந்தது.

குஷாக்கிற்கு குவியும் புக்கிங்!! விற்பனையில் 281% வளர்ச்சியை பதிவு செய்தது ஸ்கோடா!

இந்தியாவில் ஸ்கோடாவின் விற்பனை இந்த அளவிற்கு முன்னேறி இருப்பதற்கு கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குஷாக் (Kushaq) எஸ்யூவி மாடலின் பங்கு முக்கியமானதாக விளங்குகிறது. ஏனெனில் இதன் அறிமுகத்திற்கு பிறகே ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் மாத விற்பனை எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடக்க துவங்கியது.

குஷாக்கிற்கு குவியும் புக்கிங்!! விற்பனையில் 281% வளர்ச்சியை பதிவு செய்தது ஸ்கோடா!

கடந்த 2021 ஜூலை மாதத்தில் 3,080 ஸ்கோடா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனை காட்டிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஸ்கோடா கார்களின் விற்பனை 24.32% அதிகரித்துள்ளது. இந்த முன்னேற்றத்திற்கும் காரணம் உள்ளது. அதாவது ஜூன் மாதத்தில் இரு விதமான என்ஜின் தேர்வுகளில் குஷாக் அறிமுகப்படுத்தப்பட்டது.

குஷாக்கிற்கு குவியும் புக்கிங்!! விற்பனையில் 281% வளர்ச்சியை பதிவு செய்தது ஸ்கோடா!

ஆனால் அதில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் உடனான குஷாக் வேரியண்ட்கள் மட்டுமே அப்போதில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யும் பணிகள் துவங்கின. பெரிய அளவிலான 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் உடனான குஷாக்கின் டாப் வேரியண்ட்கள் ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே டெலிவிரி செய்யப்படும் என அப்போதே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

குஷாக்கிற்கு குவியும் புக்கிங்!! விற்பனையில் 281% வளர்ச்சியை பதிவு செய்தது ஸ்கோடா!

அதன்படி கடந்த மாத மத்தியில் இருந்து 1.5 லி ஸ்கோடா கார்களின் டெலிவிரிகள் துவங்கின. இதனால் தான் இந்த 24.32% வளர்ச்சி ஆகும். நடுத்தர-அளவு எஸ்யூவி கார் பிரிவில் நிலைநிறுத்தப்படும் குஷாக்கில் வழங்கப்படும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 115 பிஎஸ் மற்றும் 178 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

குஷாக்கிற்கு குவியும் புக்கிங்!! விற்பனையில் 281% வளர்ச்சியை பதிவு செய்தது ஸ்கோடா!

குஷாக்கின் மலிவான வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த என்ஜின் உடன் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன. இரண்டாவது என்ஜின் தேர்வான 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் 150 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் திறன் வரையில் காருக்கு வழங்கக்கூடியது.

குஷாக்கிற்கு குவியும் புக்கிங்!! விற்பனையில் 281% வளர்ச்சியை பதிவு செய்தது ஸ்கோடா!

இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷனை பெறலாம். கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட குஷாக் கார்களின் எண்ணிக்கை இன்னும் நமக்கு கிடைக்க பெறவில்லை. நமக்கு இதுவரையில் கிடைத்துள்ள தகவல்களில், மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 70% குஷாக் மாடலுடையதாக இருக்கும் என கூறப்படுகிறது.

குஷாக்கிற்கு குவியும் புக்கிங்!! விற்பனையில் 281% வளர்ச்சியை பதிவு செய்தது ஸ்கோடா!

இதனால் குறைந்தது 2,700 குஷாக் கார்களாவது கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டிருக்கும். இந்தியாவில் தற்சமயம் ஆக்டேவியா, குஷாக், ராபிட் மற்றும் சூப்பர்ப் என்ற 4 கார் மாடல்கள் ஸ்கோடா பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டு கொண்டிருகின்றன. ஆனால் இதில் குஷாக்கின் மேலும் மெருக்கேற்றவே தயாரிப்பு நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.

குஷாக்கிற்கு குவியும் புக்கிங்!! விற்பனையில் 281% வளர்ச்சியை பதிவு செய்தது ஸ்கோடா!

இந்த வகையில் ஆற்றல்மிக்க 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் தேர்வை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் தேர்வில் குஷாக்கின் மத்திய வேரியண்ட்டான அம்பிஷனிலும் கொண்டுவர ஸ்கோடா தயாராகி வருவதாக சமீபத்தில் ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகின. இந்த என்ஜின் தேர்வு தற்போதைக்கு டாப் ‘ஸ்டைல்' வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.

குஷாக்கிற்கு குவியும் புக்கிங்!! விற்பனையில் 281% வளர்ச்சியை பதிவு செய்தது ஸ்கோடா!

அதேநேரம் இந்திய சந்தைக்கான புதிய செடான் காரின் தயாரிப்பு பணிகளிலும் ஸ்கோடா ஈடுப்பட்டு வருகிறது. தற்போதைய ரேபிட் செடான் மாடலுக்கு மாற்றாக கொண்டுவரப்படும் புதிய மாடல், ரேபிட்-ஐ காட்டிலும் அளவில் பெரியதாக, கூடுதல் காஸ்ட்லீயான தோற்றத்தில் காட்சியளிக்கவுள்ளது. இதன் சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம் இந்த விபரங்களை அறிந்திருந்தோம்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Auto registers 282% increase in August sales.
Story first published: Thursday, September 2, 2021, 22:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X